தனது 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 110 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பலப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க குற்றவாளியாக காணப்பட்ட நபருக்கு 110 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து திங்கட்கிழமை (05) தீர்ப்பளித்துள்ளார்.
குற்றவாளியான நபர் 2008 ஆம் ஆண்டு முதல் தனது மகளை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். குறித்த நபர் உரகஸ்மன்ஹந்திய, கோரக்கீன பிரதேசத்தில் வசிப்பவராவார்.