யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் இன்று காலை பெருந்தொகையான போதைப் பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 85 கிலோகிராம் நிறை கொண்ட கேரள கஞ்சாவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நேற்றையதினம் மன்னாரில் 12 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் – மதவாச்சி (ஏ – 14) பிரதான வீதியில் வைத்து குறித்த ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் பயன்படுத்திய கார் ஒன்றையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.