ஒரு இலட்சம் குரங்குகளை சீன நிறுவனமொன்றுக்கு அனுப்புவதை தடுக்கும் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி, சுற்றுச்சூழல் அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்டது.
இந்த வழக்குக்கான சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக ஒரு நாள் கால அவகாசம் வழங்குமாறு சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான அரச சட்டவாதி கோரிக்கை விடுத்தார். இதற்கமைய, குறித்த மனுவை எதிர்வரும் 26ஆம் திகதி மீள விசாரணைக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.