க. பொ. த. சாதாரண தர புதிய பாடத் திட்டத்திற்கமைவான பரீட்சை பெறுபேறுகள் நேற்று பிற்பகல் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.
நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை கிடைக்கக் கூடியதாக பெறுபேறுகள் நேற்று தபாலில் இடப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.
www.doenets.lk என்ற இணையத்தள முகவரியினூடாக பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார். நேற்று பிற்பகல் 3 மணிக்கு பெறுபேறுகள் யாவும் இணை யத்தளத்தில் இணைக்கப்பட்டன. புதிய பாடத்திட்டத்தின் படி சுமார் 3 இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
பழைய பாடத்திட்டத்திற்கான க. பொ. த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரமே வெளியிடப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் நேற்று பிற்பகலிலேயே நேரடியாக பரீட்சை முடிவுகளைப் பெற்றுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.