டிசம்பர் மாதம் 18ஆம் திகதியை கண் தான தினமாகப் பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான பிரேரணையை சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்திருந்தார்.
கண் தான சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினரான தேசபந்து டொக்டர் ஹட்ஸன் சில்வாவின் பிறந்த தினத்திலேயே இந்த கண் தான தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இவர் தனது 48 வருட சேவையில் பார்வையற்ற 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கண் தானம் வழங்கியுள்ள சேவையை கௌரவிக்கும் வகையிலும் இச்சேவையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குமே இத்தினம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.