கிளிநொச்சி – வேரவில் இந்து மகாவித்தியாலயம் முன்பாக பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று (07) காலை வேரவில் இந்து மகா வித்தியாலயம் முன்பாக இடம்பெற்றது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது, கிளிநொச்சி – வேரவில் இந்து மகாவித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவிற்கான ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரியே முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.