தமது அரசியல் விருப்புக்களை அடைவதற்கான ஒரு வழிமுறையாகவே விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தமிழர்கள் கருதுகின்றனர்- பா.நடேசன்

nadesan.jpgஇந்தியாவில் இருந்து வெளிவரும் ‘தெஹெல்கா’ இதழின் செய்தியாளர் பி.சி.வினோஜ்குமாருக்கு விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் பேட்டி அளித்துள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னடைவு காலம் (Post-LTTE Scenario), என பலர் கூறுகிறார்களே?
 
இங்கு நான் ஒரு விசயத்தைத் தெளிவாகச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலம் (Post-LTTE Scenario) என்று ஒன்று இருக்கப்போவதேயில்லை. தமிழர்கள் அனைவருடைய அறிவிலும், உணர்விலும் சுதந்திரத்திற்கும், சுயரியாதைக்குமான தாகம் தான் குடிகொண்டுள்ளது என்பதை உலகம் முழுவதிலும் உங்களால் பார்க்க முடியும்.

தமது அரசியல் விருப்புக்களை அடைவதற்கான ஒரு வழிமுறையாகவே விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தமிழர்கள் கருதுகின்றனர். அவர்களுடைய விடுதலைப் போராளிகள் என்ற முறையில், அவர்களது உரிமைகளை எந்தவகையிலும் விட்டுக்கொடுக்காமல் – கடந்த 35 வருட காலத்துக்கும் மேலாக அவர்களது போராட்டத்தை தலைமையேற்று நடத்தி வருவதன் மூலமே இந்தப் பொறுப்பு நிலையை நாம் பெற்றிருக்கின்றோம்.

போர்க் களங்களில் பின்னடைவுகளும், முன்னேற்றங்களும் தவிர்க்க முடியாதவை.

இறுதியாக நாம் எதனை அடைகின்றோம் என்பதுதான் முக்கியமானது. விடுதலைப் புலிகளுக்குப் பின்னான காலம் ஒன்று வரும் எனக் காத்திருந்து காலத்தை வீணாக்குவதற்குப் பதிலாக, எமது மக்களுடைய சுயநிர்ணய உரிமை மற்றும் தாயகத்துக்கான போராட்டத்தை அங்கீகரித்து, அவர்களுடைய அரசியல் விருப்புக்களை நிறைவேற்றுவதில் தமது கவனத்தைச் செலுத்துமாறு அனைத்துலக சமூகத்தையும் இந்தியாவையும் நான் கேட்டுக்கொள்கின்றேன். ஏனென்றால், விடுதலைப் புலிகளுக்குப் பின்னடைவு கால கட்டம் என ஒன்று ஒருபோதும் வரப்போவதில்லை.

விடுதலைப் புலிகளுடனான இந்த போரில் சிங்களப் படையினருடன் இந்தியப் படையினரும் இணைந்து போர் புரிகின்றனரா?
 
சிங்கள மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் மிக உயர்ந்த மட்டத்தில் இராணுவம் சார்ந்த  ஒத்துழைப்பு இருக்கின்றது என்பதை என்னால் சொல்ல முடியும்.
 
பொதுமக்களை மனிதக் கேடயங்களாக விடுதலைப் புலிகள் பயன்படுத்துகின்றார்கள் என்கிற பேச்சு இருக்கிறது. இதற்கு உங்களுடைய பதில் என்ன?
 
சிங்கள அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகள் பல்வேறு வடிவங்களில் தம் மீது பிரயோகிக்கப்படுகின்றமை பற்றி தமிழ் மக்கள் நன்கு  அறிவார்கள். அவ்வாறு ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கும் அந்த அரசாங்கத்தின் கைகளில் அகப்பட அவர்கள் விரும்பாத நிலையில் இங்கு வாழும் மக்களை போருக்குள் ‘சிக்குண்டவர்கள்’ என்றோ அல்லது ‘மனித கேடங்கள்’ என்றோ குறிப்பிடுவது பொருத்தமற்றது.
 
மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புக்கள் இந்தப் பகுதிக்கு வந்து மக்களுடைய விருப்பம் என்ன என்பதை அறிந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் செய்துகொடுக்க வேண்டும்.
 
போர் நிறுத்தம் ஒன்றுக்குத் தயாராக இருப்பதாக நீங்கள் மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்றீர்கள். இது உங்களுடைய பலவீனத்தின் அடையாளமா?
 
தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை போரை சிறிலங்கா அரசாங்கம் தீவிரப்படுத்தியிருப்பதால்தான் நாம் போர் நிறுத்தம் ஒன்றை நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கும், மக்கள் இப்போது தாம் வசிக்கும் பகுதிகளிலேயே அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அவர்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கும் போர் நிறுத்தம் ஒன்று அவசியமாகும்.

உலகத்திற்கு  உங்களுடைய கோரிக்கை என்ன?
 
அப்பாவிச் சிறுவர்கள், தாய்மார் மற்றும் பெரியவர்கள் சிங்கள ஆயுதப் படைகளால் நாள்தோறும் படுகொலை செய்யப்படுகின்றனர். அதனால் தான் ஒரு போர் நிறுத்தத்தை நோக்கி சிறிலங்கா அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டிய அவசர தேவை உள்ளது.
 
‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்’ என்ற பெயரில் தமிழ் மக்களை வேரறுக்க சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுடன் இணைந்து போக வேண்டாம் என அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த போரை உடனடியாக நிறுத்தி, தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு, பேச்சுவார்த்தை ஒன்றுக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • மாயா
    மாயா

    //விடுதலைப் புலிகளுடனான இந்த போரில் சிங்களப் படையினருடன் இந்தியப் படையினரும் இணைந்து போர் புரிகின்றனரா?
    சிங்கள மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் மிக உயர்ந்த மட்டத்தில் இராணுவம் சார்ந்த ஒத்துழைப்பு இருக்கின்றது என்பதை என்னால் சொல்ல முடியும்.//

    – இந்திய இராணுவத்தினர் முன்னரங்களில் சண்டை செய்கிறார்கள்
    – 300 இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள்
    ஆகிய செய்திகள் பொய்யா?

    Reply
  • thurai
    thurai

    //சுதந்திரத்திற்கும், சுயரியாதைக்குமான தாகம் தான் குடிகொண்டுள்ளது என்பதை உலகம் முழுவதிலும் உங்களால் பார்க்க முடியும்//

    சரியாகத்தான் சொல்கிறார். இலங்கையைவிட உலகமுழுவதிலும் தான் புலிக்கு ஆதரவும் தமிழீழக் கூச்சல்கழும். புலிககளிற்கும் இலங்கையில் வாழும் தமிழர்களிற்கும் எந்தத் தொடர்புமில்லை.

    வன்னியில் கேடயங்களாக புலிகள் வைத்திருக்கும் மக்கள்தான் இலங்கையில் புலிகளின் இறுதிவேர்.

    துரை

    Reply
  • thevi
    thevi

    கூட்டங் கூட்டமாக எம்மை கொல்லுங்கள் புலிகளே எம்மை தப்பியோட விடாதீர்கள் என்பதா தமிழ் மக்களின் அரசியல் விருப்பு?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கும், மக்கள் இப்போது தாம் வசிக்கும் பகுதிகளிலேயே அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அவர்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கும் போர் நிறுத்தம் ஒன்று அவசியமாகும்.//

    அரசாங்கமும், வெளிநாடுகளும் இலவசமாக வன்னிமக்களுக்கு அனுப்பும் உணவுப் பொருட்களை அரச அதிபர்களிடம் பறித்து, அதை அந்த அப்பாவி மக்களுக்கு அறாவிலையில் விற்றுப் பணம் பார்க்கும் உங்களின் இநந்தக் கூற்று, ஆடு நனைகின்றதென்று ஓநாய் அழுவது போலிருக்கின்றது.

    Reply
  • s.s.ganendran
    s.s.ganendran

    இதற்கு என்ன பதில் சொல்வது நடேசனுக்கு நல்ல ஒரு இடமாகத் தேடவேணும் அதற்கு அங்கோடை பொருத்தமாக இருக்கும்

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஞானேந்திரன்; அப்புறம் அங்கோடை நோயாளிகளின் கதி என்னாகும் என யோசித்தீர்களா??

    Reply
  • ramesh
    ramesh

    நடேசன் அண்ணாவால சிங்கள பெண்ணுடன் வாழமுடியுமெண்டால் தமிழர்களும் சிங்களவர்களும் ஒரே நாட்டில ஏன் சமாதானமா வாழமுடியாது?

    Reply
  • மாயா
    மாயா

    ramesh, அவங்க எது செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும்.
    வேற யாரும் செய்தாதான் துரோகம். (புலியா இருக்கும் வரைக்கும்…)

    Reply