அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் என்பதை ரணில் விக்ரமசிங்க விளக்குவார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 ஆவது திருத்தச் சட்டத்தை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து முன்மொழிவுகளும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ் அரசியல் கட்சிகளின் மாறுபட்ட கருத்துக்கள் தடையாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவடைந்து இரண்டு வாரங்களின் பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.