வன்னியில் பாதுகாப்பு வலயம் மீது படையினர் நடத்தும் தாக்குதலுக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவருமே கிளர்ந்தெழ வேண்டும் என பழ. நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார். மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம், இரட்டை வாய்க்கால் போன்ற கிராமங்களை உள்ளடக்கிய பாதுகாப்பு வலயத்தில் லட்சக்கணக்கான மக்கள் தங்கியிருப்பதால், படையினர் தாக்குதலைத் தொடுத்தால் அவர்களே உயிரிழக்க நேரிடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலுக்கு முன்னோடியாகவே, தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தப் பகுதிகளுக்குள் மக்களோடு மக்களாக ஊடுருவியிருப்பதாகவும், மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இருப்பதாகவும் படையினர் அனைத்துலகின் நாடிபிடிக்கும் முன்னோடி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் 16ஆம் நாள் இந்திய பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலும், தமிழ்-சிங்கள புத்தாண்டு நெருங்கி வருவதாலும், அதற்கு முன்னர் விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என நினைக்கும் இந்திய, இலங்கை அரசுகள் அடுத்த சில நாட்களில் பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளன. இந்தியத் தேர்தலுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய அரசாங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. புலம்பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழும் நாடுகளின் அரசுகளுக்கு இந்தத் தகவலை உடனடியாகக் கொண்டு சென்று, இலங்கை அரசை வலியுறுத்த அனைத்துலக சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் பழ.நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார்.
பார்த்திபன்
சென்ற வருடம் நெடுமாறன் 2 கோடி ரூபா பெறுமதியான பொருட்களை வன்னிக்கு அனுப்பச் சேகரித்தாக அறிக்கை விட்டார். பின்பு அவை வன்னிக்கு அனுப்ப முடியாமல் போய் விட்டது. அவற்றை இவர் என்ன செய்தார்?? இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளுக்காவது அதைக் கொடுத்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. புலி வால்கள் என்றால் புலிகளைப் போலவே பிழைப்பு நடாத்துகின்றார்கள். அந்தப் பிழைப்பு தொடர வேண்டுமானால் இவருக்கு புலிகள் இருக்க வேண்டும். அதற்காக இப்படி எத்தனை கதைகளையும் கட்டி விடுவார்.
இப்படித்தான் 5 வாரங்களுக்கு முன் ஆனந்தவிகடனில் இலங்கை இராணுவம் புதுக்குடியிருப்புக் காட்டினுள் இருக்கும் 3 இலட்சம் மக்களையும், புலிகளையும் காட்டிற்கு தீ மூட்டி அனைவரையும் அழிக்கத் திட்டம் தீட்டி விட்டதாகவும், அடுத்த வாரம் இது நடைபெறப் போவதாகவும் கதையளந்தது.
எல்லோரும் நன்றாகத் தான் கதையளக்கின்றார்கள். ஆனால் கேட்கத் தான் ஆளில்லை.
மாயா
நெடுமாறனைச் சுத்தியிருந்த திருமா – வைகோ ஒருத்தரையும் காணயில்லை? தமிழகத் தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்சனையும் இனி அடங்கிடும்.