உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை நிறுவுவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
குறித்த ஆணைக்குழு நிறுவுதல் தொடர்பாக தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை தெளிவுபடுத்துவதற்கான கலந்துரையாடல் நேற்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சகல பிரிவினருக்கும் உண்மையைக் கண்டறிய வாய்ப்பு கிடைக்கும் என அலி சப்ரி தெரிவித்தார்.
குறித்த ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட வேண்டும் எனவும் அதற்கான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
சட்டம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் ஆணைக்குழுவிற்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.