மேல் மாகாண சபைக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து ஏப்ரல் 02ஆம் திகதி வரையில் 60 வன்முறைச் சம்பவங்கள் பதியப்பட்டுள்ளன என்று தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான கபே நிலையம் அறிவித்துள்ளது.
பதியப்பட்டுள்ள சம்பவங்களில் கூடுதலான பாரிய சம்பவங்கள் கடுவெல தேர்தல் தொகுதியிலேயே பதிவாகியுள்ளன. ஏப்ரல் 02ஆம் திகதி வரையான 60 சம்பவங்களில் 20 பாரிய சம்பவங்களும் 40 சிறியளவிலான சம்பவங்களும் அடங்குகின்றன.
தேர்தலுக்கான வாக்களிப்பு நெருங்கும் வேளையில் வன்முறைச் சம்பவங்கள் மேலும் அதிகரிக்கலாம் என்று எச்சரித்துள்ள தேர்தல் கண்காணிப்புக்கான நிலையம், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எதிராக 14 முறைப்பாடுகளும், ஐ.தே.கவுக்கு எதிராக 07 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. அதேவேளை, ம.வி.மு. (ஜே.வி.பி.) எதிராக எவ்விதமான முறைப்பாடுகளும் பதியப்படவில்லை. அத்துடன், அடையாளப்படுத்தப்பட முடியாத 39 சம்பவங்களும் பதியப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.