வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கும் சுதந்திரமாக நடமாடுவதற்கு இடமளிக்கும் வகையில் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அடையாள அட்டை வழங்கிய பின்னர் அவர்களுக்கு சுதந்திரமாக நடமாடவும், உறவினர்கள் வீடுகளில் சென்று தங்கவும் வாய்ப்பு ஏற்படும் என இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,
ஐ.நா. வின் மனித உரிமைகள் ஆணையக பிரதிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் அரசுக்கு வழங்கியிருந்த பரிந்துரைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. வன்னியில் இருந்து வரும் மக்களை சுதந்திரமாக நடமாடுவதற்கு இடமளிக்குமாறும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் சகல மக்களையும் பதிவு செய்து அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படும்.
சுனாமி அனர்த்தத்தின் பின்னர் மக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டவாறு இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கும் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அடையாள அட்டை வழங்கப்பட்ட பின்னர் அந்த மக்களுக்கு தடையின்றி சுதந்திரமாக நடமாட வாய்ப்பு ஏற்படும். பாதுகாப்புக் காரணங்களினாலேயே இடம்பெயர்ந்த மக்களை சுதந்திரமாக செல்ல அனுமதிக்க முடியாதுள்ளது.
இதேவேளை ஜோன் ஹோம்ஸின் பரிந்துரைகளின் பிரகாரம் நிவாரணக் கிராமங்களை கவனிக்கும் பொறுப்பு மீள்குடியேற்ற அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அரச அதிபரின் பங்களிப்புடன் இராணுவமே முகாம்களை கவனித்து வந்தது என்றார்.
இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களில் ஆதரவற்ற வயோதிபர்களை மன்னாரில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அகமட்
எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட மக்களின் சுதந்திரமான செயற்பாடுகள் அனுமதிக்கப்பட்டால் சரி.
அவ்வாறான நடைமுறையை முழுமையாக குறை கூற முடியாது காரணம் புலிகள் மிகவும் கொடியவர்களாக தங்களை இதற்கு முன்னுள்ள காலங்களின் இனம் காட்டியுள்ளனர். அரசு நாட்டின் பாதுகாப்பு என்று சிந்திப்பதில் தப்பில்லை. புலிகள் அடையாள அட்டை, பாஸ் என நடைமுறைப்படுத்தும் போது அரசு தேசிய பாதுகாப்பை பேனவே வேண்டும்.
thamilan
சுதந்திரமாக நடமாட அடையாள அட்டை வழங்குவது சரி புலிகளின் பிடியிலிருந்து 99 வீதமான பிரதேசங்களை விடுவித்து 50000க்கும் மேற்பட்ட மக்களை மீட்டுவிட்டதாகவும் மார்தட்டுகிறீர்களே முதலில் புலிகள் கேட்டுக்கொண்டதுபோல் அவர்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற அனுமதியுங்களேன். அப்படியாயின் உங்களுக்கு விசேட அடையாள அட்டை அடித்து வளங்குவதற்கான தேவையற்ற செலவும் சிரமமும் மிச்சமாகும் அத்துடன் நீங்கள் ஆழமாக நேசிக்கும்!? மக்களின் சிரமங்களும் நீங்கி சந்தோசமாக வாழ்வார்கள் தானே. ஏன் இருப்பதை விட்டு பறப்பதை பற்றி கதைக்கிறிங்க
பல்லி
அந்த காலத்தில் மாட்டுக்கு குறி (அடையாளம்) சுட்டார்கள். இன்று மனிதனுக்கு ……..அன்று மாட்டுக்கு குறி வைத்தது முட்டாள்தனமா?? அல்லது
இன்று மனிதனை அடையாள படுத்துவது புத்திசாலிதனமா?? அப்ப புலிகள் கொடுத்த வன்னி அடையாள மட்டையை என்ன செய்வது. இரண்டையும் வைத்திருக்கலாமா?? (புலம் பெயர் குடி உரிமையும்: இலங்கை குடி உரிமையும்) புலம் பெயர் தமிழர் வைத்திருப்பது போல்.
பார்த்திபன்
தமிழன்; நீங்க வடிவேலுவை மிஞ்சி காமெடியெல்லாம் பண்ணுகின்றீர்கள். தமது பாதுகாப்பிற்காக மக்களை கேடயமாக்கி, அவர்களின் சொந்த இடங்களிலிருந்து கடத்திக் கொண்டு போன புலிகள், இன்று புலிகளிடமிருந்து தப்பி வந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற அனுமதிக்குமாறு கூறுவது உங்களுக்கே வேடிக்கையாக இல்லை. அப்படிக் குடியேற்றினால்த் தானே புலிகளால் அம்மக்களை மீண்டும் கடத்திச் செல்ல உதவியாகயிருக்கும் என்று எண்ணுகின்றீர்கள் போலும்.