மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ராஜாங்கனை சத்தா ரதன தேரரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.