ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்க அமெரிக்க தீர்மானித்துள்ளது. இதனை ஐநா செயலாளர் பான்.கீ.மூன் வரவேற்றுள்ளார். அத்துடன் அமெரிக்காவுடன் வலுவான அடித்தளத்தை மனித உரிமை பேரவையில ஏற்படுத்த உள்ளது.
புஷ் நிர்வாகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இணைவதில்லை எனத் தீர்மானித்திருந்தது. உலகில் ஏனைய பகுதிகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்தாது, இஸ்ரேலில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மாத்திரம் விமர்சிக்கப்பட்டதால், புஷ் நிர்வாகம் அவ்வாறான தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தது.
இந்த நிலையில் மனித உரிமை பேரவையில் மறுசீரமைப்பை மேற்கொள்ளும் நடவடிக்கையில் உதவியளிக்க உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நியூசிலாந்து பேரவையில் இருந்து விலகிய பின்னர், குறிப்பிடதக்க மாற்றங்களை மேற்கொள்ள உள்ளதாகவும் அமெரிக்க குறிப்பிட்டுள்ளது.