இலங் கைக்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்து வருவதாகவும் கடந்த வருடம் 880 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் இலங்ககைக்குக் கிடைத்துள்ளதாகவும் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக பெரேரா கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றுகாலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு முதலீட்டுச் சபைத் தலைவர் தொடர்ந்தும்; உரையாற்றுகையில்,
இலங்கையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதாகவும் அதனால் பெருந்தொகையானோர் வேலையிழந்திருப்பதாகவும் எதிர்க்கட்சியினர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை.
கடந்த 2008 ஜனவரி மாதம் முதல் 2009 மார்ச் மாதம் வரையில் இலங்கையில் 50 தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ஆனால் 93 புதிய தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. கடந்த வருடத்தில் 7000 பேருக்கு இத்தொழிச்சாலைகளில் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. இவ்வருடம் 10 ஆயிரம் பேருக்கான வெற்றிடம் உள்ளது. இதனை எமது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.