சிலாபம், கருவலகஸ்வௌ பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மின்னல் தாக்கியதில் 3 விவசாயிகள் பலியாகியுள்ளனர். கருவலகஸ்வௌ, இஹெல புளியங்குளம் பகுதியிலுள்ள வயல்வெளியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரும் சம்பவத்தை உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.