ஹமாஸ் போராட்ட குழுவினருக்கு ஈரான், சிரியா மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு ஆதரவாக உள்ளது. இவர்கள் அனைவருமே இப்பகுதியில் அமெரிக்காவின் கொள்கையை எதிர்க்கின்றனர்.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தியில், ‘‘ ஹமாஸ் தாக்குதல், ஆக்கிரமிப்பாளர்களின் முன்னிலையில் பாலஸ்தீன மக்களின் நம்பிக்கைக்கு சான்றாக உள்ளது. ஹமாஸ் அமைப்பினருக்கு பாலஸ்தீன பகுதி மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இதர நாடுகளிலும் ஆதரவாளர்கள் உள்ளனர்.’’ என தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தாக்குதலால் பெருமிதம் அடைகிறோம் என ஈரான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் கூறியுள்ளன. இந்த சூழலுக்கு இஸ்ரேல்தான் பொறுப்பேற்க வேண்டும் என கட்டார் கூறியுள்ளது.