பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து நாளை (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். இலங்கையில் படுகொலை செய்யப்படும் தமிழர்களை காப்பாற்ற கோரி, புதிய தமிழகம் கட்சி சார்பில் சென்னையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மெமோரியல் ஹால் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கையில் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியி கிருஷ்ணசாமி,
பக்கத்து நாடான இலங்கையில் தமிழ் இனம் கூண்டோடு அழிக்கப்பட்டு வருகிறது. 3 லட்சம் தமிழர்கள் 20 கி.மீ. சதுர பரப்பளவிற்குள் முடக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு குடிக்க தண்ணீர், சாப்பாடு மருத்துவ வசதிகள் எதுவும் இல்லாமல் துன்பப்பட்டு வருகின்றனர். ஆடு, மாடுகளை பட்டிக்குள் அடைப்பது போல குறிப்பிட்ட ஒரு எல்லை பகுதிக்குள் அடைத்து வைத்து தாக்குதல் நடத்தி, அவர்களை குண்டு வீசி கொலை செய்து வருகின்றனர்.
இலங்கையில் கொல்லப்படும் தமிழ் மக்களுக்காக உலக நாடுகள் குரல் கொடுத்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தியா வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்து வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இலங்கையில் கொல்லப்படும் தமிழ் மக்களை காக்க இந்தியா முன்வரவேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி செய்யவேண்டும். இலங்கை தமிழ் மக்கள் காப்பாற்றப்பட வேண்டும்.
எங்களுடன் உள்ள கட்சிகள் மற்றும் எங்களுக்கு ஒத்துழைப்பவர்களுடன் இணைந்து இலங்கை தமிழர்களுக்காக போராட்டங்கள் நடத்தப்படும். இது குறித்து நாளை அறிவிக்கப்படும்.பாராளுமன்ற தேர்தலில், புதிய தமிழகம் கட்சி யாருடன் கூட்டணி என்பது குறித்து 13 ந் தேதி(திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என்றார்.
MUKILVANNAN
THEIR ALLREADY IN THE COUNTRY HELPING THE SRILANKAN GOVERMENT,AND REDUCING THE TAMIL POPULATION.VERY RECENTLY THEY DROPPED THE SWEATS IN ANANTHAPURAM BLESSED MANY CIVILIONS AND THE TAMIL REBELS.WHICH BROUGHT THOSANDS OUT TO PROTEST AGAINST THE SRILANKAN GOVERMENT,ALL OVER EUROPE.
AND ITS BELIP AMONG THE TAMILS OUR NEIGHBOURING COUNTRY TESTING THEIR WEAPONS ON INNOCENT CIVILIONS.