இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து காயங்களுக்கு இலக்கானோர் நோயாளர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் உறவினர்கள் உள்ளிட்ட 490 பேர் நேற்று கப்பல் மூலம் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டோரில் வயதானவர்களே அதிகமாக உள்ளதாக தள வைத்தியசாலை பகுதியில் உள்ள வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார்.
இதே வேளை வெள்ளிகிழமை கப்பல் மூலம் புல்மோட்டைக்கு கொண்டுவரப்பட்டோரில் இதுவரை மூவர் மரணித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.