கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடு?

tna-mp-22.jpgபேச்சு வார்த்தை நடத்த வருமாறு இந்திய அரசாங்கம் விடுத்த அழைப்பை நிராகரித்தமையால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் கருத்து முரண்பாடுகள் வலுவடைந்து வருவதாக தெரிய வருகின்றது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ் சங்கர் மேனன் விடுத்த அழைப்பை நிராகரித்தமையால் கூட்டமைப்பு பிளவை நோக்கி இட்டுச் செல்லப்படுவதாகத் தகவல்கள் தெரிவித்தன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • s.s.ganendran
    s.s.ganendran

    இவர்கள் பிரிந்த்தால் என்ன? ஒற்றுமையாய் இருந்த்தால் என்ன? இவர்களால் மக்களுக்கு என்ன பயன்? மாதா மாதம் சம்பளமும் அவர்களுக்கு போகுதுதானே சனம் போட்ட வாக்குகளுக்காக கொழும்பில் இருந்து கொண்டும் வெளி நாடுகளில் இருந்து கொண்டும் ஒரு சில வார்த்தைகளை சொல்லத்தானே வேண்டும்

    வாழ்க தமிழ் தேசிய கூட்டமைப்பு

    Reply
  • பல்லி
    பல்லி

    இது ஒன்றும் விளையாட்டான செய்தியல்ல. தெரிந்தோ அல்லது தெரியாமலோ தமிழர் பிரதநிதிகள் என உலகம் நம்புவதால் இவர்களை சீக்கிரம் தூக்கி எறிய முடியாது. ஆனால் அவர்கள் அறிவற்றவர்கள் என்பதும் பல்லியின் கருத்தல்ல. புலியின் பிடியில் ஏதோ ஒரு வழியில் இவர்கள் மாட்டி விட்டனர். நேற்று சிவாஜிலிங்கம் இந்தியாவின் அழைப்பை ஏற்ப்பது நல்லது என சொன்னார்(GTV) ஆனால் சம்பந்தர் சேனாதி ஏற்க்கனவே இந்தியாவின் செலவில் இந்தியாவிலேயே தங்கியுள்ளனர்.

    ஆக கிட்டதட்ட (இது அந்த கிட்டதட்ட அல்ல) 14 கூத்தமைப்பு இன்று சோனியாவின் செல்ல பிள்ளைகள். (சிவாஜி உட்பட) புலி அழிந்து விட்டால் புலிக்கு எதிரான கருத்து இவர்களிடம் இருந்து தான் புறப்படும்.ஆக இவர்கள் இந்தியாவின் அழைப்பை ஏற்று கொண்டு எப்போது சந்திப்பென உத்தரவாதமும் டெல்லிக்கு கிடைத்து விட்டது. ஆனால் புலிக்காக சில சம்பிரதாய நிகழ்வுகளை அவர்கள் தற்போது செயல்வடிவம் கொடுப்பதே உன்மை.

    சர்வதேசத்துக்கு இந்திய அரசு இறுதியாக சொல்லியுள்ள செய்தி தமிழர் பிரச்சனையை தீர்க்க தமிழர் தலைவர்களை கூத்தமைப்பை) பேச அழைத்துள்ளோம் ஆனால் அவர்கள் வர வில்லை. இதை உங்களை (சர்வதேசத்தை) கேள்விகேக்கும் போராட்டங்களுக்கு தெரியபடுத்தவும் என்பதே.(இதை பல்லிக்கு சொன்னது 22ல் ஒன்று)

    Reply
  • Row boy
    Row boy

    First LTTE then The TNA made everything worse to tamil People

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இவர்கள் மக்கள் தொண்டர்கள் என்று சொல்லிக் கொண்டே அந்த மக்களின் ஓட்டைப் பெற்று அந்த மக்களையே மறந்து வாழ்பவர்கள். சிறிகாந்தா; இந்தியா தேர்தலுக்காக தம்மை பேச வருமாறு அழைப்பதாகவும், அதனால் அதை ஏற்றுக் கொள்ளவில்லையென்று வீராப்பாய் பேசுகின்றார். சுரேஸ பிறேமச்சந்திரன் தாங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே தம்மை பேச வரும்படி இந்தியா அழைத்ததென்கிறார். கூத்தமைப்புத் தலைவரோ வழமை போல் மெளனம் காக்கின்றார். இவர்கள் கூத்தே இன்று பெரும் கூத்தாகிவிட்டது. இவர்கள் ஒன்றாக இருப்பதாலோ அல்லது பிரிந்திருப்பதாலோ மக்களுக்கு ஒன்றும் நடக்கப் போவதில்லை.

    Reply
  • BC
    BC

    s.s.ganendran-இவர்கள் பிரிந்த்தால் என்ன? ஒற்றுமையாய் இருந்த்தால் என்ன? இவர்களால் மக்களுக்கு என்ன பயன்?
    மிகவும் சரியே.தமிழ் மக்களுக்கு பயன் எதுவும் இல்லை.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இவர்கள் தமிழரின் பிரதிநிதிகள் அல்ல புலிகளின் பிரதிநிதிகள். புலிகள் போடும் வேஷங்களில் ஜனநாயக தேர்தலும் ஒன்று. அதில் தெரிவுசெய்து உலகிற்கு ஆடவிடப்பட்ட பாத்திரங்கள்.

    Reply
  • Nasar
    Nasar

    கூட்டமைப்பினரின் இந்திய காங்கிரஸ் சந்திப்பு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு கருணாநிதியால் தொடுத்துவைக்கப்பட்ட ஒன்று. கருணாநிதிக்கும் காங்கிரசுக்கும் தமிழ்நாட்டு ஓட்டு வேணும். அதற்கு இந்த சந்திப்பை வைத்தே தமிழ்நாட்டத் தமிழர்களை வாங்கிவிடலாம். கருணாநிதிக்கு அரளை பெயர்ந்தவிட்டதென்று யார் சொன்னது?

    நாசர்

    Reply
  • WANNIYAN
    WANNIYAN

    //தேசியக் கூட்டமைப்பினர் இச்சந்திப்பிற்குச் செல்ல எடுத்திருக்கும் முடிவும் அந்த முடிவுக்கு புலம்பெயர் தமிழர்களை காரணம் காட்டும் செயலும் – உலகத் தமிழர்கள் நடத்தி வருகின்ற தூய்மையான போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி அவர்களது தெளிவான அரசியல் கோரிக்கைகளை மழுங்கடித்து அவர்களது உணர்வுகளைக் காயப்படுத்தி தமிழினத்திற்கு இழைக்கும் பச்சைத் துரோகம்” என்று அமெரிக்காவில் உள்ள தமிழ் செயற்பாட்டாளர் ஒருவர் சிவக்கும் கண்களுடன் கூறினார்.//புதினம்.கொம்
    இப்படி நீங்களெல்லாம் சிவந்த கண்களுடன் (மப்பு) நிதானமில்லாமல் செய்கின்ற வேலையால்தான் இன்று தமிழினம் உலகமெங்கும் செல்லாக்காசாய்ப் போய்க்கிடக்குது.

    Reply
  • MUKILVANNAN
    MUKILVANNAN

    srikantha, sambantham, mavai senathirajah have history in our time, they have only limited freedom to act. either they can be proscuted or arrested. present srilanka is different then we used to known.

    i think they are party representing the tamil community.

    Reply