தன்மீதான தாக்குதல் தனது உயிருக்கு ஆபத்து தொடரும் ஒடுக்குமுறைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணையை சமர்ப்பித்து இன்று உரையாற்றவிருந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதே நேரம் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் அவருக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்படும் என சபாநாயகர் மகிந்த யாப்ப அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.
கஜேந்திரகுமார் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்து பொலிஸார் எனக்கு அறிவித்துள்ளனர் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் தங்கள் கடமைகளை செய்வதை தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.