பாஜக தலைமையில் ஆட்சி அமைந்தால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும். ராமர் பாலத்தை பாதுகாப்போம், இடிக்க மாட்டோம். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வகை செய்யும் அரசியல் சட்டம் 370வது பிரிவை ரத்து செய்வோம் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாரதிய ஜனதாக் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று டெல்லியில் வெளியிடப்பட்டது. இதில் ராமர் கோவில் கட்டப்படும் என்பதை முக்கிய வாக்குறுதியாக பாஜக தெரிவித்துள்ளது. இதன் மூலம் தனது இந்துத்வா கொள்கைக்கு பாஜக புத்துயிர் கொடுத்துள்ளது.
மேலும் இன்று ராமர் நவமி என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினத்தில் ராமர் கோவில் கட்டப்படும், ராமர் பாலம் பாதுகாக்கப்படும் என பாஜக உறுதியளித்துள்ளது.
பல்லி
மீண்டுமா?? இடிப்பதுக்கு அங்கு மசூதி இல்லையே என்னத்தை இடிக்க போறியள்?? அப்படியானால் ராவணன் தமிழனா?? அல்லது சிங்களவனா??
ஏனெனில் ராமருக்காக ராவணனை எதிர்த்து ஒரு போர் இலங்கை மீது தாங்கள் ஆட்ச்சிக்கு தடக்குபட்டு விழுந்துவிட்டால் நடக்குமில்லையா??
பார்த்திபன்
இவர்களுக்கென்ன அரசியல் ஆதாயத்திற்காக எதை வேண்டுமானாலும் சொல்வார்கள், எதை வேண்டுமானாலும் செய்வார்கள். மக்கள் தான் பாவம் ஒவ்வொரு வருடமும் மார்கழி 6ம் திகதியானால் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற பயத்துடனேயே நாளைக் கழிக்கின்றார்கள். முதலில் …………….. மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.