பாகிஸ் தானில் இப்போதைக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடக்க வாய்ப்பு இல்லை என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது. லாகூரில் கடந்த மாதம் 3 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கட் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர் டேவிட் மொர்கன் வெலிங்டனில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
லாகூரில் நடந்த சம்பவம் பாகிஸ்தான் மக்களுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்போதைக்கு பாகிஸ்தõனுக்கு கிரிக்கெட் அணிகளையோ அதிகாரிகளையோ அனுப்ப முடியாது. அங்கு பாதுகாப்பு விடயத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டால்தான் கிரிக்கெட் அணிகளை அனுப்புவது பற்றி பரிசீலனை செய்ய முடியும் என்றார்