பயங்கரவாதிகளின் தாக்குதலிலிருந்து இலங்கை கிரிக்கெட் வீரர்களை பாதுகாத்த பாகிஸ்தான் சாரதி முஹமட் கலீல் இன்று இலங்கை வருகிறார். தனது குடும்பத்தினரோடு இன்று மாலை இலங்கை வரும் இவருக்கு வரவேற்பளிக்கப்படவிருக்கிறது.
ஒருவாரம் இலங்கையில் தங்கியிருக்கும் இவருக்கு நாளை இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கெளரவமளிக்கவுள்ளனர். அன்றைய தினமே விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே இராப்போசன விருந்தளித்துக் கெளரவிக்கவுள்ளார். பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரகமும் இவருக்கு வரவேற்பளிக்கவுள்ளது