பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் விடுதியில் வைத்து தற்கொலை செய்துகொள்ள முற்பட்டதாகவும், அவரை உடனடியாக சில மாணவர்கள் மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பைச் சேர்ந்த இந்த மாணவன் சுயநினைவின்றி இருந்தபோது, பக்கத்து அறையில் இருந்த மாணவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிப்பதற்கு பல்கலைக்கழக பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
பல்கலைகழக மாணவர்கள் தற்கொலை செய்கின்ற நிலை அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளது. கடந்த மாதமளவில் யாழ்ப்பாணத்தைசேர்ந்த இரண்டு பல்கலைகழக மாணவர்கள் தற்கொலை நெய்து உரிரை மாய்த்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.