முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கரியை பாராட்டும் டுவிட்டர் பதிவொன்றை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி வெளியிட்டுள்ளார்.
ஆனந்த சங்கரி குறித்து வெளியாகியுள்ள கட்டுரையை பகிர்ந்துகொண்டுள்ள அவர் ஆனந்த சங்கரி குறித்த பதிவினையும் வெளியிட்டுள்ளார்.
அலிசப்ரி அந்த பதிவில் தெரிவித்துள்ளதாவது,
தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல்ரீதியில் தங்களுடன் உடன்படமறுப்பவர்களையோ தமிழர்கள் மத்தியில் விமர்சனங்களையோ ஏற்றுக்கொள்ளவில்லை. விடுதலைப்புலிகளின் கட்டளைகளிற்கு அடிபணியாத அல்லது அதனை மீறத்துணிந்தவர்கள் இரக்கமற்ற முறையில் கையாளப்பட்டனர்.
விடுதலைபுலிகளை பல்வேறுகாலகட்டங்களில் புண்படுத்திய பல தமிழ் அரசியல்வாதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். புலிகளும் அவர்களுடன் இணைந்து பயணித்தவர்களும் ஆனந்தசங்கரியை துரோகி என அவதூறாக கண்டித்துள்ளனர்இஆனால் இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை சரியாக புரிந்துகொண்ட சரியாக சிந்திக்கும் அனைவரும் ஆனந்தசங்கரியின் அர்ப்பணிப்பையும் துணிவையும் பாராட்டியுள்ளனர் எனவும் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.