புலிகள் மக்களை வெளியேற்ற மாட்டார்கள் : குமரன் பத்மநாதன் ஹோம்ஸிடம் தெரிவிப்பு

kp-jhooms.jpgதமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு விடுதலைப்புலிகள் மக்களை செல்ல விடமாட்டார்கள் என புலிகளின் ச‌ர்வதேச‌ பிரதிநிதி குமரன் பத்மநாதன் ஐ.நா. சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோ‌‌ம்ஸிடம் தெரிவித்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நோர்வேயின் அனுசரணையுடன் குமார் பத்மநாதன் ஜோன் ஹோம்ஸை சந்தித்து கலந்துரையாடியதாகவும் இதன் போது ஜோன் ஹோம்ஸ் முல்லைத்தீவில் மோதல் இடம்பெறும் பகுதிகளில் உள்ள மக்களை விடுவிக்குமாறு அவரிடம் கோரியதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சந்திப்பையடுத்து ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி எச்.எம்.ஜி.எஸ்.பாலிக்காரவை ஜோன் ஹோம்ஸ் சந்தித்து முல்லைத்தீவில் மோதல்களில் சிக்கியுள்ள மக்கள் தொடர்பான விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

4 Comments

 • பார்த்திபன்
  பார்த்திபன்

  உதை கே.பி என்ற கொள்ளைக்காரன் சொல்லியா தெரிய வேண்டும். அதுதான் ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த விடயமாயிற்றே. மக்களுக்குள் ஒளிந்திருந்து போரிடுவது தான் வீரமென நினைக்கும் கோழைகள் செய்வது.

  Reply
 • மாயா
  மாயா

  மிஞ்சுறவங்க மிஞ்சட்டும். அடுத்துவர்கள் செத்து தொலையட்டும். இது புலிகளை நம்பி வாழ்ந்தவர்களுக்காக எழுதப்பட்ட விதி. இராணுவம் மீட்க முடிந்தவர்களை நிச்சயம் மீட்கும். புலிகள் பூண்டோடு அழிவார்கள். புலத்து புலி வாலுகள் வாலறுந்து நிற்கும். அது தொலைவிலில்லை. இன்றும் பல புலிகளுடன் சார்ல்ஸ் படையணியின் அமிதாப் மற்றும் கோபி ஆகிய முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

  Reply
 • thurai
  thurai

  முன்பு ஒருகாலம் வன்னியில் மாடுகளைக் களவாகப் பிடித்து நிலத்தில் கிடங்குகளில் ஒழித்து வைப்பார்கள். பின்பு கொழும்பிற்கு இரவில் லொறிகளில் ஏற்ரி அனுப்பிவிடுவார்கள்.

  இப்போது புலிகள் தமிழ்மக்களை தடுத்து வைத்துள்ளார்கள். இவர்களை வைத்து புலத்தில் கப்பல் காட்டி பணம் கறக்கிறார்கள்.

  அன்று பொலிசார் கள்வரைப் பிடித்தனர். இன்று இராணுவம் புலிகளைப் பிடிக்க முயல்கின்றது.

  துரை

  Reply
 • GNANI
  GNANI

  MANY WHO CLAIM AS SRILANKAN ASYLUM NOT FROM SRILANKA FORTUNETLY THEY GRANTED ASYLUM AND BECAME CITIZEN OF EUROPE,BUT REFUGES FROM SRILANKA SEND BACK TO WAR ZONE. THE WORLD WE LIVING IS DIFFERENT.

  WHAT THEY ON ABOUT THEIR OWN BENEFIT, THEY PLAY GAMES,BEHIND THAT THIS HUMANITY ,AND ALL THAT COMES

  Reply