தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய வெளியுறவுச் செயலரின் அழைப்பையேற்று பேச்சு வார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. இந்த பேச்சுவார்த்தை வரும் 16ம் தேதி நடக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே தமிழ்நாட்டிலுள்ள சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகிய மூன்று உறுப்பினர்களுடன் மாவை சேனாதிராஜா நேற்று தமிழகம் சென்று ஆலோசனை நடத்திய பின்னர்தான இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதே நேரம், இந்தியாவின் அழைப்பை கூட்டமைப்பு உறுப்பினாகள் சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக என்.ஸ்ரீகாந்தா, இலங்கைப் போரை இந்தியாதான் நடத்துகின்றது என்றும் முதலில் இந்தியா போரை நிறுத்தட்டும். அதன்பின் நாம் அவர்களின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைக்கு செல்வோம் என அறிக்கை விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தை நடைபெறுவதில் சிக்கல் நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பல்லி
இந்த பேச்சு வார்த்தையில் கூதமைப்புக்கு மிகபெரிய ஆச்செரியம் காத்திருக்கு. இதன் பின் சிலர் தாம் கூதமைப்பல்ல புலியமைப்புதான் என சொல்லகூடும். பலர் தாம் இதுவரை விட்ட தவறை உனர்ந்து புலிக்கு ஆகாதவர்களாக மாறநேரிடலாம்.