தாய்லாந்தில் நேற்று சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2009 தொடங்குவதாக இருந்த இந்தியா – தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு, பாதுகாப்பு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியா – தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு தாய்லாந்தில் உள்ள பட்டாயா நகரில் நேற்று தொடங்குவதாக இருந்தது. இதில் பங்கேற்பத்ற்காக இந்திய பிரதமர் மன்மோகன்சிங் சார்பாக மத்திய வர்த்தக துறை அமைச்சர் கமல்நாத் ஏற்கனவே தாய்லாந்து வந்துள்ளார்.
இந்நிலையில், தாய்லாந்தில் பிரதமர் அபிசித் விஜ்ஜாஜிவாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.அவர் பதவி விலகும்படி வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2009 மாநாடு நடைபெறவிருந்த இடத்துக்கு முன்பு திரண்ட ஆயிரத்துக்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள், மாநாட்டு அரங்கத்தின் கண்ணாடி கதவுகளை அடித்து நொறுக்கினர். இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக மாநாடு ரத்து செய்யப்படுவதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.