யாழ்ப்பாணம் சிங்கள மகா வித்தியாலயப் பாடசாலை கட்டடம் முழுமையாக இராணுவத்திற்கு கைமாற்றப்படுகின்றது.
யாழ்ப்பாணம் கல்வி வலயத்தின் கீழ் உள்ள சிங்கள மகா வித்தியாலயம் நீண்ட காலம் இயங்காத நிலையில் இருக்கிறது.
இருந்தபோதும், 1995 ஆம் ஆண்டிற்கு பின்பு படையினர் யாழ். குடாநாட்டை கைப்பற்றியது முதல் இராணுவத்தின் 512ஆவது பிரிகேட் படை முகாமாக செயற்பட்டு வருகின்றது.
இவ்வாறு முகாமாக இயங்கும் பாடசாலைக் கட்டடத்தை பாதுகாப்பு அமைச்சு இராணுவத்தினரிற்கே நிரந்தரமாக கையளிக்குமாறு கோரியதன் பெயரில் சுற்றுலா மற்றும் காணி அமைச்சு இப் பாடசாலையை கையளிக்குமாறு மத்திய கல்வி அமைச்சை எழுத்தில் கோரியுள்ளது.