‘லக்றூ’ தொலைக்காட்சி சேவை நாளை முதல் ஆரம்பம்

television.jpgஇலங்கை தொலைக்காட்சி ரசிகர்களுக்கு அறிமுகமாகவுள்ள புதிய ‘லக்றூ’ தொலைக்காட்சி அலைவரிசையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் நாளை முற்பகல் 11.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

தொலைக்காட்சி வரலாற்றில் புதியதோர் அனுபவத்தைப் பெற்றுத் தரும் இந்த லக்றூ தொலைக்காட்சி சேவையை அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் திரைப்படப் பிரிவு தேசிய தகவல் தொலைத் தொடர்புத் துறையின் முன்னோடியான ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் இணை நிறுவனமான எஸ்.எல்.ரீ. விஷன் கொம் உடன் இணைந்து வழங்குகிறது.

சர்வதேச புகழ் பெற்ற இலங்கையின் திரைப்பட இயக்குனரான கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்களின் 90ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டே நாளை இந்த தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்படுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • ஸிரீலங்கன்
    ஸிரீலங்கன்

    ஆரோக்கியமான நிகழ்ச்சிகளை, இலங்கையின் அனைத்து தரப்பு மக்களையும் பிரதிபலிக்கும் வகையில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி, இனியாவது எதிர்காலத்தை பற்றி, மக்களை ஆற்றுப்படுத்த வேண்டும்.

    Reply
  • பகீ
    பகீ

    எத்தனை சனல் தொடங்கினாலும் ஆகப்போவது ஒன்றுமில்ல்லை. ஊடக தர்மம் என்கின்ற ஒன்று ஸ்ரீலங்காவில் இல்லை. அது இறந்துபோய் பல வருடங்களாகிறது. ஒரு அரசு ஏன் ஊடகம் நடத்த வேண்டும்? ஏற்கனவே லேக் ஹவுஸ் இருக்கிறதே? நியாயமாகப்பார்த்தால் கையகப்படுத்திய (தேசிய மயம்?) லேக் ஹவுசை மீண்டும் உரியவர்களிடம் கொடுக்கலாமே? இதிலிருந்து தெரிவது என்ன என்றால் தமது விருப்பத்துக்கு லேக் ஹவுஸ் ஆடும் ஆட்டம் போதவில்லை தாங்களே ஒன்ரை ஆரம்பித்தால் இன்னும் நன்றாக இருக்கும் எனபதே!

    Reply