முன்னாள் அமைச்சர் ஈ.எல்பி. ஹுருள்ளே காலமானார்

சிரேஷ்ட அரசியல் வாதியும் முன்னாள் அமைச்சரும் ஆளுநருமான ஈ.எல்.பி. ஹுருள்ளே நேற்று மாலை காலமானார். இறக்கும்போது இவருக்கு வயது 90 ஆகும். மாலினி கலகொட ஹுருள்ளே (86)யின் கணவரான இவர் ஐந்து பிள்ளைகளின் தந்தை யாவார்.

ஹொரவப்பத்தானை தேர்தல் தொகுதியிலிருந்து 1956ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட இவர், 1970ஆம் ஆண்டு வரையிலும் பின்னர் 1977ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டு வரையிலும் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார்.

1965 இல் போக்குவரத்து அமைச்சராகவும் 1977 இல் கலாசார அமைச்சராகவும் ஈ.எல்.பி. ஹுருள்ளே இருந்துள்ளார். 1988 இல் மத்திய மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்றிருந்தார். 1991ஆம் ஆண்டு முதல் சில வருடங்களுக்கு அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகராகவும் கடமையாற்றியுள்ளார்.

சுகவீனம் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று மாலை உயிரிழந்தார். பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது பூதவுடல் ரேய்மண்ட் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை (8ம் திகதி) மாலை 6.30 மணிக்கு பொரளை கனத்தையில் பூதவுடலை நல்லடக்கம் செய்வதற்கான இறுதிக்கிரியைகள் முன்னெடுக்கப்படும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *