இலங்கையில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டுக் கம்பனிகளுக்கு 50 வருட குத்தகை அடிப்படையில் காணிகளை ஒதுக்கிக்கொடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான பிரேரணையை முதலீட்டு அபிவிருத்தி அமைச்சர் குமார வெல்கம சமர்ப்பித்திருந்தார்.
ஒதுக்கப்படும் காணியில் 6 மாத காலங்களுக்குள் கைத்தொழில் முயற்சிக்கான கட்டிடங்கள் அமைக்கப்பட வேண்டும். இல்லையெனில் அக்காணிகளை மீளப் பெறும் அதிகாரமும் அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான கைத்தொழில் பேட்டைகள் ஏற்கனவே குருநாகல், புத்தளம், பொலன்நறுவை, அம்பாறை, திருகோணமலை, இரத்தினபுரி, மாத்தளை, கண்டி, காலி, மாத்தறை, ஹம்பந்தோட்டை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன.