திமுக, அதிமுக அணியினர் இலங்கை தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவதால், உண்மையான தமிழ் இன உணர்வாளர் அமைப்புகளை ஒருங்கிணைக்கப் போவதாக லட்சிய திமுக தலைவர் விஜய டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக, அதிமுக தலைமையிலான இரண்டு அணிகளுமே இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவை. இதனைத் தோலுரித்துக் காட்டுவதே எங்கள் கடமை. உண்மையான தமிழ் இன உணர்வாளர் அமைப்புகளை ஒருங்கிணைக்கிற முயற்சியில் ஈடுபடப் போகிறோம். அப்படி அமைகிற அமைப்புகளோடு சேர்ந்து குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிடப் போகிறோம்.
கள்ளக்குறிச்சி, திருச்சி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, இராமநாதபுரம், சிவகங்கை, மத்திய சென்னை உள்ளிட்ட சில தொகுதிகளில் போட்டியிடுவது பற்றி யோசித்து வருகிறோம். இதில் கள்ளக்குறிச்சி தொகுதியில் நிச்சயம் போட்டியிடுவோம்.
விஜயகாந்த் அந்தத் தொகுதியில் அவரது மைத்துனரை நிறுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர்கள் பிரச்னையாகட்டும், தேர்தல் கூட்ட ணி குறித்த பிரச்னையாகட்டும் அவரைப் போல் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியவர்கள் இல்லை. பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பிரசாரம் மேற்கொள்ளயிருப்பதால் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து யோசித்து வருகிறேன். அமையும் சூழலைப் பொறுத்து தேர்தலில் போட்டியிடுவேன் எனக் கூறினார்.
பல்லி
அழிவது தமிழன். அதனால் அவர்களுக்கே.போடலாம் நாமம்.
Kullan
இலங்கைத்தமிழ் பிணங்கள் இந்தியத் தேர்தல் சந்தையில் நல்ல விலை போகிறது. காத்துள்ளபோதே தூத்த நினைக்கிறார்கள் அரசியல் சாணக்கியர்கள்.
பார்த்திபன்
நீங்கள் இப்படி இடைக்கிடை அறிக்கை விடுவதனாலேயே, உங்க ஞாபகமும் இடைக்கிடை எங்களுக்கு வருகின்றது.