இந்தியாவின் சந்திராயன் குறித்தும் தனது சகோரரின் விண்வெளி முயற்சிகள் குறித்தும் நாடாளுமன் உறுப்பினர் நாமல்ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் விண்கலத்தினை தனது சகோதரர் அனுப்பிய ரொக்கட்டுடன் தொடர்புபடுத்தி சிலர் கருத்து தெரிவிக்கின்றனர் – நாடாளுமன்றத்திலும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனது சகோதரர் தனியார் துறை முயற்சியாகவே ரொக்கட்டினை அனுப்பினார் அதில் அரசாங்கம் தொடர்புபட்டிருந்தால் மாத்திரமே அது குறித்து கோப் குழுவினர் விசாரணை செய்யவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் வர்த்தகர் ஒருவரின் முதலீடு குறித்து நாங்கள் கேள்வி எழுப்ப முடியாது அதில் அரசாங்கத்திற்கு தொடர்பிருந்தால் மாத்திரம் எதிர்கட்சி தலைவர் நாடாளுமன்ற விசாரணையை கோரமுடியும் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சேற்றை வாரிவீசும்அரசியல் சூழலை அடிப்படையாக கொண்டவை இந்த கருத்துக்கள் இவ்வாறான கருத்துக்களால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும் நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் மகனான ரோஹித ராஜபக்சவினால் 2012 ஆம் ஆண்டு இலங்கை நாட்டிலிருந்து அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் சுப்ரீம் சட் 1 (Supreme SAT-1) செயற்கைக்கோளுக்கு 320 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டிருந்ததது.
இந்தநிலையில், இது தொடர்பில் அண்மையில் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பேசிய போது “ “இந்தியா 2008, 2019 மற்றும் 2023 ஆகிய வருடங்களில் முறையே சந்திரயான் 1, 2 மற்றும் 3 என மூன்று தடவைகள் முயற்சிகளை மேற்கொண்டு இறுதியாக எப்படியோ நிலவை அடைந்தது.
எனினும், இந்த 3 செயல்முறைகளுக்கும் 263 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே செலவிடப்பட்டுள்ளன.
இந்தியாவில் 3 முறை முயற்சித்தும் செலவழித்த பணத்தை விட நம் நாட்டில் இருந்து அனுப்பப்பட்டதாக கூறப்படும் செயற்கைக்கோளுக்கான செலவு அதிகம்.
இதற்காக செலவிடப்பட்ட 320 மில்லியன் டொலர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்த அறிக்கையை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
நிலவில் இறங்குவது எப்படி போனாலும் நாட்டை வங்குரோத்தாக்குவதற்கு இதுவும் காரணமே” என தெரிவித்திருந்த நிலையிலேயே இதற்கு நாமல் ராஜபக்ச மேற்குறித விளக்கம் கொடுத்துள்ளார்.