நேற்று இரவு மட்டக்களப்பில் “வார உரைகல்” பத்திரிகை ஆசிரியர் மீது தாக்குதல்

vaarauraika.jpgகாத்தான்குடி பிரதேசத்தில் டீன் வீதியில் இருந்து வெளிவரும் ‘வார உரைகல்’ வார இதழின் ஆசிரியர் புவி ரஹ்மத்துல்லா இனந்தெரியாத ஆயுதக்குழுவினரால் தாக்கப்பட்டுள்ளதுடன் அலுவலகமும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.  நேற்று புதன்கிழமை இரவு 10.30மணியளவில் இவரது வீட்டுக்கு முகத்தை மூடியநிலையில் வந்த ஆயுதக்குழுவினர் இவர் மீது சரமாரியான தாக்குதலை நடத்தியுள்ளனர். அத்துடன் அவரது வீட்டுடன் இணைந்ததாகவுள்ள அலுவலகத்துக்குள்ளும் நுழைந்த ஆயுதக்குழுவினர் அங்கிருந்த கணணி உட்பட அலுவலக ஆவணங்களை தீயிட்டு கொளுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • GNANI
    GNANI

    as a journalist society we strongly condemn this inhuman act,we are no longer tollerate this behaviour anymore.no apology for this evil people.

    Reply
  • மலைமகன்
    மலைமகன்

    வார உரைகள் பத்திரிக்கையின் ஆசிரியர் M.I ரஃமதுல்லா நேற்றிரவு F.L.A மாவத்தை புதிய காத்தான்குடியிலுள்ள தனது அலுவலகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் இனந்தெரியாதோரால் கடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளார். தாக்கப்பட்ட வார உரைகள் ஆசரியர் தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். இத்தாக்குதலைக் கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட அனைத்து ஊடகவியளார்களும் இன்று 04.30 மணியளவில் காத்தான்குடி நகரில் மௌன விரதமொன்றை ஏற்ப்பாடு செய்துள்ளார்கள்.

    Reply