பல நூறு சொற்களில் வரையப்படும் அரசியல் பிரச்சினையை ஒரு கேலிச் சித்திரத்தினூடாக மிக எளிமையாக வெளிப்படுத்திவிட முடியும். தமிழ் பத்திரிகைச் சூழலிலும் இக்கேலிச் சித்திரங்கள் இடம்பெற்றிருந்தாலும் அவை தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வளரவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டம் கருத்துச் சுதந்திரத்திற்கு எப்போதும் தடையாய் இருந்ததால் அத்துறை வளர்ச்சியடையவும் இல்லை.
இவற்றின் பின்னணியில் தேசம்நெற் வாசகர் கிழக்கான் ஆதாம் கேலிச் சித்திரம் வரையும் தனது ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளார். அவரது முயற்சிக்கு தேசம்நெற் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. அத்துடன் அவரது கேலிச் சித்திரங்களை தேசம்நெற் இல் பிரசுரிக்கவும் உள்ளோம். தேசம்நெற் வாசகர்கள் அக்கேலிச் சித்திரங்கள் பேசும் அரசியலையும் அக் கேலிச் சித்திரங்கள் பற்றிய தமது கருத்துக்களையும் பதிவிடும்படி கேட்டுக் கொள்கிறோம்.
ஒரு சிலருக்கே கை வரப்பெற்றுள்ள இக்கலைவடிவம் கிழக்கான் ஆதாமுக்கு அமையப்பெற்றுள்ளது. இதனை அவர் மேலும் வளர்த்துக்கொள்ள தேசம்நெற் வாசகர்களும் தங்கள் கருத்துப் பங்களிப்பை வழங்குவார்கள் என்று நம்புகிறோம்.
தேசம்நெற்.
கிழக்கான் ஆதாம்
RowBoy
உங்கள் ஆக்கம் எமக்கு ஜனநாயகம் மீண்டும் எழும் எழுத்துச் சுதந்திரம் வரும் என்ற நம்பிக்கைளய தருகிறது.
தொடர்ந்தும் வரையுங்கள் தேசம் நெற்றில் பதிவிடுங்கள்
பல்லி
பல்லியின் பாராட்டுக்கள் இப்போது. சித்திரம் தொடரட்டும். அது ஆக்கபூர்வமாக இருக்கட்டும். பாராட்டு மட்டுமல்ல விமர்சனமும் கிடைக்கும் தங்கள் வளர்ச்சிக்கு.
BC
நிச்சயமாக கேலிச் சித்திரத்தினூடாக தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
கிழக்கான் ஆதாமுக்கு வாழ்த்துக்கள்.
ramanathan
இது வீரகேசரி கே பி யினுடைய காட்டூன் பிளஸ் லங்கா தீப சிங்கள பத்திரிகையின் காட்டூன் இரண்டையும் இணைத்து போட்டோ சொப்பில் வேலை பார்த்திருப்பது மட்டும்தான் கிழக்கான் ஆதாம். ஆகவே மூல காட்டூனை மறைத்தது தன்னுடையது என்று சொன்னது திருட்டு. தனது பெயரை போட்டது இன்னுமொரு திருட்டு. கிழக்கான் சொந்தமாக மட்டும் செய்யும் போது உங்கள் பெயர் போடலாம் கட் அன்ட் பேஸ்ட்டுக்கெல்லாம் பெயர் போடக் கூடாது அது தர்மத்துக்கு ஆகாது.
ராமநாதன் ஜேர்மனி வூப்பெட்டால்
ஜெயராஜ்
அன்பின் ராமநாதன்,
நானும் நீங்கள் சொன்ன காட்டூன்கனின் தழுவல்களைப் பார்க்கிறேன். ஆனால் ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள் நமது சமூகத்தில் ஆரோக்கியமான படைப்பாளிகள் மிகக் குறைவு இது கிழக்கான் ஆதாமின் முதல் முயற்சியாக கூட இருக்கலாம் இல்லையா, பாராட்டுங்கள் அந்த விதை மரமாகட்டும் ஆரோக்கியமான சில படைப்பாளிகளாவது நமது சமூகத்திற்கு கிடைக்கட்டும்.
எனது மனமார்ந்த பாராட்டுக்கள் ஆதாமுக்கு உங்கள் ஆக்கம்களில் கானப்படும் குறைகளை நிவர்த்தி செய்து முன்னெருங்கள் ஆதரவிற்கு நாங்கள் உண்டு. நன்றி
Aboobaker-Australiya
வணக்கம் நண்பர்களுக்கு,
கிழக்கான் ஆதமின் காட்டூன்களில் ஏற்கனவே தினசரிகளில் வெளிவந்த காட்டூன்களின் சாயல் அப்படியே உண்டு மறுப்பதற்கு இல்லை. என்றாலும் அவரின் முயற்சிதான் பாராட்டுக்குரியது. நமது சமூகத்தில் மிகவும் அருகிவரும் இக் கலையை அவரும் செய்ய முயற்சித்து தன் கருத்தை மிகவும் சுஸகமாக சொல்லியுள்ளார். இவரின் அதிகமான கட்டுரைகளும் இணைய செய்தி தளங்களில் காணப்படுகின்றன. சகல இணையத் தளங்களிலும் இவரது கட்டுரைகள் பஞ்சமில்லாமல் வெளியிடுகின்றன. இந்த இளம் படைப்பாளியை இவர் பாடசாலை காலங்களில் எனக்குத் தெரியும் எனது தம்பியுடன் படித்தவர். தற்போது கூட வயது 30க்கு உள்ளாதான் இருக்கும். பல ஆண்டுகளாக ஊரில் இல்லை எங்கே என்று அவனைத் தெரியவில்லை என்று தம்பி சொன்னான்.
நமது சமூகத்தி்ல் ஆசிரியரின் பிள்ளைக்கு பாடசாலையில் முதலிடம் வழங்கப் படுவதும் அரசியல் வாதிகளின் சொந்தக் காரர்கள் கெளரவமான வேலைகளில் அமர்தப்படுவதும் பத்திரிகைகாரர்களின் பிள்ளைகள் பத்திரிகைகாரா்கள் ஆக்கப்படுவதாலும் இந்த இளம் கன்று எங்கோ தனக்கு தோதான நாட்டுக்கு சென்று தனது சமூக பங்களிப்பைச் செய்கிறது. திறமையானவர்கள் நமது சமூகம் ஊக்குவிப்பதில்லையே!.
இவரது எழுத்துக்களாயினும் கேலித் சித்திரமாயினும் முதிர்சியைவிட அவரது ஆர்வமே அதில் தெரிகிறது படித்துமுடித்ததும் எங்கோ சென்று ஒரு தேசத்தில் மறைந்து கொண்டு சாதாரண இளைஞனாக வாழ்கையை அனுபவிக்காமல் சமூகத்தைப் பற்றி சிந்திக்கும் இந்த சிறிய படைப்பாளியை ஆதரியுங்கள். இவரது இயற்பெயர் இதுவல்ல என்றாலும் இவர் பாடசாலை காலங்களில் இப் பெயரிலேயே கையெழுத்துப் பத்திரிகை வெளியிட்டவர் என்பதால் இவரை அடயாளம் காண எனக்கு முடிந்தது.
அச்சம் வேண்டாம் தமிழ் சமூதாயம் உன்னை வாழ்த்தும் தொடர்ந்து எழுது ஆக்கம்கள் படை நாளை உன்னை ஒரு படைப்பாளியாக பார்ப்பதில் எங்கள் தமிழினம் பெருமை கொள்ளும்.
நன்றி
அபூபக்கர் நானா.
Paramesh K
நாம் சமூகத்தில் உள்ள கேவலம்தான் இது மற்றவர்களின் திறமைகளை மதித்து ஊக்குவித்து அவர்களை வளர்ச்சி அடையச் செய்யாமல் அப்படியே முடக்கிவிடுவது.
உலகில் உள்ள சகல படைப்பாளிகளும் முன்னையவரை தழூவியே படைப்புக்கள் செய்து வளர்ச்சி பெற்று தங்களை நிலை நிறுத்தியுள்ளனர். அதற்கு ஆதாமும் விதிவிலக்கல்ல. நான் என் அப்பா மாதிரியாம் என் தங்கை எனது பாட்டி மாதிரியாம், அப்படியானால் யார்தான் சுயமானவர்கள் இவ்வுலகில்.
பாராட்டுக்கள் ஆதாம் நீங்கள் தொடர்ந்து பயணியுங்கள் நாங்கள் ஆதரவளிக்கிறோம் மிக இளவயதுக்காரரா நீங்கள்? உங்கள் கட்டுரைகளை படித்தபோது ஏதோ பழைய அரசியல் வாதியோ என நினைத்தேன். வாழ்துக்கள் உங்கள் காட்டூன் தழுவல் என்றாலும் மிகவும் நல்ல கருத்தையும் ஒர் உண்மையையும் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
பரமேஸ்-பிரான்ஸ்.
azhar
கிழக்கான் ஆதமின் இந்த விசித்திரமான ஆற்றல் வரவேட்கத்தக்து இவ்வாற்றலை அவர் மேன்மேலும் வளர்த்துக் கொள்ள என் வாழ்த்துக்கள். இலங்கை இந்திய உறவை இது மிகவும் துல்லியமாக விளக்குகிறது.
indiani
நண்பர்களே மற்றவர்களின் ஆக்கங்களை பிரதி பண்ணும் போது அந்த ஆக்கத்தில் உள்ளவற்றில் 20 விகிதமானவற்றிக்கு உட்பட்டத நீங்கள் பிரதி பண்ணமுடியும் அந்த பிரதி பண்ணும் விடயத்தை உங்கள் வசன நடையில் மீள பிரதி பண்ணுவது சட்டரீதியில் தவறாகாது அதைவிட நண்பர்களே அந்த விடயங்களை படித்து விட்டு அதை மெருகூட்டி அல்லது மேலும் விரிவு படுத்தி எழுதுவது அபிவிருத்தியாகும் இவற்றை கவனத்தில் எடுத்துக் கொள்ளவும்.
படங்களைப் பொறுத்தமட்டில் அதே ஜடியாக்களை நீங்கள் திரும்ப உங்கள் கைகளால் கீறினால் அல்லது கணணியில் திரும்பவும் உங்களால் உருவாக்கப்பட்டால் அது சட்டரீதியாக தவறு அல்ல அந்தப் படங்களை போட்டோ பிரதி பண்ணி அதில் மாற்றங்கள் செய்வது முழுமையாக தவிர்க்கப்பட வேண்டும் இது சட்டத்திற்கு முரணாணது.
படங்களை பார்து விட்டு அதிலுள்ள கருத்துக்களை விரிவு படுத்தியோ மேம்படுத்தியோ திரும்ப கீறுங்கள் உங்கள் ஆக்கத்திறனை மற்றவர்களின் படைப்பினை மேம்படுத்த பயன்படுத்துவது தவறல்ல.
நணபர்களே ஆக்கம் என்பது அல்லது புதிய படைப்பு என்பது என்றுமே கற்பனையில் வருவதல்ல எமது கற்பனை எனபதும் ஆக்கம் என்பதும் சமூகத்தில் உள்ள செயற்ப்பாடுகளில் இருந்தே பிறக்கிறது – ஒருவர் படைத்துள்ளார் என்றால் அரது படைப்பு சமூகத்தின் பிரதிபலிப்பே அதேபிரதிபலிப்பை நீங்களும் பிரதி பலிக்கலாம் ஆனால் சமூக நடைமுறைக்கு தவறாக போகாமல் மற்றவர்களுடைய படைப்பை மெருகூட்டி செய்வது ஒரு கரத்தின் வெளிப்பாட்டடை நீங்கள் இன்னொரு கருத்து நிலைக்கு எடுத்துச் செல்லும் செயற்பாடாகின் வரவேற்புடையதே.