நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தி ஒழிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் உண்மைகளைக் கண்டறியவும் அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கவும் நாடாளுமன்ற விசேட குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அண்மையில் கூடிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி தெரிவுக்குழுவை நியமிக்கும் பிரேரணை எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.