“வணங்கா மண்” இலங்கைக் கடலுக்கு வருமா? கடற்படை உஷார் நிலையில்…

Vanni_Missionபிரிட்டனில் இருந்து உணவு மற்றும் மருந்துப் பொருள்களுடன் “வணங்கா மண்” என்ற கப்பல் வன்னிக்கு வருவதாக வெளிவந்துள்ள தகவலை அடுத்து, கடற் படையினர் உஷார் நிலையில் வைக்கப் பட்டுள்ளனர்.  கடற்படை வட்டாரங்கள் இத்தகவலைத் தெரிவித்தன.

வன்னி மக்களுக்காக லண்டன் வாழ்.புலம்பெயர் தமிழ் மக்கள் வழங்கிய உதவிப் பொருள்களுடன் வணங்கா மண் இந்த மாத ஆரம்பத்தில் வன்னி நோக்கிப் பயணிக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர். பிரித்தானியாவிலிருந்து நிவாரணக் கப்பலொன்று புறப்படவுள்ளமை தொடர்பாக அங்கிருக்கும் இலங்கை உயர்ஸ்தானிகராலயம், பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருப்பதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த காலங்களிலும் விடுதலைப் புலிகள் நிவாரணக் கப்பல்களைக் பயன்படுத்தி ஆயுதங்களைக் கடத்தியிருப்பதால், இந்தக் கப்பல் குறித்தும் தாம் கூடுதல் அக்கறை செலுத்தியிருப்பதாகவும், இந்த விடயத்தில் கவனம் செலுத்துமாறும் உயர்ஸ்தானிகராலயம் பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை லண்டனில் ஏற்பாடு செய்யயப்பட்ட நிகழ்வில் உத்தியோகபூர்வமாக கப்பலில் பொருள்கள் ஏற்றப்பட்டுள்ளன என்று லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் “ஏசிரி நவ்” என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கை அரசின் இணக்கத்தை பெற்ற பின் கப்பல் வன்னி நோக்கிப் புறப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.இலங்கை அரசின் இணக்கத்தை நேற்று வரை பெறமுடியவில்லை. அநேகமாக கப்பல் இலங்கைக்குள் செல்வதற்கான அனுமதி கிடைக்கும் என  நம்புகிறோம் என்று ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அர்ஜுன் எதிர்வீர சிங்கம் தெரிவித்தார்.சர்வதேச ரீதியிலான விண்ணப்பத்தை ஆரம்ப நிகழ்விலேயே விடுத்திருந்தோம் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை குறிப்பிட்ட கப்பல் அனுமதியின்றி இலங்கைக் கடற்பகுதிக்குள் பிரவேசிக்குமானால் அதன் மீது சுடுவோம் என கடற் படை எச்சரித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இலங்கை அரசு அனுமதி தரப் போவதுமில்லை. கப்பல் புறப்படப் போவதுமில்லை. பேசாமல் கப்பலில் ஏற்றிய பொருட்களை கப்பலில் வைத்தே “விசேட விற்பனை” என்று விளம்பரப் படுத்தி அவற்றை மீண்டும் மக்களின் தலையிலேயே கட்டி விடலாமே..

    Reply
  • மாயா
    மாயா

    நடுக் கடலில் வைத்தே கப்பலில் கொண்டு செல்லும் பொருட்களும் ஆட்களும் மாற்றப்படவிருப்பதாக சில தகவல்கள் கசிந்துள்ளன.

    Reply
  • thurai
    thurai

    தமிழீழத்தின் மறுபெயர் வணங்காமண்
    இறுதிப்போரின் மறுபெயர் மனிதாபிமான உதவிகள்
    கப்பல் போய் சேருமோ சேராதோ, கடற்படைதாக்குமா தாக்காதா என்பதல்ல கேள்வி. 30 வருடங்களாக் தமிழீழம், இன்னும் எத்தனை வருடங்களிற்கு வணங்காமண் என்பதேயாகும்.

    துரை

    Reply
  • selva
    selva

    நான் கூகிழ் தேடுதளத்தில் சென்று “அக்ட் நெளவ்” என்ற அமைப்பு பற்றி றிசேர்ஜ் பண்ணி பார்த்தேன் அவ்வாறான ஓர் மனிதநேய உதவி நிறுவனம் பதிவு செய்யப்பட்டதாக எதுவும் கிடைக்கவில்லை. தயவு செய்து அவ் அமைப்பு பற்றி முதலில் அறியத்தாருங்கள் அதன்பணிகள் பற்றி தெளிவு படுத்துங்கள். வணங்காமண் என்ற கப்பல் அது ஒரு கற்பனையான வடிவம் என்பது போன்ற மாயை இங்கு பலருக்கும் இருக்கின்றது. எனவே இந்தக்கப்பல்பற்றி அறியத்தாருங்கள் அது எந்தக்கம்பனியைச் சார்ந்தது (உதாரணமாக பிரிட்டிஸ் எயார் வேய்ஸ்) குறைந்தபட்சம் அது எந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டது என்பதையாவது அறியத்தருதல் வேண்டும்…..

    இப்பொழுது கப்பலில் பொருட்கள் ஏற்றப்பட்டுவிட்டனவா? இல்லையா? அதை உறுதிப்படுத்துங்கள் அவ்வாறு பொருட்கள் ஏற்றப்பட்டு விட்ட நிலையில் கப்பலை நகரவிடாமல் அது துறைமுகத்தில் நிக்குமானால் அதன் நிமிடம் ஒன்றுக்கான துறைமுகக்கட்டணம் எவ்வளவு என்று தெரியுமா? அதனை யாராவது மக்களுக்கு தெரியப்டுத்துவீர்களா? (சாதாரணமாக ஒரு கொண்டைனர் துறைமுகத்தில் இருந்து கிளியரன்ஸ் செய்யப்படாமல் இருக்குமானால் அதன் நாள் ஒன்றுக்கான வரி எவ்வளவு லட்சம் ருபாய்கள் என்று தெரியுமா?) இக்கப்பல் புறப்படும் இடமும் அது சென்றடையும் இடத்தினையும் இரு நாட்டு கப்பல் கம்பனிகளும் முடிவெடுத்து விட்டனவா?. பின்னர் அதற்கான வெளிநாட்டு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் அங்கீகாரம் கிடைகப்பெற்று விட்டனவா? ஒரு வெளிநாட்டுக்கப்பல் இன்னொரு நாட்டினுள் நுளைவதாயின் அதற்கான சர்வதேச சட்ட விதிமுறைகளையும் யாராவது தெளிவு படுத்த முன்வரமாட்டீர்களா? நான் மேலே கேட்டிருக்கின்ற விடையங்களுக்கு யாராவது பதில் தரமுன்வருவார்களானால் ‘வணங்காமண் என்ற கப்பல் நிஜம்” கண்டிப்பாக அது பாதிக்கபட்ட வன்னி மக்களை சென்றடையும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    டிட்டானிக்கப்பல் அளவுக்கு விளம்பரம் செய்து விட்டு இப்போது கப்பல் போகும் பக்கத்துக்கு எதிராக காத்து அடிக்குதென பல்லியை ஏமாத்தலாமா??
    சில வேளை ஓட்டி இல்லையோ?? சூசை அண்ணன் வாங்கோ. கப்பலை கொண்டு போங்கோ.

    Reply