திரு வண்ணாமலை பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் குருவை ஆதரித்து பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், நான் 30 ஆண்டுகள் மருத்துவராக இருந்து நோயாளிகளின் நாடி பிடித்து சிகிச்சை அளித்தவன். தற்போது அரசியலில் நாடி நரம்பை பிடித்து பார்ப்பவன். அதை வைத்துதான் சொல்கிறேன். தமிழகத்தில் அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும்.
1998ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 5 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றோம். அப்போது எங்களை டெல்லிக்கு அழைத்து சென்று ஒரு அமைச்சர் பதவியை வாங்கி கொடுத்தார்கள். அதன் பிறகு திமுகவுடன் கூட்டணி வைத்து 8 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றோம். 2001ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலில் 22 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களில் வெற்றி பெற்றோம். அதன்பிறகு திமுகவுடன் 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றோம். 13 இடங்களில் குழி பறித்து விட்டார்கள்.
கூட்டணி என்றால் அதிமுகவுடன் வைப்பதுதான் இயற்கையான கூட்டணி. அதிமுகவினர் எதிர் அணியில் இருந்தாலும் நம்மை முகமலர்ச்சியோடு பார்பார்கள். திமுகவினர் நம்மோடு கூட்டணியில் இருந்தாலும் சிடு சிடு என்றுதான் பார்ப்பார்கள். அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறுவதற்கு மக்கள் சக்தியே காரணம். இந்த மக்கள் சக்தி ஜெயலலிதாவிடமே உள்ளது என்றார்.
msri
வைத்தியர் ராமதாசிற்கு மூளைச் சலவை வைத்திய்ம் தேவை!
பார்த்திபன்
உந்த மக்கள் சக்தி எங்கேயிருக்கெண்டு தேடுவதற்கோ ஒவ்வொரு தேர்தலிலும் அணி மாறிக் கொண்டிருக்கின்றீர்கள். பார்த்துங்கோ உந்த மக்கள் சக்தி தான் அண்ணன் வைகோவிற்கும் ஆப்பு வைத்தது. அடுத்த சட்டமனறத் தேர்தலில் தங்களுக்குத் தான் ஆப்பு வரும். எப்படியும் அதற்கிடையில் நீங்கள் அணி மாறிடுவீங்க தானே??