ஏழ்மை ஒழிப்புக்கான ‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட ஏழ்மை குடும்பங்கள் போராட்டத்தில் !

அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தில் தகுதியானவர்கள் உள்வாங்கப்படவில்லை என தெரிவித்து நுவரெலியாவில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நுவரெலியா பிரதேச செயலகம் மற்றும் நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்த எதிர்ப்பு பேரணி நுவரெலியா எலிசபெத் மகாராணி வீதி, லோசன் வீதி, வழியாக நுவரெலியா பிரதான தபாலகம் முன் நின்று தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியத்திய நிலையில் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

இதே நிலை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஏற்பட்டுள்ளது அவதானிக்க முடிகிறது. தேவை உள்ள குடும்பங்கள் பல நிராகரிக்கப்பட்டு வசதி வாய்ப்புள்ள குடும்பங்களுக்கு அஸ்வெசும நலன்புரி  கொடுப்பவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளமை ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்டவர்களுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்களுக்கும் – தெரிந்தவர்களுக்கும் இந்த அஸ்வெசும நலன்புரி உதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் வடக்கின் பல பகுதிகளில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்து உள்ளவர்களின் குடும்பங்களுக்கு இந்த உதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள அதே வேளை  வீட்டுப் பணிகளுக்காக மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தொழில் தேடி சென்ற வறுமை கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்கள் பல இந்த உதவி திட்டத்திற்குள் உள்வாங்கப்படவில்லை என பலரும் குற்றம் சாட்டி வருகின்ற நிலையில் இது தொடர்பில் வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் தலைவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

இதேவேளை பொதுஜன பெரமுனவின்நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார் சுமித்ராராச்சி அவர்கள் இது தொடர்பில் குறிப்பிட்ட போது” அஸ்வெசும நிவாரண செயற் திட்டம் சமூக கட்டடைப்பில் பாரிய முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் . ஏழ்மையில் நிலையில் உள்ளவர்கள் இந்த செயற்திட்டத்தில் உள்வாங்கப்ப டவில்லை . ஆகவே முறையான மதிப்பீட்டை மேற்கொள்ளும் வரை அஸ்வெசும செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதை இடைநிறுத்த வேண்டும். சமூக கட்டமைப்பில் தீவிரம டைந்துள்ள ஏழ்மை நிலையை இல்லாதொழிக்க அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள அஸ்வெசும செயற்திட்டம் சமூகக் கட்டமைப்பில் பாரிய முரண்பாடுகளை தோற்றுவிக் கும் வகையில் உள்ளது . தகுதியானவர்களுக்கு மாத்திரம் நிவாரண தொகை வழங்கப்பட வேண் டும் என குறிப்பிடப்பட்டது . அஸ்வெசும நிவாரண செயற்திட்டத்தில் நிவாரணம் பெறுவதற்குத் தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டுள் ளார்கள் . தகுதியற்ற செல்வந்தர்கள் நிவார ணத் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட் டுள்ளார்கள் . ஆகவே இந்தத் திட்டத்தில் உண்மையான தரப்பினர் அடை யாளப்படுத்தப்படவில்லை.” என பாராளுமன்றத்தில் குறிப்பிடத்தக்கது.

இதே வேளை குறித்த நலன் குறித்த திட்டம் தேவையுடைய ஏழ்மையான குடும்பப் பின்னணி உள்ளவர்களுக்கு மட்டுமே சென்றடையும் எனவும் ஏழ்மை நிலையிலிருந்து குறித்த திட்டத்திற்குள் உள்வாங்கப்படாத குடும்பத்தினர்கள் எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி வரை தங்களுடைய பிரதேச செயலகங்களுக்கு சென்று மேல்முறையீடு செய்து குறித்த நான் குறித்த திட்டத்தில் தங்களை  இணைத்துக் கொள்ள முடியும் என அரசுன தரப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *