தோழர் பரா நினைவு ஒன்றுகூடல் : த ஜெயபாலன்

Tholar_Para_05Apr09பணிதல் மறுத்தவர் தோழர் பரா என்ற தலைப்பில் நினைவு ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஏப்ரல் 5ல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள இந்நிகழ்வு லேய்டன்ஸ்ரோன் குவாக்கர்ஸ் ஹவுஸில் மாலை இரண்டு மணிமுதல் மாலை ஒன்பது மணிவரை நடைபெறவுள்ளது.

தோழர் பரா என அன்புடன் அறியப்படும் குமாரசாமி பரராஜசிங்கம் 2007 டிசம்பர் 16ல் உயிரிழந்தார். புலம் பெயர்ந்த நாடுகளில் இலக்கிய சந்திப்புகளின் முன்னோடியும் சிந்தனை சஞ்சிகையின் ஆசிரியரும் இடதுசாரி அரசியலாளருமான இவர் தனது மரணத்தின் பின்னும் பலரது நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

அவரது மரணத்தை அடுத்து பரிஸ் ‘அம்மா’ மனோ தேசம்நெற் இல் பதிவு செய்த அஞ்சலிக் குறிப்பில் தோழர் பராவை இவ்வாறு நினைவு கூறுகிறார் ”பொதுவாழ்விற்காக தன்வாழ்வின் பெரும்பகுதியை அர்ப்பணித்த ஒரு மென்மையான மனிதர். தனது கடைசிக்காலம் வரை தன்து சிந்தனையை நிறுத்தாது தொடர்ந்து வந்தவர். சகல ஜனநாயக போர்க்குரல்களிலும் ஆர்வ்த்தோடு உற்சாகமாய் கலந்து தனது பங்களிப்பை வழங்கி வந்தவர். பெறுமதி மிக்க ஒரு மனிதரின் இழப்பு கவலையைத் தருகிறது.”

தோழர் பராவின் மறைவைத் தொடர்ந்து தேசம்நெற்றில் பதிவு செய்யப்பட்ட ஆக்கங்களும் அஞ்சலிகளும் விமர்சனங்களும்:

தோழர் பரா என்ற சிந்தனையானுக்கு எங்கள் இறுதி மரியாதை! :சர்வதேச பிராந்தியங்களின் ஒன்றியம்

இரயாகரன் – அவரது புனைவுகளும் அவர் கட்டமைக்கும் விம்பமும் :த ஜெயபாலன்

ஓரு தலித்திற்கு வாழ்வு கொடுத்த ஆதிக்க சாதியின் உண்மைக்கதை :ஜீவமுரளி

வழமையான? அங்கீகரித்தல்? பெண் கொடுத்தல்? தாமதமாகச் சில குறிப்புகள் :சந்துஸ்

இலக்கிய சந்திப்பு – சில கிறுக்கல்கள் : துடைப்பான்

சுதந்திர சிந்தனையாளர்களை உள்ளடக்கிய சர்வதேச செயலூக்க அரங்கமொன்றை அமைப்பதற்கான சாத்தியப்பாட்டை நோக்கி : அசோக்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • chandran.raja
    chandran.raja

    தோழர் பரா தொழில்சங்கவாதி தொழிலாளர்களக்காக வாழ்தவர். புலம்பெயர்நாட்டில் தனது வாழ்இடத்தை தேடியபோதும் தனது கடமைமையை மறக்காது யாழ்பாண மண்னில்லிருந்து வந்த மக்களோடு கூடிவாழ்வதிலும் ஆலோசனை வழங்குவதிலும் அவர்கள் எடுத்த முயற்சிகளுக்கு அனுகூலாமாக நடந்து கொள்வதிலுமே தனது வாழ்நாளை கழித்தார்.அவர் இறக்கும் வரை புலிகளின் அடாவடித்தனங்களுக்கு அடிபணிய மறுத்தார் என்பதே இன்றும் அவர்வாழ்வையும் சேவையும் உயர்த்தி நிற்கிறது.

    Reply
  • பல்லி
    பல்லி

    தோழர் பரா தோழர் என்னும் சொல்லுக்கு பொருத்தமான ஒருவர் என்பது பல்லியின் கருத்து.(தோழரில் கூட பல விதம் உண்டு) மலையக மக்கள் பிரச்சனையை எதார்த்தமாக பேசியவர். பலகாலம் அவர்களுடன் வாழ்ந்தவர். அத்தனைக்கும் மேலாக வயதான காலத்திலும் தமிழருக்கு ஒரு விடிவு வராதா என புலம்பெயர் தமிழர் சேரும் இடம் எல்லாம் அவரது முகம் காணலாம். புலம் பெயர் இலக்கிய கூட்டங்களில் மிக முக்கியமானவர். பல்லியின் நண்பரும் கூட. அவரது நினைவை தேசத்தில் வழங்கியமைக்காக தேச நிர்வாகத்துக்கு பல்லியின் நன்றிகள்.

    Reply
  • Nackeera
    Nackeera

    இங்கே தான் தேசம் நிமிர்ந்து நிற்கிறது. ஏழை எழியவர்களை தம்மனங்களில் தாங்கி நின்றவர்களை எவன் தூக்கி நிறுத்தினானோ அவனே உலகில் உயர்ந்தவன். இதை தேசம் செய்திருக்கிறது. தேசத்துக்கு என் வாழ்த்துக்கள்

    Reply
  • indiani
    indiani

    புலம் பெயர் தமிழர் சமூகத்தில் தோழர் பரா என்றும் இடம்பிடித்துள்ளார் இவர் போன்ற உள்ளங்களின் வளர்ச்சி எந்த சமூகத்திற்கும் அத்தியாவசியமாது – சமூக சேவையாளர்கள் இவரின் தோழமையையில் வளர வேண்டும். இப்படியான சமூக சேவையாளனை நினைவு படுத்தும் நிகழ்ச்சி எம்எல்லோரையும், இப்படியான நிகழ்ச்சி நடத்துபவர்களையும் வளர்க்கட்டும்.

    Reply
  • Siva
    Siva

    Mr. Para uncle was always against terrorism, capitalist and fascist. However, after uncle passed away someone try to show him with many faces, but he wasn’t a perfect man (nobody). He never wanted to be rich or famous, people’s man. Para was loving father, uncle, friend for all

    Reply