இரண்டு அடி உயர மாப்பிள்ளையை மணந்த ஐந்து அடி உயர பெண்

marriage.jpgஇரண்டு அடி உயரே ஆன 35 வயது இளைஞர், 5 அடி உயரம் கொண்ட பெண்ணை மணந்துள்ளார்.

இந்த சம்பவம் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பரப்புரத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் நேற்று  நடை பெற்றுள்ளது கேரள மாநிலம் கோழிக்கோடை சேர்ந்தவர் தேவதாஸ். இவர் ஒரு ஓவியர். வயது 35 . இவர் வழக்கமான ஆண்களின் உயரம் கொண்டவரல்ல இரண்டு அடி உயரமே கொண்டவர்.

இந்த இயற்கையின் முரண் காரணமாக திருமணமே நடைபெறாமல் இருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் 30 வயதான சசிகலா என்ற பெண்ணை சந்தித்தார். இவர் பெண்களின் சராசரி உயரமான 5 அடி உயரம் கொண்டவர். உயரத்தில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும்,  இருவரது மனமும் சமன்பட்டது, காதல் மலர்ந்தது, இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

தேவதாஸின் குடும்பத்தினர் இந்த காதலுக்கு பச்சைக் கொடி காட்டினர். ஆனால் சசிகலாவின் பெற்றோருக்கு துளியும் இதில் விருப்பம் இல்லை. இருந்தாலும் தங்களது காதலில் உறுதியாக இருந்த தேவதாஸும், சசிகலாவும் கோழிக்கோடு மாவட்டம் பரப்புரத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் வைத்து நேற்று திருமணம் செய்து கொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஏற்கனவே இது போன்ற திருமணங்கள் நடந்துமுள்ளன. நடிகர் குள்ளமணி, நடிகர் பக்ரூ போன்றவர்கள் திருமணம் செய்திருப்பது சாதாரண உயரமான பெண்களைத் தான்.

    Reply
  • மாயா
    மாயா

    மனம் இருந்தால் மார்க்கமுண்டு. வாழ்த்தலாம்.

    Reply