பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் கண்டெய்னர் ஒன்றில் சுமார் 150 பேர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இவர்களில் 44 பேர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சட்டத்திற்கு புறம்பாக குடியேற முயன்ற இவர்கள் மூச்சு திணறி இறந்து விட்டதாக பொலிஸார் ஒருவர் தெரிவித்துள்ளார். நேட்டோ படைகளுக்கு பொருட்களை ஏற்றி செல்லும் இந்த வாகனம் ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் ஊடாக இரான் செல்லவிருந்தமை குறிப்பிடத்தக்கது