இன்றும் போராட்டங்கள் தொடர்கிறது! நேற்று பாரிஸில் 210 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது! : த ஜெயபாலன்

Protest_London_20Apr09இலங்கை அரச படைகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் ஊடுருவிக் கொண்டிருக்க பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் புலம்பெயர்ந்த தமிழர்கள் மிகவும் உணர்ச்சிகரமான போராட்டங்களில் குதித்துக் கொண்டு உள்ளனர். குறைந்தது கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மரணத்தின் விளிம்பில் இருந்து 30000க்கும் மேற்பட்ட மக்கள் எதிர்காலம் எப்படி இருக்குமோ இப்போதைக்கு உயிரைக் காப்பாற்றிக் கொள்வோம் என்று அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துகொண்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் புலிகளின் வசமுள்ள இறுதிப் பத்திற்கும் சற்று அதிகமான கிலோ மீற்றர் நிலப்பரப்பும் அரச படைகளின் கட்டுப்பாட்டிற்று வந்தவிடும் என படைத்தரப்பு தெரிவிக்கின்றது.

பெரும்பாலும் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியைவிட்டு வெளியேறும் போது புலிகள் அரச படைகளுடன் நேருக்கு நேரான மோதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நேற்றைய யுத்தத்திலும் புலி ஆதரவு ஊடகங்கள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை 1500 வரை இருக்கும் என செய்திகளை வெளியிட்டு உள்ளனர். இச்செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு உள்ளன. இழப்புக்கள் பற்றிய செய்திகள் புலம்பெயர் தமிழ் மக்களை மிகவும் உணர்ச்சிகரமாக வைத்துள்ளது.

ஏப்ரல் 5ல் புலிகளின் முக்கிய தளபதிகள் முக்கிய போராளிகள் இழக்கப்பட்டு தலைவர் வே பிரபாகரன் காப்பாற்றப்பட்டார். ஆயினும் புலிகளின் தலைமையை ஆபத்து நெருங்கியதை அடுத்து மேற்கு நாடுகள் முழுவதும் போராட்டங்கள் முடக்கிவிடப்பட்டது. உண்ணாவிரதப் போராட்டங்களும் முடக்கிவிடப்பட்டது.

இப்போராட்டங்களின் மையமாக பிரித்தானியாவின் இதயப்பகுதியான வெஸ்ற்மினிஸ்ரர் மாறியுள்ளது. இங்கு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் 15வது நாளாகத் தனது போராட்டத்தை தொடர்கிறார். இவரது நிலை கவலைக்குரியதாக இருக்கையில் நேற்றுக் காலை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்து சந்தித்து போராட்டதை முடிவுக்கு கொண்டு வரலாம் என்ற நிலை அதற்கு முதல்நாள் இருந்தது. ஆனால் இலங்கை இராணுவம் புலிகளின் இறுதியாக உள்ள கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் முன்னேறி மக்கள் வெளியேறுவதற்கான பாதையை திறந்ததை அடுத்து போராட்டம் மேலும் உணர்ச்சிகரமாக மாறியுள்ளது. நேற்றுமாலை வெஸ்ற்மினிஸ்ரர் பகுதியைச் சுற்றிய போக்குவரத்துக்கள் முற்றாகத் தடைப்பட்டன. நூற்றுக்கணக்கில் பொலாசாரைக் கொண்டு வந்து இறக்கி வீதிகளை போக்குவரத்திற்கு அனுமதிக்க எடுத்த முயற்சி ஆயிரக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டத்திற்கு முன்னால் பலனளிக்கவில்லை. சிலர் பாய்களைக் கொண்டு வந்து வீதியில் விரித்து படுத்தும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

ஏற்கனவே ஜி20 மாநாட்டை ஒட்டி இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கையை எடுத்த பொலிசார் அதில் ஒரு ஆர்ப்பாட்டக்காரர் மரணமானது தொடர்பிலும் அவர்களது நடவடிக்கை தொடர்பிலும் மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளனர். அவ்வாறான மற்றுமொரு நடவடிக்கையை மேற்கொள்ள பொலிசார் துணியவில்லை. மேலும் ஆர்ப்பாட்டக் காரர்கள் யாரும் வன்முறை நோக்கோடு செயற்படாததால் பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் முரண்பாடுகள் எழவில்லை. ஆனால் நாளையும் பிரித்தானியாவின் இதயப்பகுதியின் போக்குவரத்துக்கள் தடைப்பட்டால் அப்பகுதியின் சகஜநிலை பாதிக்கப்படும். பொருளாதார மையத்தில் மிகுந்த பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இப்போராட்டம் அப்பகுதியின் ஸ்தீரத் தன்மையைப் பாதிக்கும். மேலும் இவ்வகையான போராட்டங்களை ஏனைய சமூகங்களும் மேற்கொள்ள முற்படலாம். அது அப்பகுதியின் பொருளாதார நடவடிக்கைகளைப் பாதிக்கும் என்பது கூர்ந்து அவதானிக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்திற்கு தடையை ஏற்படுத்தும் பட்சத்தில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிஸார் இறங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இதே போன்று பிரான்ஸில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக பிரெஞ் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆயுதக் கூட்டம் என்று விபரித்துள்ள பொலிஸ் அதிகாரி அவர்கள் போக்குவரத்தில் ஈடுபட்ட மூன்று பஸ்கள் மீதும் பொலிசார் மீதும் பொருட்களை வீசியதாகக் குற்றம்சாட்டி உள்ளார். ஒரு பொலிஸ் அலுவலர் உட்பட நான்கு பேர் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் பொலிஸ் அதிகாரி ராய்டர் செய்தி ஸ்தாபனத்திற்கு தெரிவித்து உள்ளார்.  ஆயுதக் கூட்டம் என்பது பொதுவாக கத்தி துப்பாக்கி இருப்புக் குற்றி போன்றவற்றை வைத்துள்ளவர்களுக்கே பயன்படுத்தவது வழக்கம். ஆனால் அப்பதம் தற்போது ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

பாரிஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்தை தடைசெய்ய முற்பட்ட ஆர்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் தண்ணீர் அடித்தும் அப்புறப்படுத்தினர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஸ்கூட்டர் ஒன்றுக்கு நெருப்பு வைத்ததாகவும் 3 பஸ்களினதும் இரு கார்களினதும் ஒரு லொறியினதும் முகப்புக் கண்ணாடிகளை உடைத்ததாகவும் ஏப்பி செய்தியாளர் பிரான்ஸ் 24 செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்து உள்ளார். பொலிசார் மீதும் குப்பைகளும் போத்தல்களும் எறியப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட 210 பேரை கைது செய்ததாக பிரெஞ் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இவற்றுக்கிடையே இன்று கனடாவின் ஒட்டோவா நகரிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது மாணவர்கள் விதிகளை மறித்து போக்குவரத்துக்களை தடைப்படுத்தினர்.

இலங்கை அரச படைகள் தங்கள் படைகளை புலிகளின் கடைசிச் சில கிலோ மீற்றர்களுக்கள் நகர்த்த புலம்பெயர் தமிழர்கள் தங்கள் போராட்டங்கள் பலனளிக்கவில்லை என்ற விகாரத்துடன் உணர்ச்சி பொங்க தங்கள் இறுதிப் போராட்டத்தை தொடர்கின்றனர். யுத்தத்தை நிறுத்தக் கோரி யுத்தத்தின் முடிவில் இவர்கள் ஆரம்பித்த போராட்டம் புலி அலையில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இதனால் மண்ணோ மக்களோ காப்பாற்றப்படவில்லை.

புலிகளின் தலைமை இரு வாரங்களிற்கு முன்னரயே எஸ்கேப் ஆகிவிட்டது என்று உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவித்த போதும் அவர் உள்ளேயே இருக்கின்றார் என்று 24 மணிநேர காலக்கெடுவை இலங்கை அரசு அவர்களுக்கு வழங்கி உள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டது போல் புலிகளின் தலைமை இப்பகுதியைவிட்டு வெளியேறி இருந்தால் இராணுவம் பாரிய தாக்குதல்கள் இன்றி முன்னேற முடியும். ஆனால் அரசு குறிப்பிடும்படி புலிகளின் தலைமை இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்குள் இருந்தால் மிக உக்கிரமமான மோதலுக்கான வாய்ப்பு உள்ளது. இன்னமும் 100000 மக்கள்வரை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் உள்ளனர். அவர்களுக்கு மத்தியிலேயே அவ்வாறான ஒரு மோதல் இடம்பெறும். இது இதுவரை சந்தித்திராத அவலதை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் தவிர்க்க முடியாதது. ( Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன் , தலையோடு வந்தது தலைப்பாகையோடு போனது. ‘தலைவர் எஸ்கேப்’ : த ஜெயபாலன் )

நான்காயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்படடும் அதனைப் போன்று இரு மடங்கினர் காயமுற்றும் நடந்த இந்த யுத்தம் அழிவைத் தவிர எதனையும் தரவில்லை. இலங்கை அரசும் புலிகளும் சர்வதேச சமூகமும் இந்த அழிவைத் தடுத்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. இலங்கை அரசோ புலிகளோ காலம் காலமாக எடுத்துக் கூறப்பட்ட அரசியல் தீர்வு பற்றி அக்கறையற்று இருந்தனர். எப்போதும் இராணுவத் தீர்வு நோக்கியே அவை செயற்பட்டன. இன்றும் செயற்படுகின்றன. அதற்கு வேறுபாடின்றி இரு தரப்பும் மக்களைப் பணயம் வைத்து காய்களை நகர்த்தினர். இந்த உண்மையை கண்டுகொள்ளாத புலம்பெயர்ந்த தமிழர்கள் புலிகளையும் தமிழர்களையும் ஒன்றாகவே பார்த்தனர். அதனால் வன்னி மக்களின் பாதுகாப்பை இரண்டாம் பட்சத்திலேயே வைத்தனர். இவர்கள் அனைவரும் விட்ட தவறிற்காக வன்னி மக்கள் அதி உச்ச விலையச் செலுத்தினர். இந்த வலி வன்னி மக்களை வாழ்நாள் முழுவதும் தொடரும். இந்த மனித அவலத்தினை தடுக்க முடியாத வெறும் சாட்சிகளாக நாங்கள் ஆகிவிட்டோம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

22 Comments

  • அறிவானவன்
    அறிவானவன்

    THE FOLLOWING WAS PREDICTED IN OCTOBER 2008:
    SATURDAY, OCTOBER 11, 2008 by G. Hettigoda

    (October 12, Colombo, Sri Lanka Guardian) A well respected Hindu astrologer from Karnataka, India, Mr. A. K. P. Theventhra Rajh predicts that between November 8 and 15, 2008 is a very critical period for Velupillai Prabhakaran, the leader of the Tamil Tigers, the terrorist group fighting to carve out a separate state for the Tamil minority in Sri Lanka. Speaking to some local media people, Mr. Theventhra Rajh has reportedly told that Prabhakaran is seriously ill due to stress caused by the constant fear for his life. Prabhakaran, who is also a chronic diabetic, requires regular insulin shots, which has been disrupted owing to constant change of hideout due to aerial bombing by the SL forces.

    However, Mr. Theventhra Rajh predicts that Prabhakaran’s death will come not from the SL forces, but from a natural cause, more likely due to a heart attack, or stroke resulting from diabetic complications. Mr. Theventhra Rajh has been consulted by a group of LTTE sympathizers in Tamil Nadu, along with several members of the Tamil National Alliance, who had visited the famous Hindu astrologer last week to conduct a Krishna pooja to bestow blessings on Prbhakaran. Following this unexpected discloser of the impeding doom of the LTTE leader, the visitors had left the temple in tears, and had urged the others who were present during the pooja not to speak to any media person. However, it was Mr. Theventhra Rajh himself who later informed the media. Mr. Theventhra Rajh is a very popular astrologer among both Sinhalese and Tamils in Sri Lanka. – Sri Lanka Guardian

    Reply
  • thurai
    thurai

    25 வருடங்களிற்கு முன் புலம்பெயர்ந்தவர்களில் பலரிற்கு யாழ்ப்பாண்த்திற்கும் கொழும்பிற்கும் இடையில் எவ்வளவு தூரமெனத் தெரியாதவர்கள். அவர்கழும் அவ்ர்களின் பிள்ளைகழும் செய்யும் ஆர்பாட்டம் பற்ரி பேசிப்பயனில்லை.

    துரை

    Reply
  • BC
    BC

    புலம்பெயர்ந்தவர்களில் பலரிற்கு யாழ்ப்பாண்த்திற்கும் கொழும்பிற்கும் இடையில் எவ்வளவு தூரமெனத் தெரியாதது மட்டுமல்ல GTV தீபம் புதினம் மற்றும் புலி ஊடகங்கள் சொல்பவற்றை தவிர வேறு எதுவும் தெரியாது.

    Reply
  • john
    john

    இழப்புகள் வந்தால்தான் தமிழீழம் கிடைக்கும் என்றவர்கள் தமிழர்களின் பெருந்தொகையான இழப்பைக் கண்டு உணர்ச்சி வசப்படத் தேவையில்லையே. அப்படி உயிர் இழப்பை விரும்பாதவர்கள் தலைவரிடம் சனத்தை விடுவிக்கும்படி கோரலாமே? என்ன கூத்துகள் நீங்கள் காட்டினாலும் ஆமி தொடர்ச்சியாய் முன்னேறப் போவது உறுதி என்றும் உங்களுக்கு தெரியும்தானே?

    Reply
  • pirapa
    pirapa

    கனடாவில் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க முன்வந்த வயோதிப பெண்ணை அவரது பிள்ளைகள் உண்ணாவிரத்ததை முறித்து தமது தாயாரை தூக்கிச் சென்றுள்ளதாக அறியவருகிறது அப்படி அவர்கள் தமது தாயாரை தூக்கிப்போகும் போது புலிகள் தடுத்ததாகவும் அதன் போது முதலில் உங்கள் தாய்மார்களை இங்கே கொண்டுவந்து உண்ணாவிரம் இருக்கவிடவும் பிறகு எமது அம்மாவை உண்ணாவிரதம் இருக்க விடுகிறோம் என்றனர். மேலதிகமாக தகவல்கள் தெரிந்தால் இங்கே தெரிவிக்கவும்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ஜேர்மனியில் “டிசில்டோவ்” நடந்த உண்னாவிரதத்துக்கு அவிச்சுக்கொண்டு போனவர்களிடம் புலிபிரமுகவர்கள் அதை வாங்கி ஒன்றரை(1.50) யூரோவுக்கு விற்று பணம் சேர்த்ததாக செய்தி வந்திருக்கிறது. நம்பமுடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை.

    ஜோன் கூத்துப்போட்டே! குடியைகெடுதவர்கள் இந்த புலம் பெயர் தமிழர்கள். ஊரை கெடுத்து குட்டிசுவராக்கியாச்சு இப்ப இங்குள்ளவர்களில் கண்பார்வை பட்டிருக்கிறது. இது எங்கு போய் முடியும் என்று சொல்லமுடியாது.முன்கூட்டியே தெரிந்தவர்கள் யாராவது அறியத்தருவார்களா?

    Reply
  • RAJ
    RAJ

    AFP – Deux cent dix personnes ont été interpellées lundi soir à Paris,
    VIDEO: http://www.france24.com/fr/france

    Reply
  • thilac
    thilac

    அன்பு பாசம் எல்லாம் வெசம்

    Reply
  • thurai
    thurai

    புலத்தில் இளைய சமுதாயத்தின் போரட்டமாக வர்ணிக்கப்பட்டு உருவேற்கப்படுகின்றது. ஈழத்தமிழரின் பிரச்சினையை 30 வருடக் குத்தகைக்கு எடுத்து, ஈழத்திலுயிர்களையும், உடைமைகளையும் அழிததுவிட்டு, புலத்தில் பிடுங்கக்கூடிய பணங்களையெல்லாம் பிடுங்கியெடுத்துவிட்டு இளைய சமுதாயத்தின் தலையில் பிரச்சினையை சுமத்தியுள்ளார்கள்.

    பசுவிற்கு புல் போடாமல் பால் கறந்தெடுத்துவிட்டு, பசு மரணிக்கும் போது எலும்பும் தோலுமாய் இறைச்சிக்கடைகு விற்பவர்கள்தான் புலத்துப்புலிகள்.

    துரை

    Reply
  • palli
    palli

    பாரிஸில் நடந்த சம்பவம் மிகவும் வேதனை அழிக்கிறது. சரி பிழைக்கு அப்பால் எமது இளைய சமுதாயம் கல்வி இழந்து வேலை இழந்து இன்று நடு ரோட்டிலும் சிறையிலும் வாட (புலம்பெயர் தேசத்திலும்) மனது வலிக்கிறது. உன்மயில் பாரிஸ் தமிழரை அடவடி போராட்டல் நடத்த தூண்டியது இங்கு லண்டனில் நடந்த அராசக போக்கான ஒன்று கூடலே. இதை…… தீபமூடாக (தொற்றுநோய் போல்) சர்வதேச தமிழருக்கு பரப்ப அவர்களும் தாமும் லண்டனுக்கு சழைத்தவர்கள் அல்ல என முறுக்கெடுக்க சில நாடுகள் பேச்சால் அதை தடுத்தாலும் பாரிஸ்(வல்லரசு அல்லவா) தனது அடி பொலிஸால் மிக கொடூரமாக அவர்களை அடக்கியது இதில் சிலரை பல கிலோ மீற்றர் தாண்டி கொண்டுபோய் விட்டு விட்டார்களாம். பின்பு உறவுகள் தேடி சென்று கூட்டி வந்தனராம். ஆராஜகம் செய்பவர்களை பொலிஸாரே ஏதுவும் செய்யலாம். யாருடைய அனுமதியும் பெற தேவையில்லையென்னும் அனுமதியை அந்த நாட்டு அதிபர் சாகோஸி பொலிஸுக்கு கொடுத்துள்ளாராம். இதில் பலருக்கு பலத்த காயம் எனவும் பாரிஸ் செய்திகள். இதில் இந்த சம்பவத்தை நடத்திய புலிகளின் ஆதரவாளர்கள் சில தினங்களில் கைது செய்யபடலாம் என பேசபடுகிறது. இதில் குறிப்பட வேண்டிய விடயம் லண்டனிலும் சரி மற்றய நாடுகளிலும் சரி பிரபாகரன் 24 மணி நேரத்துக்குள் சரனடைய வேண்டும் என அரசு அறிவித்த பின்பே இங்கு அராசக கும்பலின் வெறியாட்டம் தொடங்கியது. ஆக இவர்கள் இங்கு வாழும் இளையோரை காவு கொடுப்பது தமிழ் மக்களுக்காக அல்ல அந்த ……. தலைவனுக்காகவே. இறுதியாக பல்லிக்கு கிடைத்த செய்தி இந்த அராசகத்தை நிகழ்த்தை திட்டமிட்டு கொடுத்தவர்கள். ……………………, ……………….. இன்னும் சிலரே இது கைதாகி இருக்கும் சிலரின் வாயில் இருந்து உதிர்ந்தன. எது எப்படியோ துரை சொல்வது போல் இவர்கள் பிறந்த நாட்டையும் மதிக்க மாட்டார்கள். புகுந்த நாட்டையும் மதிக்க மாட்டார்கள். இப்போதுதான் பல்லிக்கு வேலுபிள்ளை மேல் கடுப்பு வருகிறது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //ஜேர்மனியில் “டிசில்டோவ்” நடந்த உண்னாவிரதத்துக்கு அவிச்சுக்கொண்டு போனவர்களிடம் புலிபிரமுகவர்கள் அதை வாங்கி ஒன்றரை(1.50) யூரோவுக்கு விற்று பணம் சேர்த்ததாக செய்தி வந்திருக்கிறது. நம்பமுடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை.- Chandran.raja//

    புதுமாத்தளன் பகுதியிலுள்ள மக்களுக்கு இலவசமாக அரசும், உலக உணவு நிறுவனமும் அனுப்பி வைத்த உணவையே அபகரித்து, பலமடங்கு பணத்திற்கு அந்த அப்பாவி மக்களுக்கே விற்று புலித்தலைமைகளே பணம் பார்க்க, புலத்தில் அதே புலிகளின் பினாமிகள் அதே வழிகளைக் கைக் கொள்வதில் வியப்பென்ன??

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //தலைவனுக்காகவே. இறுதியாக பல்லிக்கு கிடைத்த செய்தி இந்த அராசகத்தை நிகழ்த்தை திட்டமிட்டு கொடுத்தவர்கள்.- பல்லி//

    ஐரோப்பிய நாடுகளில் வன்முறையைத் தூண்டிவிட அழைப்பை ஊடகங்கள் மூலம் விடுத்ததில் முக்கியமானவை IBC, GTV, TAMIL OLLI, DEEPAM. இவர்களின் ஊடக அனுமதியை இரத்து செய்து இந்த ஊடகங்களில் பணிபுரிந்தவர்களையும் கைது செய்து உள்ளே போட்டாலே, அரைவாசி வன்முறை அடங்கிவிடும்.

    Reply
  • padamman
    padamman

    அதை முதலில் செய்தால் இங்குள்ள இளையவர்களை காப்பாற்றமுடியும்……………..

    Reply
  • Raj
    Raj

    தமிழர் பொதுவாக கிறுக்குப்பிடித்த ஓர் இனம் தான்.அதிலும் நாம் விசேடம்.எமக்கென்னவோ பிரச்சினைகள் இருந்ததை யாரும் மறுக்கவில்லை.ஆனால் அதற்கு ஈழம் மட்டும் தான் ஒரே தீர்வு என்று எம்மை மட்டுமே சிந்தித்து உலகோடு ஒத்துப்போகாமையினதும் பிடிவாதத்தினதும் பலனே இந்த நிலை. இதற்கு புலிகள் மாத்திரமல்ல மரமண்டைகளான ஆட்களுமே காரணம்.

    பண்டாரநாயக்கா தொடக்கம் மகிந்தவரை அனைவருமே பிழையானவர்களெனில் எதிர்காலத்திலும் இதுபோன்ற ஒரு பட்டியலைத்தானே எதிர்பார்க்கமுடியும். அப்படியானால் ராஜிவ் பிழை; மன்மோகன்சிங் பிழை; மனித உரிமை ஆணையகம் பிழை; ஐ.நா பிழை; ஏன் உலகம் சொன்னதே பிழை ஆனால் நாங்கள் சொன்னதும் செய்ததும் தான் சரியென்ற புலியின் நிலை கண்டீரோ?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //தமிழர் பொதுவாக கிறுக்குப்பிடித்த ஓர் இனம் தான்.- Raj //

    நீங்கள் இப்படி எழுதியதை பிரித்தானியா இளையோர் அமைப்பினர் பார்த்தால் கோபிக்கப் போயினம். தீபம் தொலைக்காட்சியிலை இரண்டு இளையோர் வந்து பேட்டி கொடுத்தவை. அதிலை அவை சொல்லிச்சினம்; இன்று அமெரிக்கா பிரித்தானியா போன்ற வல்லரசு நாடுகள் எமது பிரைச்சினையில் பாராமுகமாக இருப்பதற்குக் காரணம், உலகத்திலேயே அதிபுத்திசாலி இலங்கைத் தமிழன் தானாம். அவர்கள் எங்கே தனிநாடு கிடைச்சு விட்டால் தம்மைவிட வல்லரசாக வந்து விடுவினமோ என்று உலக வல்லரசுகள் பயப்பிடுகினமாம். எங்கடை இளையோரினது புத்திசுவாதியீனத்தைப் பார்க்க அப்படியே கண்ணைக் கட்டுது.

    Reply
  • Lanka Expat
    Lanka Expat

    Prabhakaran has misunderstood that the world sympathy is with him. If he has brains he should think why he has no friends who can help him out with a face saving formula. The sympathy all round including from U N and many others in the West is only for the Tamil civilians kept as hostage and used as human shield by LTTE. Why not kill two birds with one stone?T amil protesters should be demonstrating against LTTE as well , for NOT laying down arms and releasing innocent Tamils. How come they don’t demand from LTTE terrorists that they surrender and enter the democratic political system to solve their problems?

    Reply
  • BC
    BC

    //Raj- இதற்கு புலிகள் மாத்திரமல்ல மரமண்டைகளான ஆட்களுமே காரணம்.//

    இந்த ஆட்கள் எல்லாம் புலிக் கொடியையும் பிரபாகரனின் படத்தையும் பிடிப்பவர்களாகதானே இருக்கிறார்கள்.

    Reply
  • thurai
    thurai

    //உலகத்திலேயே அதிபுத்திசாலி இலங்கைத் தமிழன் தானாம். அவர்கள் எங்கே தனிநாடு கிடைச்சு விட்டால் தம்மைவிட வல்லரசாக வந்து விடுவினமோ என்று உலக வல்லரசுகள் பயப்பிடுகினமாம். //

    புத்தகம் எடுத்தவையெல்லாம் பல்கலைக்கழ்கத்திலதானே இருக்கினம். போதைவஸ்து வியாபாரத்தோடு புலத்திற்கு வந்து, அகதிகளாக வ்திப்பிட் அனுமதி பெற்று, குடு குடு ஆச்சி மாரையும் கூப்பிட்டு வீட்டிலைவைத்து அரச உத்வியில் வாழவைத்தவர்கள்.

    சுவிசில் பிடித்த கள்ள ஆட்டை மறந்தீரோ, மூன்று இடத்தில் பதிந்து எடுத்த அகதிப் பண்த்தை மறந்தீரோ கள்ள ரெலிபோன் காட்டையும், கிரெடிகாட் மோசடியையும் மறந்தீரோ.

    வாழும்நாட்டிற்கு செய்தநன்மை ஒன்றையாவது சொல்லுங்கோ. சொல்ல வேண்டாம் முதலில் வழியை விடுங்கோ பஸ் போக.

    துரை

    Reply
  • BC
    BC

    //பார்த்திபன்- உலகத்திலேயே அதிபுத்திசாலி இலங்கைத் தமிழன் தானாம். அவர்கள் எங்கே தனிநாடு கிடைச்சு விட்டால் தம்மைவிட வல்லரசாக வந்து விடுவினமோ என்று உலக வல்லரசுகள் பயப்பிடுகினமாம். எங்கடை இளையோரினது புத்திசுவாதியீனத்தைப் பார்க்க அப்படியே கண்ணைக் கட்டுது.//

    அப்படி புத்திசுவாதியீனமாக இருக்கும் படி அவர்களை திட்டமிட்டே புலிகள் உருவாக்கினார்கள்.அதன் பலனை புலிகளை காப்பாற்றும் போராட்டத்தினுடாக அனுபவிக்கிறார்கள்.நான் ஒரு கட்டுரை படித்தேன் உலக தற்போதைய நெருக்கடியை தமிழீழத்தினால் மட்டுமே தீர்க்க முடியுமாம். அப்படியான ஒரு நாடு உருவாவதை வல்லரசுகள் விரும்பவில்லையாம்.

    Reply
  • மாயா
    மாயா

    இந்த அறிவிப்புக்கே இந்த ரகளை என்றால், அடுத்த அறிவிப்பில் வெளிநாடுகளிலும் தற்கொலைத் தாக்குதல்கள் நடக்கலாம்? எல்லாம் அவன் செயல்.ம்ம்………

    பிரான்ஸ் தடியடி : தண்ணியடி
    http://www.youtube.com/watch?v=ZgXiIsFlhvo

    Reply
  • Raj
    Raj

    பார்த்தீபன்’ தீபம் பேட்டியை நானும் பார்த்தேன்.ஒரு இடத்தில் (தலைவராம்- விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது)அவர் சொன்னார்;அடுத்த கட்டம் என்னவென்று தெரியாதாம் பார்த்துத்தான் தீர்மானிப்பார்களாம். இப்படிப் போகிறது இவர்களின் பிழைப்பும் போராட்டமும். அதைவிட பிரித்தானியப் பொலிசார் மற்றும் நகரபிதா ஆகியோரால் கொடி; கோரிக்கைகள் சம்பந்தமாக அறிவுறுத்தல் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளனவாம். இதைத்தானே ஐயா ஆரம்பத்திலேயே சொன்னோம்.

    Reply
  • அகிலன் துரைராஜா
    அகிலன் துரைராஜா

    வன்னிப்புலி எஜமானர்களும் அவர்களின் புலன் பெயர்ந்த ஏவல்நாய்களும் சேர்ந்து மக்களை ஒன்று திரட்டி இன்று உலகெங்கும் நடத்தும் போராட்டம் ஒரு கேலிக்கூத்தாகி விட்டது, –அகிலன் துரைராஜா நல்லூர் யாழ்ப்பாணம்

    Reply