பிரித்தானியா ஊடகமான சனல்-4 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியிட்டுள்ள ஆவணப்பதிவு குறித்து கருத்து வெளியிடாதிருக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியா ஊடகமான சனல்-4 வெளியிட்ட ஆவணப்பதிவு குறித்த விசாரணைகள் தற்போது வேவ்வேறு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், விசாரணை அறிக்கைகள் கிடைக்கப் பெறும் வரை அமைதி காக்க இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த தனியார் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட ஆவணப்பதிவின் மூலம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உறுதிபடுத்தப்பட்டால், அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தேவையேற்படின் மாத்திரம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இது குறித்த விளக்கமளிக்கப்படுமெனவும் மேலும் கூறப்பட்டுள்ளது.