பிரித்தானியாவில்,போர் நிறுத்தத்தை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி

இலங் கையில் உடனடியானதும், நிரந்தரமானதுமான போர்நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி, பிரித்தானியா நேரப்படி இன்று பிற்பகல் 1.00 மணியளவில் ஆரம்பமாகியது.

ceasefire.jpg

இப்பேரணியில் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நீண்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடாத்தப்பட்டது. இந்த ஊர்வலம் பிரித்தானிய தமிழர்கள் தமது ஆதங்கத்தை பிரித்தானிய அரசக்கும் தமது எதிர்ப்பை இலங்கை அரசக்கும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் வன்னியில் யுத்த யுத்த்ததை நிரந்தரமாக நிறுத்தும்படி வற்புறுத்தியது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 Comments

  • murugan
    murugan

    “வன்னியில் புலிகளால் பணயம் வைக்கப்பட்டிருக்கும் மக்களை விடுவிக்குமாறு இந்த உலகமே கோரிக்கை விடுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அன்றி புலம் பெயர்ந்த நாடுகளில் ஆர்ப்பாட்டம் நடத்தும் புலி ஆதரவாளர்கள் இந்தக் கோரிக்கையை அவதந்திரமாக தவிர்த்து வருகிறார்கள்.

    அவர்களை பொறுத்தவரை புலிகளின் அதிகாரம் இருப்பு என்பன மக்களின் உயிர் வாழ்க்கையை விட முக்கியமானது. மக்கள் இருக்கிறார்களோ இல்லையோ புலிகளும் அவர்களுடைய ஆயுதங்களும் அவர்களுடைய பயங்கரவாதமும் கட்டிக்காக்கப்பட வேண்டுமென்று இவர்கள் விரும்புகிறார்கள்.

    புலம் பெயர்ந்த நாடுகளில் வெகு சௌகரியமாக அந்த நாடுகளில் காணப்படும் ஜனநாயக சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் இவர்கள் நல்ல கல்வியையும் பொருளாதார வாய்ப்பு வசதிகளையும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் வன்னியில் நாளும் பொழுதும் செத்துக் கொண்டிருக்கும் ஊனமுற்றுக் கொண்டிருக்கும் மக்களை பற்றிய எந்த கரிசனையும் இல்லாமல் அவர்களை விடுவிக்குமாறு புலிகளை கோராமல் புலிகள் பாணியில் உடையணிந்து (யுத்தம் என்பது கொடுமையானது அதில் சம்பந்தப்படுபவர்கள் மிகுந்த நரக வேதனையை அனுபவிப்பர். ஆனால் ஏதோ நாடகத்திற்கு வேஷம் அணிந்து செல்வது போல் உல்லாசமாக ஐரோப்பாவினதும் வட அமெரிக்காவினதும் சுதந்திரமான ஆரோக்கியமாக தெருக்களில் உலா வருகிறார்கள்) புலி பாசிசத்தை தக்க வைப்பதற்கான விநோத உடை ஊர்வலங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

    துன்புறும் மக்களுக்காக இரத்தக் கண்ணீர் வடிப்பவர்களை அவர்களுக்காக வீதியில் இறங்கியிருப்பவர்களை இங்கு நாம் சிரம் தாழ்த்தி மரியாதை செலுத்த வேண்டும். ஆனால் புலி பாசிசத்தை பாதுகாப்பதற்காக வடக்கில் முழு தமிழ்ச் சமூகமுமே ஊனமுறுவதற்கும் அழிந்து போவதற்கும் துணை நிற்பவர்களை புலம் பெயர் தளத்தில் மாற்றுக் கருத்துக் கொண்டோர் அம்பலப்படுத்தியாக வேண்டும்.

    அதிகூடிய பொருளாதார வளங்களுடன் புலி பாசிசத்தை தக்கவைப்பதற்கான இயக்கத்தை உலகளாவியளவில் நடாத்துபவர்கள் இங்குள்ள மக்கள் அழிந்து போவதற்கு துணை நிற்பவர்களாகவே கருத முடியும். ஒரு விதத்தில் இது இரண்டு வர்க்கங்களுக்கு இடையிலான நிலைமை மாதிரியும்கூட.

    வன்னியில் உள்ள மக்கள் சாவதற்கு விதிக்கப்பட்டவர்கள். புலி பாசிசம் பாதுகாக்கப்பட வேண்டும். அதனூடாக தமது சௌகரியமான இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அகங்காரத்துடனேயே இவர்கள் வீதியில் இறங்கியிருக்கிறார்கள்.

    மக்கள் பற்றி இவர்களுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் ஐ.நாவின் மனித ஆணையகத்தின் பணிப்பாளர் ஹோம்ஸ் கேட்டுக் கொண்டதுபோல் புலிகள் மனித கேடயங்களாக வைத்திருக்கும் மக்களை விடுவிக்குமாறு கேட்கட்டும்.”
    சித்தார்தததன்.

    வன்னி மக்கள் நீங்கள் சாகப்பிறந்தவர்கள்தான்!

    Reply
  • thurai
    thurai

    தமிழர் பேரவை, பெயரிலேயே பயஙகரவாதம். லண்டனில் புலிகளின் ஆதரவளர்களை விட ஈழத்தமிழர் வேறு யாருமில்லையா? வேறுநாட்டுத் தமிழர்கள் இல்லையா? தமிழ் மொழியானது குறிப்பிட்ட ஈழத் தமிழர்களிற்கு அதுவும் புலத்தில் குடியேறிய, புலிகளின் ஆதரவாளர்களிற்கும் மட்டும்தான் சொந்தமானதா?

    தமிழ்மொழிப் பற்றார்களே, உங்களின் முகமூடி விரைவில் உலகினில் கிழித்தெறியப்படும்.

    துரை

    Reply
  • thevi
    thevi

    இலங்கைக்கு இனி விசா எடுத்துக் கொண்டு தான் போக வேண்டி வருமோ?

    Reply
  • thevi
    thevi

    இன்று காலை 7.00 மணியளவில் புதுமாத்தளன் யுத்த சூனியப்பிரதேசத்தில் இருந்து வெளியேறிய மக்கள் மீது புலிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 3 மாத கர்பிணி மாதொருவர் படுகாயமடைந்துள்ளார். புலிகளின் பிடியில் இருந்து வெளியேறிய மக்கள் மீது புலிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பலர் காயமடைந்துள்ளதுடன் சிலர் மீண்டும் யுத்த சூனியப்பிரதேத்திற்கு திருப்பியும் சிலர் காயங்களுடன் அரச கட்டுப்பாட்டு பகுதியினுள் வந்தடைந்தும் உள்ளனர்.

    அவ்வாறு காயங்களுடன் அரச கட்டுப்பாட்டினுள் வந்தடைந்தவர்களுள் 3 மாத கர்பிணியின் நிலைமை கலலைக்கிடமாக இருப்பதாக தெரியவருகின்றது. தோள் பகுதியிலும் செஞ்சிலும் காயமடைந்துள்ள மேற்படி பெண் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வைத்து இராணுவ மருத்துவ பிரவினால் முதற்கட்ட சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவருடைய நிலைமை மோசம் என்பதை உணர்ந்து கொண்ட இராணுவ மருத்துவப் பிரிவினர் அவரை உடனடியாக அம்புலன்ஸ் வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    அவர் வவுனியா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை இடம்பெறுவதாக வவுனியா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    புலம் பெயர்ந்தவர்களின் நியாயம் என்ன?

    Reply
  • msri
    msri

    லட்சக்கணக்கில் மக்கள் திரண்டாலும்>உண்ணாவிரதம் இருப்போர் மாண்டாலும் தம் பிடியில் கேடயமாகவுள்ள மக்களை புலிகள் விடவே மாட்டார்கள்!

    Reply
  • சபாரத்தினம்
    சபாரத்தினம்

    “டெலோ” உறுப்பினர்கள் கொல்லப்பட்டபோது “சோடா உடைத்து கொடுத்து” மக்கள் ஆதரவு தந்தது போல் புலிக் கொடிப் போர்த்தி ஆதரவு தருகிறார்கள்.
    “குளிருக்கு” புலிக் கொடி போர்த்துபவர்களை பொறுத்தவரை, தன்னலம் சார்ந்த எந்த தேவைக்குமாக அவ்வப்போது யார் தேவையோ பாவிப்பதும்(தற்போது “வன்னி மக்கள்”) பின் கை கழுவிவிடுவதும் கைவந்த கலை. ஐரோப்பிய, அமெரிக்க “இளம் சமுதாயத்தினரை பொறுத்தவரை, “பள்ளிக்கூடங்களில்” பல துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் “பல ஆண்டுகளாக” நடைபெறுவதால் (அமோக் லவ்ப்), இந்த நாடுகளில், “துப்பாக்கி கலாச்சாரத்திற்கு” எதிராக (பள்ளி-கல்லூரிக் கூடங்களில்) “பாரிய” நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்- ஆனால் லண்டனில், “துப்பாக்கியும், தோட்டாக்களும்” பொறிக்கப்பட்ட கொடியைப் போர்த்திக் கொண்டு, வலம் வருவதை ஐரோப்பிய சமூககத்தினர் எவ்வாறு பிரதிப் பலிப்பார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்- நம் குண்டுசட்டி சிந்தனை மட்டுமே உலகம் கிடையாது.

    Reply
  • thurai
    thurai

    ஏ9 இல் சமாதான காலத்தில் வரி வாங்கிய வருமானத்திலும் கூடுதலாக, இப்போது தொலைபேசிக்கட்டணம் அறவிடப்படுகின்றது. வன்னியிலிருந்து பேசுவதற்கு ஒருநிமிடத்திற்கு 500 ரூபாவில் தொடங்கியவர்கள் இப்போது நிமிடத்திற்கு 1700 ரூபாவாக அறவிடுகின்றார்கள்.
    அங்கும் பணம், இங்கும் பணம், எங்கும் பணம்.

    பேசுங்கள் உறவுகழுடன், தாருங்கள் பணத்தை, தப்பினால் சூடு. லண்டனில் 3 லட்சம் வீதியில் புலிக்காகவா? அல்லது வன்னி மக்களிற்காகவா?

    துரை

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    துரை, நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அத்தோடு அரசாங்கம் இலவசமாக புலிகளின் கட்டுப்பாட்டிற்கு அனுப்பும் உணவுப் பொருட்களையும் பலமடங்கு பணத்திற்கு(உம்: சீனி ஒரு கிலோ 1500 ரூபா) மக்களிடம் விற்று புலிகளே பணம் பார்க்கின்றனர். பொருட்கள் வாங்க பணமில்லாதவர்களுக்கு அவர்களின் நகைகளை வாங்கிக் கொண்டு பவுணுக்கு 10`000 ரூபா கடன் கொடுக்கின்றார்களாம் புலிகள். எப்படியுள்ளது புலிகளின் மக்கள் சேவை. இந்த இலட்சணத்தில் புலம்பெயர்ந்த சிலர் தமது பிழைப்பும் கெட்டுவிடும் என்ற நப்பாசையில் புலிகளைக் காப்பாற்ற கூச்சல் போட்டு கொடி பிடிக்கின்றனர்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இது தெரியாதா? துரை.
    புலிதலைமைக்காகவும் புலம்பெயர் மக்களின் நல்வாழ்வுக்காவும் வன்னிமக்கள் மண்மூட்டையாக மாறி மரிக்க சபிக்கப்பட்டவர்கள். தமிழ்மக்களின் உயர்ந்த உள்ளத்தை புரிந்துகொள்ளுங்கள். வன்னிப்புலிகளின் செய்திகளை அப்படியே விழுங்கி துப்பிவிடும் தொலைகாட்சிகளும் புலிதரகர்களும் இருக்கும் வரை “பக்தமீரா” மாதிரி மாயமாக மறைந்த வணங்காமண் கப்பல் மாதிரியே வன்னிமக்கள் வாழ்வும்.

    Reply
  • MUKILVANNAN
    MUKILVANNAN

    the very fact that some people making noise should come out and expresed their feelings rathar than put under themself in the pillow.and would be join the debate what we can do for people in vanni.this will be bring efforts.

    Reply
  • yko
    yko

    வணங்காமண் கப்பல் எங்கே?? “GTVல்” ரை கட்டிக்கொன்டுவந்து பேசிய டாக்டர் மூர்தி / போஸ் ஆகியவர்களிடம் கேட்கிரோம். அல்லது இவர்களும் வணங்காமண் கப்பலில் போட்டார்களா?

    வைகோ.

    Reply