வன்னி முகாம்களை மூடுவது மட்டும் தீர்வாகாது! : த ஜெயபாலன்

Wanni_IDPs_Queueing_for_Water._._._._._.

முகாம்களை மூடுங்கள் – கண்டனப் பொதுக்கூட்டம்

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும் 280 000 மக்களை சிறை வைத்துள்ள வன்னி முகாம்களை மூடுமாறு கோரியும் கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்று ஒக்ரோபர் 17ல் லண்டன் குயின்ஸ்மேரி பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழ் ஒருங்கமைப்பு – ரமிழ் சொலிடாரிற்றி என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்டனக் கூட்டம் நீண்ட போராட்டத்தின் ஒரு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. தமிழர்களை படுகொலை செய்வதை நிறுத்து – என்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக இந்தக் கண்டனக் கூட்டத்தை தமிழ் ஒருங்கிணைப்பு அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழர்களைப் படுகொலை செய்வதை நிறுத்து மற்றும் தமிழ் ஒருங்கிணைப்பு மேற்கொள்கின்ற போராட்டங்கள் இன்றைய சூழலில் மிக அவசியமானவையாக உள்ளது. தமிழ் அரசியல் சூழல் மற்றும் புலம்பெயர் தமிழ் அரசியல் சூழல் என்பது ஒற்றைப் பரிமாணமாகி நின்று தமிழ் மக்களை மிகமோசமான அரசியல் சூழலுக்குள் தள்ளியுள்ள நிலையில் அந்த ஒற்றைப் பரிமாண அரசியலை நிராகரிக்கின்ற இவ்வாறான போராட்டங்கள் ஊக்குவிக்கப்படுவது இன்றைய காலத்தின் தேவையாகின்றது.

தமிழர் ஒருங்கிணைப்பு சோசலிசக் கட்சியின் போராட்ட முன்னரங்க அமைப்பாகும். ஒக்ரோபர் 17ல் சோசலிசக் கட்சியின் பொதுச்செயலர் பீற்றர் ரப்பே, பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்னான போராட்டங்களை ஏற்பாடு செய்த ஜனனி பரமசோதி, சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய ஆய்வாளர் நாகர்ஜீனன் (ரமேஸ் கோபாலகிருஸ்ணன்), தமிழர் ஒருங்கிணைப்பின் சர்வதேச இணைப்பாளர் சேனன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு: PUBLIC MEETING -sat 17 october, 6pm, Queen mary university, room 210, Laws building
._._._._._.

அரசியல் பொருளாதார ரீதியாக மிகுந்த நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கின்ற இலங்கை அரசு அவற்றுக்கு சளைக்காமல் வன்னி மக்கள் தொடர்பில் திட்டமிட்ட ஒரு இன ஒடுக்குமுறையையும் இனச் சுத்திகரிப்பையும் மேற்கொள்ளத் திட்டமிட்டு உள்ளது. வன்னி முகாம்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் மிகுந்த அசமந்தப் போக்கிலேயே அரசு செயற்படுகின்றது. ஆரம்பத்தில் 80 வீதமான மக்களை நவம்பர் மாதத்திற்குள் மீள்குடியேற்றப் போவதாக அரசு அறிவித்து இருந்தது. ஆனால் யூலை 10ல் ஜனாதிபதி ராஜபக்ச நவம்பரில் 60 வீதமான மக்களை மீள்குடியேற்றப் போவதாகத் தெரிவித்தார். “We have a 180-day programme. That is our plan. In 180 days, we want to settle most of these people,” எனத் தெரிவித்த ஜனாதிபதி ராஜபக்ச ஆனால் “It’s not a promise, it’s a target.” என்றும் குறிப்பிட்டு இருந்தார். 60 வீதமான மக்களை மீளக்குடியேற்ற வழங்கிய காலக்கெடு இன்னும் இரு வாரங்களில் வந்துவிடும். 180 நாள் இலக்கும் வெகு தொலைவில் இல்லை. ஆனால் மீள்குடியேற்றம் பற்றிய தெளிவான அறிவிப்புகளை அரசு இன்னமும் வெளியிடவில்லை.

உலகின் ‘மிகச் சிறந்த’, ‘மிகக் கட்டுக் கோப்பான’ இராணுவ அமைப்பு என்று பெயரெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளை 30 ஆண்டுகள் ஆயுத வன்முறையை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளை ‘புரஜக்ற் பீக்கன்’ என்ற திட்டத்தை வகுத்து கால அட்டவணைப்படி இரு வார தாமதத்தில் இலங்கை அரசு துடைத்து அழித்தது. அவ்வளவு வல்லமையைப் பெற்றிருந்து அரசு வன்னியில் உள்ள 300 000 லட்சம் மக்களை தான் குறிப்பிட்ட ஆறு மாதங்களுக்குள் மீள்குடியேற்றத் திணறுவதற்கு அரசின் இனவாதப் போக்கைத் தவிர வேறு குறிப்பிடத்தக்க காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

வன்னி முகாம்களில் உள்ள மக்களில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலையைச் சேர்ந்த மக்கள் அவர்களது அடையாள அட்டையில் உள்ள பிரதேசங்களில் கொண்டு சென்று விடப்பட்டு உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவித்தார். ஓக்ரோபர் 13 தேசம்நெற்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டார். இப்பகுதிகளில் கொண்டு சென்று விடப்பட்டு உள்ளவர்களது ‘பூர்வீகம் அப்பிரதேசங்களாக இருந்தாலும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் அப்பிரதேசங்களுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை’ என்று தெரிவித்த எம் கெ சிவாஜிலிங்கம் ‘இம்மக்களுக்கு மீளத் தமது வாழ்வை ஆரம்பிப்பதற்கான எவ்வித உதவிகைளயும் அரசு வழங்கவில்லை’ எனவும் குற்றம்சாட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில் ‘தீவுப்பகுதிகளில் குடியேற்றப்பட்டவர்களில் இரு கால்களையும் இரு கைகளையும் இழந்த ஒரு போராளிப் பெண்ணும் அவரது தாயும் அடங்குவதாகவும் எவ்வித உதவியும் இல்லாமல் அத்தாய் எவ்வாறு தனது ஊனமாக்கப்பட்ட மகளைப் பராமரிக்க முடியும்’ என்றும் கேள்வி எழுப்பினார்.

இவற்றின் பின்னணியில் வன்னி முகாம்களில் உள்ள கணிசமான பகுதியினர் வன்னி முகாம்களைவிட்டு வெளியேறத் தயாராக இல்லை என அங்குள்ள சிலருடன் ஏற்படுத்திக் கொண்ட தொலைபேசி உரையாடல்களில் இருந்து தெரியவருகின்றது. எந்தவொரு வெளிநாட்டுத் தொடர்புகளும் கிடையாத பெரும்பாலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்த இம்மக்கள் நிரந்தரமான வேலை வாய்ப்புகளைக் கொண்டிருக்கவில்லை. (பெரும்பாலும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் 75 வீதத்திற்கும் அதிகமானவர்கள் யாழ் மாவட்டத்தையே சேர்ந்தவர்கள்.) இவர்கள் வன்னி முகாம்களைவிட்டு வெளியேறும் பட்சத்தில் இவர்களது நாளாந்த வாழ்வுக்கு எவ்வித ஆதாரமும் இல்லாத நிலை ஒன்றும் உள்ளது. அதனால் இம்மக்கள் தாங்கள் முகாம்களைவிட்டு வெளியேறினால் நிர்க்கதியாவோம் எனத் தேசம்நெற்க்கு தெரிவித்தனர். அவ்வாறு இருந்தும் தங்களது சுதந்திரமான நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி அரசு தங்களை கைதிகளாக நடத்துவதாக அம்மக்கள் உணர்கின்றனர்.

இவ்வாறு வன்னி முகாம்களுக்கு உள்ளேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளவர்களில் வன்னியில் குடியேறிய மலையகத் தமிழர்களும் கணிசமானவர்கள் உள்ளதாக எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவிக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சேர்ப்பிலும் நடந்து முடிந்த யுத்தத்திலும் இம்மக்கள் மிகுந்த இழப்புகளைச் சந்தித்ததாகவும் அவர் தெரிவித்தார். இவ்விடத்தில் வன்னிக்குப் புலம்பெயர்ந்த மலையகத் தமிழர்கள் எதிர்கொண்ட சமூகப் பிரச்சினை தமிழ் மக்களால் கண்டுகொள்ளப்படாத ஒரு பிரச்சினை. (அதனை முடிந்தவரை ஆர் புதியவன் தனது ‘மண்’ படத்தில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.)

அண்மையில் தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் வன்னி முகாம்களில் உள்ள மக்களில் கணிசமான தொகையினரை அரசு நாட்டின் ஏனைய பகுதிகளில் ‘தற்காலிகமாக’ குடியிருத்த முயற்சிப்பதாகத் தெரியவருகின்றது. அதன்படி வெளிநாடுகளில் உள்ளவர்கள் வன்னி முகாம்களில் உள்ள மக்களைப் பொறுப்பெடுக்க முன்வரும்பட்சத்தில் பொறுப்பெடுக்கப்பட்டவர்களை ‘தற்காலிகமாக’ தென்னிலங்கையில் குடியமர்த்துவது பற்றி அரசு ஆராய்கின்றது. அவ்வாறு குடியிருத்தப்படுபவர்களது செலவீனங்களை அவர்களைப் பொறுப்பெடுக்கின்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் செலுத்த வேண்டும் எனக் கேட்கப்பட இருப்பதாகவும் தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னி முகாம்களில் உள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கான கால தாமதம் ஏற்படும் பட்சத்தில் வடக்கு – கிழக்கில் குடியமர்த்த முடியும் ஆயினும் அரசு அவர்களை வடக்கு கிழக்கில் ‘தற்காலிகமாக’ குடியமர்த்துவதற்குப் பதிலாக தென்னிலங்கையில் ‘தற்காலிகமாக’ குடியமர்த்த முற்படுவதன் பின்னணி அபாயகரமானது. ஏற்கனவே சனத்தொகை ரீதியாக மிகப் பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தமிழ் மக்கள் வன்னி முகாம்களில் உள்ள மக்கள் தெற்கில் ‘தற்காலிகமாக’ குடியமர்த்தப்படுவார்களாக இருந்தால் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் சனத்தொகையில் பாரிய விழ்ச்சி ஏற்படும். வட மாகாணத்தின் யாழ் மாவட்டம் தவிர்ந்த வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னியின் மொத்த  வன்னியின் மொத்த மக்கள் தொகை – 551,000. ( மன்னார் – 100,000, கிளிநொச்சி – 142,000, முல்லைத்தீவு – 145,000, வவுனியா – 164,000) இவர்களில் 250 000 மக்கள் தொகையினர் – 50 வீதமான மக்கள் வன்னி முகாம்களில் உள்ளனர். இவர்களில் கணிசமான தொகையினரை அரசு தென்பகுதிகளில் குடியேற்ற முயற்சிக்குமாக இருந்தால் வன்னி நிலப்பரப்பிலும் வடக்கு கிழக்கிலும் தமிழ் மக்களின் சனத்தொகை கணிசமான அளவு வீழ்ச்சி அடைவது தவிர்க்க முடியாதது.

ஏற்கனவே யாழ் மாவட்டத்தில் வாழந்த முஸ்லீம் மக்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டு கடந்த 20 வருடங்களுக்கு மேலாக புத்தளத்தில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இம்மக்கள் தங்கள் வாழ்நிலையை அங்கேயே ஸ்தீரப்படுத்திக் கொண்டதால் அவர்கள் மீண்டும் தங்கள் பூர்வீக மண்ணுக்கு வருவதற்கு தயாராகவில்லை. அவர்களது வாழ்நிலையை உயர்த்துவதற்கான மீள்குடியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படாதவரை அவர்கள் தாங்கள் தங்கியுள்ள இடத்திலேயே தங்களை நிலைப்படுத்திக் கொள்வர்.

இன்று வன்னி முகாம் மக்களை தெற்கில் முடியமர்த்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளும் இதே விளைவையே ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

கடைசியாக 1981லேயே வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் சனத்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் வடக்கு கிழக்கில் சனத்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான சுமூகமான சூழலோ அல்லது வடக்கு கிழக்கு பிரதேசங்கள் அரச கட்டுப்பாட்டிலோ இருக்கவில்லை. பத்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மேற்கொள்ளப்பட உள்ள குடிசனமதிப்பீடு 2011ல் இடம்பெற இருக்கின்றது. 1991, 2001 ல் வடக்கு கிழக்கின் சனத்தொகை மதிப்பீடு இலங்கையின் வளர்ச்சி வீதத்துடன் ஒத்ததாக மதிப்பிடப்பட்டது. தற்போது வடக்கு கிழக்கு முழுமையாக அரச கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் 2011ல் குடிசனமதிப்பீடு மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்படி வடக்கு கிழக்கின் உண்மையான சனத்தொகைப் புள்ளிவிபரம் வெளிவரும்.

கடந்த 30 ஆண்டுகளில் வடக்கு கிழக்கின் சனத்தொகையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றது. இது தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையவில்லை. அண்ணளவாக மூன்று மில்லியனாக இருந்த வடக்கு கிழக்கு தமிழர்களில் ஒரு மில்லியன் தமிழர்கள் குறிப்பாக யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து உள்ளனர். இன்னும் ஒரு மில்லியனுக்கும் சற்று குறைவான தமிழர்கள் தென்பகுதிகளில் வாழ்கின்றனர். எஞ்சிய ஒரு மில்லியனுக்கும் சற்று அதிகமான தமிழர்களே வடக்கு கிழக்கில் உள்ளனர். இவர்களில் 660 000 பேர் (முஸ்லீம்கள் உட்பட) இடம்பெயர்வு முகாம்களில் வாழ்வதாக தமிழர் தகவர் நடுவம் தெரிவிக்கின்றது.

வன்னி யுத்தத்தில் இலங்கை அரசு மிக மோசமாக மனித உரிமைகளை மீறியது. தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தது. ஆனால் இலங்கை அரசு இன அழிப்பை மேற்கொண்டதாக நிறுவுவது கடினம் என்பதனை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அனுதாபமானவர்கள் லண்டனில் ஏற்பாடு செய்த கூட்டங்களிலேயே சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். வன்னியில் மக்களின் உயிரிழப்புகள் அதிகரித்தால் சர்வதேசம் தலையீடு செய்யும் என்ற முட்டாள்தனமான சமன்பாட்டை வைத்துக் கொண்டு மக்கள் கொல்லப்படுவதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தது புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்த புலி ஆதரவு திங்ராங்க். யுத்தத்தின் கொடுமை தாங்காது தங்கள் கட்டுப்பாட்டை மீறி அரச படைகளை நோக்கி ஓட நிர்ப்பந்திக்கப்பட்ட மக்களை புலிகள் சுட்டுக்கொன்றனர். ஓடித்தப்ப முடியாது சிக்குண்டவர்கள் அரசின் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். இவ்வாறு  தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் பெரும் மனித அவலத்தை நிகழ்த்தி சர்வதேசத்தை கூவி அழைத்தனர் புலிகள். இம்முயற்சி எவ்வித பலனையும் அளிக்கவில்லை. அதனால் வன்னி யுத்தத்தில் இலங்கை அரசு இனஅழிப்புச் செய்துள்ளது என்பதனை நிறுவுவதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இடம்கொடுக்கவில்லை.

ஆனால் ‘இலங்கை அரசு தற்போது செய்ய முற்படுகின்ற விடயங்களே திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு இனஅழிப்பு நடவடிக்கை’ என்கிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஏபிஆர்சி உறுப்பினருமான எஸ் தவராஜா. தற்போதைய இன அழிப்பு இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் என்பது தமிழ் மக்களை படுகொலை செய்வதும் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்துவதும் அல்ல எனத் தெரிவிக்கும் அவர் ‘அரசு மிகத் திட்டமிட்டு நிதானமாக தமிழ் மக்களை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்த முயற்சிக்கின்றது’ என்கிறார். ‘இதுவே தற்போது தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய விடயம்’ எனவும் அவர் தெரிவிக்கின்றார். ‘எப்போதும் வருமுன் காப்பதே நன்று’ எனக் கூறும் எஸ் தவராஜா ‘தமிழ் மக்களுக்கு சிறுபான்மை இனங்களுக்கு எதிரான சட்டங்கள், விதிமுறைகள், நடைமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவை ஒரு போதும் மீளப்பெறப்படப் போவதில்லை. கல்லோயக் குடியேற்றத் திட்டம் முதல் இன்றுவரை நிலைமைகள் அவ்வாறே உள்ளது. அவற்றை இனிமேல் நீக்க முடியாது. அதனால் அவ்றை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டார்.

வன்னி முகாம்களை தொடர்ந்தும் வைத்திருப்பதில் இலங்கை அரசு பெரும் பொருளாதார அரசியல் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றது. அதனால் அந்த முகாம்களை மூடவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளேயும் வெளியேயும் அரசுக்கு ஏற்பட்டு உள்ளது. ஆனால் இந்த முகாம்களை மூடிவிட்டு மக்களை அவர்களது சொந்த மண்ணில் குடியமர்த்தும் விருப்பம் அரசிற்கு இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் அரசு இம்மக்களில் கணிசமான பகுதியினரை வடக்கு கிழக்கிற்கு வெளியே கொண்டு சென்று குடியேற்றவும் வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளவும் திட்டமிடுகின்றது. கிழக்கில் அரசு வெற்றிகரமாக சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்ட போதும் வடக்கில் அவ்வாறான ஒரு நிலை காணப்படவில்லை. ஆனால் தற்போதைய சூழல் வடக்கிலும் அவ்வாறான ஒரு சனத்தொகை மாற்றத்தை அரசு மேற்கொள்வதை நோக்கி நகர்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இலங்கை அரசின் இந்தப் போக்கானது மலேசிய அரசு தனது சிறுபான்மை இனங்களை எவ்வாறு கையாள முற்படுகின்றதோ அதை நோக்கியதாக உள்ளதாக அண்மையில் தமிழர் தகவல் நடுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு ஒன்றில் மலேசிய நண்பர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

இவற்றின் பின்னணிகளைக் கொண்டு வன்னி முகாம்களில் உள்ள மக்களது எதிர்காலம் தொடர்பில் அந்த மக்களுடன் தொடர்புபட்டு போராட்டங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகின்றது. நாம் சரியெனத் தீர்மானிக்கும் அரசியல் காரணங்களுக்காக அல்லாமல் அந்த மக்களது நலன்களை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்களும் கோரிக்கைகளும் முன் வைக்கப்பட வேண்டும். அதற்கு போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் அந்த மக்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வன்னி முகாம்களை மூடுவது மட்டும் தீர்வாகாது.

._._._._._.

அரசின் முகத்திரையைக் கிழிக்கும் வன்னி முகாம்களின் முட்கம்பிவேலி : த ஜெயபாலன்

வன்னி முகாம்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக …..

1. அரசு வன்னி முகாம்களில் உள்ள மக்களை துரிதகதியில் அவர்களது பகுதிகளிலேயே அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து மீளக் குடியேற்றுவது மிக மிக அவசியம். அதுவொன்றே இந்த முகாம்களில் உள்ள பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதுடன் அந்த மக்களின் சுயாதீனமான சுதந்திரமான வாழ்வையும் அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டும்.

2. மீளக் குடியேற்றும் வரையான குறுகிய காலப்பகுதியில் வன்னி முகாம்களினுள் உள்ள பாதுகாப்புப் படைகள் வெளியெற்றப்பட்டு நிர்வாகம் சர்வதேச மனிதாபிமான ஸ்தாபனங்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட வேண்டும். சர்வதேச அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படாத பட்சத்தில் இலங்கையின் அனைத்து சமூகங்களையும் புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கிய சிவிலியன் நிர்வாகத்தில் அம்முகாம்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்.

3. முகாம்கள் சர்வதேச விதிமுறைகளுக்கமைய நிர்வகிக்கப்பட வேண்டும்.

4. முகாம்களில் உள்ளவர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் போது முகாம் நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமான பதிவுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அழைத்துச் செல்லப்படுபவருடன் பெற்றோர் உறவினர் தொடர்பு கொள்ளக் கூடிய ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.

5. முகாம்களில் உள்ளவர்களுக்கு உளவியல் மருத்துவம் உட்பட அனைத்து மருத்தவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

6. முகாம்களில் உள்ளவர்கள் நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் தங்களுடைய உறவினர்களைச் சந்திக்கவும் உதவிகளைப் பெறவும் ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும்.

7. முகாம்களை கண்காணிப்பதற்கான சுயாதீன கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டு அவர்கள் முகாம்களை எப்போதும் எவ்வித தடையுமின்றி பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

8. சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் ஊடகங்கள் முகாமினுள் சென்று பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்.

9. அங்குள்ள மக்களது குறைகளைக் கேட்டறிந்து அவற்றை உடனுக்குடன் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

10. முகாம்களில் உள்ள அனைவருக்கும் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் பாதிப்புகளுக்கு அமைய தகுந்த நட்டஈடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

32 Comments

  • jalpani
    jalpani

    ஜெயபாலனின் ஆக்கம் மகிந்த மாத்தயாவின் காலடியில் வீழ்ந்து கிடக்கும் மகிந்த அரசை முழுதாக நம்பியிருக்கும் புலம்பெயர் ஜனநாயகங்களுக்கு எரிச்சலை தரப்போகின்றது. இலங்கையில் வர்க்கப் புரட்சி பற்றி கனாக்காணுபவர்களும் இதில் உள்ளடக்கம்.

    Reply
  • varathan
    varathan

    முஸ்லிம் மக்களே!

    மறக்காமல் நீங்களும் தனிஅலகை பெற்றுக் கொள்ளுங்கள். ராஜபக்ச நிரம்ப……..நிரம்ப தரப்போகின்றார். எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.

    Reply
  • பல்லி
    பல்லி

    ஜெயபாலன் மிகவும் வரவேற்க்கதக்க கட்டுரை; ஏன் இது அவசியமும் கூட, அவர்களை போங்கள் என நடுரோட்டில் விட முடியாது, உறவுகளும் எத்தனை காலத்துக்குதான் உதவ முடியும்; ஆகவே அவர்களுக்கான பொருளாதர (வேலை) வசதி கண்டிப்பாக இந்த அரசே செய்து கொடுக்க வேண்டும், அதுக்கான உதவிகளை செய்ய பலநாடுகள் அமைப்புகள்(தமிழல்ல) முன்வருவார்கள், ஆனால் எதையும் நேரடியாகவே அவர்களுக்கு கிடைக்கும்படி அரசு செய்வதே சிறந்தவழி, யாராவது அந்த 21 பேருக்கும் இந்த 10தேவைகளையும் ஈமைல் பண்ணி விடுங்கோ, அவர்களுக்கும் அங்கு வாழும் மக்களுக்கு என்ன தேவை என்பது தெரியட்டுமே;

    Reply
  • Sarana
    Sarana

    எந்த செயற்பாட்டில் தான் திருப்தி? ஜெயபாலன் வன்னி முகாம்கள் உருவாக வித்திட்டவர்கள் பற்றி பேசியதெல்லாம் போனகதை. முகாம்களிலிருந்து பணமூடைகள் கொடுத்து தப்பியோடி வெளியேயோ வெளிநாடோ சென்றவரும் இதைவிட்ட வெளியே போனால் அடுத்த வேளை கஞ்சிக்கு என்ன செய்வதென்று அங்கேயே தங்க நினைப்பவர்களும் சந்தித்த சமரசம் உலாவிய இடம்.

    கணனியில் காட்ஸ் விளையாடுவது தோட்டம் செய்வது போலத் தான் இந்த இணையத் தள எழுத்து ஜீவிகளையும் பார்க்கிறேன். நாலு செய்திகளையும் இரண்டு கட்டுரையையும் ஐரோப்பிய அவசரத்தில் நுனிப்புல்லாக மேய்ந்துவிட்டு ஆழமான பார்வையுள்ளவனாக யோசித்து சமூகத்துக்குக் கேடு தரும் எழுத்துக்களை எழுதாமல் தவிர்த்துக் கொள்ளுங்கள். சர்வதேசம் பற்றிய பார்வை. தேசியப் பார்வை. பொருளாதார மேம்பாடு. அனைத்துத் துறையின் வளர்ச்சி போன்ற ஒட்டு மொத்தமான செய்பாடுகளின் கணிப்பிலிருந்து பார்த்துத் தான் ஒரு தலைமையை விமர்சித்துக் காட்டவேண்டும்.

    இன்றிருக்கும் மக்களையும் எதிர்கால இலங்கையையும் நோக்கி உண்மையான அர்ப்பணிப்போடு எழுதமுடிந்தால் எழுதுங்கள் இல்லையெனில் தொழில் விடுங்கள் அதுவும் நன்று

    Reply
  • jalpani
    jalpani

    நான் சொன்னேனா இல்லையா? கடைசியில் புலி உறுமியதைப் போல் எழுதுவதை நிறுத்து என கட்டளை இடும் அளவிற்கு எரிச்சலடைந்து விட்டார்கள். இந்த உலகத்தில் சிறுபான்மை இனங்கள் என்ற ஒன்று இல்லையா? அவற்றுள் பிணக்குகள் தோன்றவில்லையா? தீர்வுகள் எட்டப்படவில்லையா? ஐக்கிய இலங்கை இனப்பிரச்சனை தீர்க்கப்பட்டாலே உருவாகும். இருக்கிற பிரச்சனையை எழுதாதே என கட்டளை இடுவதை நிறுத்துங்கள். ஒரு சமூக கூட்டத்தின் அபிலாசைகளை இறங்கி வந்து புரிந்து கொள்ளுங்கள். இலங்கையில் இனவாதம் புரையோடிப் போயுள்ளது. அதன் மேல் ஐக்கிய இலங்கை வராது.

    Reply
  • gobi
    gobi

    கடைசித் தமிழன் உள்ளவரை தழிழீழத்துக்காகப் போராடவேனும் என்று சிவாஜிலிங்கம் வீரமுழக்கமிட்ட காலத்தில் அப்போருக்கு உதவிய வெளிநாட்டு அமைப்புக்கள் தமதுயிரை துச்சமாக மதித்து போராடிய இப்போராளிகளுக்காவது உதவுமாறு சிவாஜிலிங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும். இனவாத அரசுதான் உதவும் அல்லது உதவவேணும் என எப்படி எதிர்பார்க்கலாம். மேலும் நாங்கள் இவர்களை பார்த்துக் கொள்வோம் என்று யாராவது பொறுப்பெடுத்தவர்களையே காம்பிற்கு வெளியே போகவிடுகிறார்கள் என்பது சிவாஜிலிங்கம் சொந்தமண்ணில் நின்றால்த்தானே விளங்கும்.

    Reply
  • santhanam
    santhanam

    /கடைசித் தமிழன் உள்ளவரை தழிழீழத்துக்காகப் போராடவேனும் என்று சிவாஜிலிங்கம் // இவர் இந்திய மத்தியரசின் சிறப்பு தூதுவர் இது தமிழனிற்கு எங்க விளங்கபோகிறது அப்கானிஷ்தானில் பின்லாடனை வளரத்தது அமெரிக்கா எதற்காக இருவிடயத்திற்காக ஒன்று ருஷ்யா மற்றது அரபுநாடுகளின் கேந்திர முக்கியமான இடத்தையும் கைப்பற்ற அதற்காக பாவிக்கபட்ட முறைமை இஷ்லாமின் அடிப்படைவாதம் இதையும் அமெரிக்காதான் பின்லாடனுக்குடாக செய்தது ஆனால் ருஷ்யா சமுகபுரட்சியையும் பெண்களிற்கான சமவுரிமையையும் பெண்கள் கட்டாயம் பாடசாலை செல்லவேண்டும் என்றமுறையை உருவாக்கியது இது ஆபத்தான விடயம் என்று அமெரிக்க யேசித்தது இது தான் இலங்கையிலும் இந்தியா செய்யு திருகுதாலம் தான் தமிழீழம் என்ற சொற்பதம்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    யாழ்ப்பாணி என்ன சொல்லுகிறார்? அவரின் முதல் பின்னோட்டத்தைப் பாருங்கள்.
    // மகிந்தா அரசை முழுதாக நம்பியிருக்கும் ஜனநாயகங்களுக்கு எரிச்சல் தரப்போகிறது. இலங்கையில் வர்கப்புரட்சி கனாக் காண்பவர்களும் இதில் உள்ளடக்கம்.//
    மகிந்தா அரசை நம்பவேண்டாம் என சொல்லவருகிறாரா? இடதுசாரி அமைப்புகள் தேவையே இல்லை எல்லாவற்றையும் கைகழுவிடுவோம் என்கிறாரா?

    இரண்டாவது பின்னோட்டத்தை பாருங்கள்.
    //நான் சொன்னேனா இல்லையா?….இலங்கையில் இனவாதம் புரையோடிப்போய்யுள்ளது. அதன் மேல் ஐக்கியஇலங்கை வராது//
    வர்க்கப்போராட்டம் வராது ஐக்கிய இலங்கையும் வராது. அப்ப என்னதான் வரும்மென்று எதிர்பார்கிறார்? முப்பது வருடப் போராட்டமும் இதை சொல்லித்தானே புலிகள் அவலத்தை ஏற்படுத்தினார்கள். கடைசிக்காலத்தில் பிரபாகரனுக்கு மண்டைதிறந்து ஆயுதத்தை மெளனிக்கப் பண்ணுகிறோம் என்று சொல்லும் போது யாழ்ப்பாணிக்கு விளங்காதது எதற்காக?அரசுடன் இணக்கப் பேச்சுகள் எதுவுமில்லாமல் முள்கம்பி வேலிகளை திறந்திட முடியுமா? அரசின் ஒத்துழைப்பில்லாமல் தமிழ்பகுதிகளில் ஒரு ஆட்டுக்கல்லைகூடா அரக்கமுடியுமா? அல்லது ஆயுதப் போராட்டத்திற்கு அடியெடுத்து வைத்து மிகுதி தமிழ்மக்களையும் அழித்துவிட திட்டம் தீட்டுகிறாரா? அல்லது புலம்பெயர் நாடுகளில் எஞ்சியுள்ள புலிபினாமிகள் போல் முழு இலங்கை தீவையும் மேற்குலக நாடுகளுக்கு விலைபேசி விற்றுவிட விலைபேசுகிறாரா? சொல்வதை தெளிவாகச் சொல்லவும்.

    Reply
  • Neethi C
    Neethi C

    When a section of the Sinhalese community admits that the present government is committing atrocities against the innocent civilians;

    Unfortunately those who fled Sri Lanka for mere existence (because they could not cope with school or could not earn or involved in antisocial activities or to protect them or their families from war) and settled in various western countries illegally are justifying the suffering of those people by supporting the current regime.

    I spoke with a person who is currently living in the UK on income support; he was a person, who was living in poverty in Sri Lanka; who was not able to cope with the very existence;
    And he makes statement about the self respecting hardworking people who have been detained inhumanly by the very same state that should be their guardians that “the government cannot allow these people out like cattle”

    People who are of this inhumane calibre are now emerging as a force in our community in the western world. These people are making it a point to travel to Sri Lanka with their western passports which give them the immunity, security and benefits and make ad hoc statements and meddle in the affairs of these innocent people. These “foreign nationals” who betrayed the people and the country by running away have started to comment on the safety, security, democracy and the human right situation in Sri Lanka. LTTE is extinct but it is unfortunate that it has paved way to another type of monster in the form of “foreign nationals”.

    Neethi

    Reply
  • Thaksan
    Thaksan

    நண்பர்களே தயவுசெய்து தளத்திலுள்ள தமிழர்களின் வாழ்கையையும் இருப்பையும் கவனத்தில் கொள்ளுங்கள். இங்கு அடிமையாக நாங்கள் வாழ வேண்டுமென யாரும் விரும்பவில்லை என்பது வெளிப்படை. அடக்குமுறைகளுக்கு எல்லாச் சந்தர்ப்பந்திலும் ஒரு சமூகம் அடிபணிந்து விடாது. ஆனால்> வன்முறைகளில் மட்டும் நாம் நம்பிக்கை கொள்ளவியலாது. எமது உரிமைகளுக்கான நியாயங்களை இன்னும் பலமாக உரத்து சொல்லி விளங்கப்படுத்தவது இந்த தருணத்தில் அவசியமானது. நாங்கள் தோல்வியடைந்தவர்கள் என்ற மயக்கம் வேண்டாம். தோல்வி அகந்தையில் வன்முறையை மட்டுமே நம்பியவர்களுக்கானது. உழைக்கும் மக்களின் உரிமைகள் இனவாதத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதே உண்மை. இனவாதிகளின் சாமர்த்தியத்தியத்திற்தகு இரையாகியது இருதரப்புமே.

    Reply
  • nallurkanthan
    nallurkanthan

    My dear fellow Tamil citizens,
    When is it said Tamil,generally it refers to jaffna Tamils. Who are they? An influential section of the Tamils had facilities and had good education in Jaffna schools, St Patricks,St Johns,Hartly,St Patricks etc and were in high posts in the government service. When the SLFP govt under Sirimao introduced standadization those groups were affected but other schools such as Nelliady central, Stanly, etc benefited. Enormously the Tamil districts Kilinochchi, Vavuniya, Ampara, Battialoa, mannar benefited. Jaffna elite started to shout the new system of university entrance was anti Tamil. The ……people in the backward Tamil ditricts such s Ampara, batticaloa, mannar, Mullaitivu also was taken for ride by the Jaffna elite. Becuase of the misguided communal politics of the Tamil leadership Jaffna youths were encouraged to take up arms and the result we have experienced at a very high cost.Then the Refugee game. Jaffna people wanted to make more money to compensate their obsolete dowry system. They spent lot of money and went to western countries as refugees.

    That trend is still going on.It may be fedral or any other system. It is not important. Can you remember poor indians came to Sri Lanka. From a Federal state to a cenralized state. The time has not changed very much.People are still making homes road sides in Tamilnadu and other places.Our country would have better off if Indra government has not promoted terrorism in Sri Lanka by harbouring the terrorist groups of Sri Lanka.

    Pro LTTe diaspora is really against the intersts of the Tamils in Sri Lanka.Pl leave us alone.Communalism can not achive anything. Dont say Mahinda or Ranil govt is communal or anti Tamil.Then why a huge majority chose to live in south among sinhalese people.Pl dont speak the population.What would you have done with big Tamil majority and more Tamil MPs.
    Dont poison our people.

    Reply
  • jalpani
    jalpani

    வர்க்கப்போராட்டம் வராது ஐக்கிய இலங்கையும் வராது. அப்ப என்னதான் வரும்மென்று எதிர்பார்கிறார்?”

    இலங்கையில் தொடர்ச்சியான அழிவுகளே நிகழப் போகின்றன. தமிழ் மக்கள் இனவாத சிங்கள அரசை நம்பப் போவதில்லை. மேற்குலகுகள் எப்போதும் அதை தமக்கு சாதகமாக்குவதற்கான வழிகளிலேயே தொழிற்படும். மேற்குலகினை இதிலிருந்து விரட்ட இலங்கை அரசு தமிழ்மக்கள் நம்மபக் கூடிய மாதிரி செயற்பட வேண்டும். இருக்கின்ற இலங்கை இந்திய ஒப்பந்தத்தையே நடைமுறைப்படுத்த முன்வராத இந்த அரசை தமிழ்மக்கள் எப்படி நம்புவார்கள்? புலிகள் அழித்து விட்டார்கள் அழித்து விட்டார்கள் என சொல்கிறோம்? இத்தனை நாள் அவர்கள் இருக்க முடிந்தது யாரால்? பல சந்தர்ப்பங்களில் மேற்குலகோடும் அண்மைகளில் இந்திய சீன அரசுகளோடும் ஒட்டுறவாடியபடி முழு இலங்கை மக்களையும் ஏமாற்றி வருவது யார்?

    அரசுடன் இணக்கப் பேச்சுகள் எதுவுமில்லாமல் முள்கம்பி வேலிகளை திறந்திட முடியுமா? அரசின் ஒத்துழைப்பில்லாமல் தமிழ்பகுதிகளில் ஒரு ஆட்டுக்கல்லைகூடா அரக்கமுடியுமா?

    தமிழ்மக்கள் அந்த நாட்டுப் பிரஜைகள் என்றால் இன்னமும் கேட்டுத்தானா பெறவேண்டும்? குறைந்தபட்சம் வட கிழக்கு இணைந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தினாலே ஆட்டுக் கல்லல்ல ஆகாய விமானத்தையும் அரக்கலாம். ஆனால் இனவாதிகளுக்கு பயம்.தங்கள் அதிகாரம் இருப்பு என்பன கேள்விக் குறியாகி விடும். யாரைக் காட்டி தங்களை தக்க வைத்துக் கொள்ள முடியும்? இந்த பிரச்சனை தணிந்து விடக் கூடாது என்பதாலேயே இனவாதிகள் கருணாவைக் கொண்டு கிழக்கில் தமிழ் மக்களை ஆட்டிப்படைக்கிறார்கள்.

    ஆயுதப் போராட்டத்திற்கு அடியெடுத்து வைத்து மிகுதி தமிழ்மக்களையும் அழித்துவிட திட்டம் தீட்டுகிறாரா? அல்லது புலம்பெயர் நாடுகளில் எஞ்சியுள்ள புலிபினாமிகள் போல் முழு இலங்கை தீவையும் மேற்குலக நாடுகளுக்கு விலைபேசி விற்றுவிட விலைபேசுகிறாரா? சொல்வதை தெளிவாகச் சொல்லவும்”
    …மகிந்த அரசை நம்ப வேண்டாம் என்று எனது கருத்தை நான் சொல்லுகிறேன். உடனே என்னைப் புலியாக்கி பார்ப்பதில் உங்களுக்கு ஏன் இந்த அவசரமோ. இலங்கை தீவை மேற்குல நாடுகளுக்கு விலை பேசியது புலிகள் மட்டும்தானா?

    Reply
  • Sarana
    Sarana

    தோழர்களே!உணர்வு பூர்வமாகப் பேசிப் பேசி உள்ளதெல்லாம் இழந்த நிலை தான் இலங்கையின் இரு புறத்து ஓட்டாண்டிகளும். இவர்களை மேய்த்த எஜமானர்கள் இன்றுவரை திருமண பந்தங்களுக்குள் கூட இணைவும் மேல் தட்டு வசதியும் உள்ளவர்களாக இரு புறத்திலும்.
    “சமூக மாற்றம் சாத்திரங் கேட்டு வருவதில்லை அது வரலாற்று நியதி”.
    “சோசலிசத்தின் சவப்பெட்டியில் ஆணி அடித்தாயிற்று”! என்று எகிறிக் குதித்தது அமெரிக்கா. ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளர்களும் சார்ந்து நின்று சிரித்தனர். 20 ஆண்டுகளாகவில்லை அதே அமொpகாவிலிருந்து சாரை சாரையாகத் தொழில் தேடிச் ஓடவும் ஆயிரக்கணக்கான டிலியன்கள் கையேந்திக் கடன் வாங்குமளவுக்கு தோற்று நிற்கிறது சோசலித்திடம் அமெரிக்கா.
    இத்தனையும் ஏன்? எத்தனை திருகு தாளங்கள் உடைப்புகளெல்லாம் இந்தியா செய்தும் வர்க்கப் போராட்டம் பரிணமித்து “நேபாள அரசை” உருவாக்கவில்லையா?
    இதே பின் பற்றலை ஏன் எங்கள் விடுதலைப் போராட்ட முன்னெடுப்பாளர்கள் செய்யவில்லை?
    காரணம்! வர்க்கப் பார்வையற்ற குறுந்தேசிய இனவாதக் கட்டமைப்பு!. இது இறுதியில் பாசிசமானது. இது நடைமுறையும் நியதியும்.

    விடுங்கள் சந்திரன் ராஜா!
    யாழ்ப்பாணி?? அதுவும் ஆங்கிலத்தில் புனைவிலிருந்தே அறிவு விளங்குகிறதல்லவா? அவர் மட்டோ? யாழோ? அது தேவையில்லை! அந்தப் பெயர் ஒரு பிரதேசத்தைக் கொச்சைப் படுத்துகிறது.. அது போக!!

    “மேற்குலகுகள் இனவாதத்தை தமக்கு சாதகமாவே பயன்படுத்தும் ” என்று சொல்லும் அதே நேரம் இனவாத மகிந்த அரசை எதிருங்கள் என்கிறார். இத்தனை காலமும் காட்டிக் கொள்ளாவிட்டாலும் மேற்குலகிற்கு அனுசரணை வழங்குவதை மறுத்து வந்தது சிறிலங்கா சுதந்திரக் கட்சி. இப்போ இதை மகிந்த நேரில் செய்கிறார். மகிந்த அரசை எதிர்ப்பதோ இல்லாமல் செய்வதோ மேற்குலகை ஆதரிப்பதென்பதாகவே முடியும்.

    எம்மிடமுள்ளது இரண்டு தெரிவுகள்தான்?
    மூன்று பாரிய இனக்கலவரங்கள்> பாதயாத்திரை> திடடமிட்ட சிங்களக் குடியேற்ங்கள்> ஆண்டாண்டு காலத்தால் திரட்டிச் சேமித்த நூல் நிலையத்தை எரித்து அறிவு நலிவைத் தொடரும் காலமெல்லாம் எமக்குத் தந்த யூ.என்.பி அரசை ஆதரிப்பதா?
    இவர் மட்டுமல்ல இவர் போல பலர் என்ன சொல்ல வருவதென்றே தெரியாமல் எங்களைக் குழப்புகிறார்கள் எனவே தான் கட்டுரையாளரை மட்டுமல்ல தொழில் விடுங்கள் என்றது பின்னூட்த்துக்கும் பொருந்தும்!!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    //புலியாக்கி பார்ப்பதில் ஏன் இந்த அவசரமோ// யாழ்ப்பாணி.
    புலிக்கு யார் எதிரியென்று தெரியவில்லை.யார் நண்பன் என்றும் புரியவில்லை.
    தத்துவமோ சித்தாந்தமோ அதற்கு துணைநிற்கவில்லை. பணம் வருமென்றால் கஞ்சா பயிரிடக்கூட தயாராக இருந்தார்கள். வெறிக்குணம் கொண்டு யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயாராக இருந்தார்கள். நாள் கூலிக்கு உண்டுவாழும் வங்காலை மாட்டின் மூர்த்தி குடும்பம் கூட தப்ப முடியவில்லை என்று எண்ணும் போது மற்றவர்களை பற்றி சொல்லவே தேவையில்லை.

    “குறையை கண்டு கொண்டாலே போதும் அதை தீர்ப்பதில் அரைவாசியை பூர்த்தியாகி விடுகிறது” என்பதே நாம் கற்ற கல்வி. புலிக்கு இருந்த அறியாமையே தமிழ் மக்களின் துன்பத்திற்கு காரணம். சட்டவிரோத பணத்திரட்டலும் புலம்பெயர் நாட்டில்லிருந்து வெள்ளம் போல பெருகிவந்த பணமுமே புலிகளின் அடாவடித்தனத்திற்கு காரணம். இது ஈழவாழ்மக்களின் நலனைக் கருதாது செயல்பட்ட சுயநல தமிழரின் செயல்பாடு இல்லாமல் வேறு என்ன?.
    யாழ்ப்பாணிக்கு அறியாமையும் சுயநலசிந்தையும் இல்லாது வேறு எதுவாக இருக்கும் என எடுத்துக்கொள்வது? யாழ்ப்பாணியின் அருள்வாக்கை பாருங்கள். /இலங்கையில் தொடர்ச்சியான அழிவே நிகழ்ப்போகிறதாம்./ஆகக்குறைந்தது எப்படிபட்ட அழிவுகள் நிகழப்போகிறது? என்பதையாவது குறிப்பிடலாம் அல்லவா? சிங்களவரும் தமிழரும் அடிபட்டு சாகப்போகிறார்களா?அல்லது உலகபொருளாதார நெருக்கடியால் நாடு பஞ்சத்தில்
    சிக்கி பட்டினிகிடந்து அழிபடபோகிறதா? இதை இவர் வெளிபடையாக கூறமுடியாதது புலிகளின் தீபாவளி தைப்பொங்கல் வருடப்பிறப்பு தைபூச திருநாள்களில் தமிழ்ழீழம் மலரும் என்ற கற்பனை கனவுகளை நினைவூட்டவில்லையா?

    எல்லோரும் இலங்கைதீவை விற்றார்கள் ஆனபடியால் புலிகளும் இலங்கைதீவை விற்றார்கள் என்பது ஒரு அரசியல் கருத்துத்தானா? என்பதை யாழ்ப்பாணி அவர்களே சொல்லுங்கள்?. மேமாதம் பத்தொன்பதாம் திகதிமுன்பே உங்கள் சிந்தை ஒட்டியவர்கள் நடத்திய அழிவே இலங்கை மக்களுக்கு பலபத்து வருடங்களுக்கு போதுமானது. தமக்கு நெருக்கடி வரும்போது அவர்களால் எப்படி முகம் கொடுப்பார்கள் என்பதை
    பொறுத்திருந்து பாருங்கள். முப்பது வருடங்கள் நடந்த உள்நாட்டு யுத்தத்தில் மெல்லமெல்ல வெளிவந்து கொண்டிருக்கும் நாட்டிடம் எந்தவித பேச்சுவார்த்தையும் நல்லெண்ண இணக்கமும் முழுமையாக சாத்தியமாகாத வரை யாழ்ப்பாணி போன்ற ஒருவராலேயே உடனடிதீர்வை எதிர்பார்க முடியும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    யாழ்பாணி ஏதோ ஒரு பளய படகதையை புதிய வடிவில் சொல்லவருவது தெரிகிறது, ஆனால் மூலக்கதை சற்று பரவாயில்லை, ஆனால் திரைகதை சகிக்க முடியவில்லை, ஒளிபதிவுக்கு சர்வதேசத்தை நாடியிருப்பது தடங்கலாக உள்ளது: அத்துடன் உங்க நாயகன் (பிரபா) வில்லனாகி வில்லன்(கருனா) நாயகனாகியதுக்கு காரணம் உங்கநாயகனின் படங்கள் பல(தாக்குதல்கள்) தொடர்ந்தும் தோல்வி கண்டதே, வடகிழக்கு பிரிவு என்பது இசை அமைப்பாளர்க்கும், பாடலாசிரியர்க்கும் உள்ள புடுங்குபாடே, இத்தனை தவறையும் இயக்க்குனரான தாங்கள்(பினாமிகள்)த்து கொண்டு படம் படுதோல்வி என மக்கள் மீது வழக்குபோட நினைப்பது அல்லது சக இயக்குனர் (அரசு) மீது காண்டமாய் பின்னணி குரல் கொடுப்பது சரியான செயல் அல்ல, யாழ்பானிக்கு இதைவிட புரிய பல்லியால் முடியவில்லை;

    Reply
  • jalpani
    jalpani

    ஆகக்குறைந்தது எப்படிபட்ட அழிவுகள் நிகழப்போகிறது? என்பதையாவது குறிப்பிடலாம் அல்லவா? சிங்களவரும் தமிழரும் அடிபட்டு சாகப்போகிறார்களா?அல்லது உலகபொருளாதார நெருக்கடியால் நாடு பஞ்சத்தில் சிக்கி பட்டினிகிடந்து அழிபடபோகிறதா?”//

    இலங்கை மக்களை நிம்மதியாக இருக்க உலக பிராந்திய வல்லரசுகள் விடமாட்டார்கள். இப்பவும் லண்டனில் புலிகள் போராட்டங்கள் நடத்துகிறார்கள். இதுவரை எத்தனை பேர் ஏகததிபத்தியங்களின் வலையில் விழுநதிருப்பார்கள். இத்தனை கோரமான அப்பட்டமான படிப்பினைக்குப் பின்னரும் ஆளும் அதிகார மட்டங்களைத் தான் புலிகள் வால்பிடிக்கிறார்கள். இவர்களைக் கொண்டு எதிர்காலத்தில் என்னென்ன நாச வேலைகளுக்கு ஏகாதிபத்தியவாதிகள் தயாராகிறார்கள் என்பது இன்னும் ஒரு முள்ளிவாய்க்கால் வரும் போதுதான் உணர்ந்து கொள்ளப் போகின்றோமா?

    தமிழமக்களின் அரசியல் அபிசாலைகள் நியாயமானவை என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உண்டு. அதை புலி காவி வைத்திருந்தது என்பதனால் அந்த மக்களின் எதிர்பார்ப்புக்கள் தவறென்று ஆகிவிடுமா?

    இலங்கை அரசு தமிழ்மக்களும் சிங்கள் மக்களும் இணைந்து வாழவேண்டும் என உண்மையில பாடுபடுவதாக இருந்தால் இரு இனங்களும் முக்கியமாக தமிழர் நம்பக் கூடிய மாதிரியான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும். அறுபது ஆண்டு அநுபவம் இதற்கு போதுமானது. அரசியல் தீர்வை அடைவது சந்திரமண்டலம் போகும் பிரமாண்டமான விடயம் அல்ல. மனமிருந்தால் போதும். அந்த மனம் இந்த அரசுகளிடம் இல்லை என்பதே எனது கருத்தாகும். மக்களே வரலாற்றைப் படைப்பவர்கள். இன்று புலியிடமும் இனவாத அரசிடமும் தோற்றுப் போனாலும் மீண்டும் எழுவார்கள். இந்த இனவாத அரசுகள் கொடுக்கப் போகும் தொல்லைகள் அத்தகையவையாகும்.

    இலங்கை தீவை மேற்குல நாடுகளுக்கு விலை பேசியது புலிகள் மட்டும்தானா?”//

    ஜெயவர்த்தனா செய்யவில்லை? சந்திரிகா செய்யவில்லை? ரணில் செய்யவில்லை? இப்போது மகிந்த சீனாவுடனும் இந்தியாவுடனும் சேர்ந்து என்ன செய்கிறார்? “எல்லோரும் இலங்கைதீவை விற்றார்கள் ஆனபடியால் புலிகளும் இலங்கைதீவை விற்றார்கள் ” என ஏன் கருத்தை திரிக்கிறீர்கள்?

    Reply
  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    தமிழ் மக்களையும் அவர்களுடைய பொருளாதாரத்தையும் அழித்து அவர்களை அகதிமுகாம்களில் வாழவைத்தது ஆயுதக் கலாச்சாரம்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

    Reply
  • jalpani
    jalpani

    “தமிழ் மக்களையும் அவர்களுடைய பொருளாதாரத்தையும் அழித்து அவர்களை அகதிமுகாம்களில் வாழவைத்தது ஆயுதக் கலாச்சாரம்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.”

    ஆமாம். 48 லிருந்து எங்களுக்கு வந்து அடியுங்கள் என தமிழ்மக்கள் வலிந்து கேட்டார்கள். தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை சும்மா பொழுது போகாமல் தான் திஸ்ஸ விதாரண இன்று புலம்பெயர் மக்களை சந்திக்கிறார்.ஒரு பிரச்சனையும் இல்லாமல்தான் நாடு நாடாக பேச்சு வார்த்தை என அலைந்து திரிந்தார்கள்.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    //நான் சொன்னேனா இல்லையா?….இலங்கையில் இனவாதம் புரையோடிப்போய்யுள்ளது. அதன் மேல் ஐக்கிய இலங்கை வராது//யாழ்ப்பாணி

    அதை சரியான வாதமாகவே நான் பார்க்கிறேன். இன்று தமிழர்களின் நலனில் அக்கறை உடைய அரசு என்றால் புலிகளின் அழிவுக்கு முன்பு தமிழர்க்கான அரசியலத் தீர்வு என்ன? என்பதை பகிரங்கமாக தெரிவித்திருக்கலாம் புலிகளின் அழிவின் பின்னர் அந்த தீர்வை நோக்கிய செயற்ப்பாட்டை ஆரம்பித்திருக்கலாம்

    புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு உலகத்தையே ஒன்று சேர்த்த அரசு ஏன் தமிழர்க்கு ஒரு அரசியற்தீர்வை உருவாக்க சிங்கள இனவாதிகளுடன் பேசமுடியாது?. புலிகளை அழிக்க மட்டும் இனவாதிகளுடன் கூட்டுச்சேரலாம் என்றால் தமிழர் உரிமைகளைப்பற்றி ஏன் பேசக் கூடாது

    இலங்கை அரசு பல தடவைகள் தமிழர்களின் அரசியல்த்தீர்வில் அக்கறை என்று தானே பல பேச்சு வார்த்ததைகளிலும் ஏன் சந்திரிகா அரசியல் தீர்வையும் கொண்டுவந்தார்கள்

    சரி இன்று புலிகள் இல்லை அந்த அரசியற் தீர்வை பற்றி ஏன் அக்கறை காட்டக்கூடாது. அக்கறை காட்வில்லை என்றால் சிறுபான்மையினர்க்கான தீர்வு என்ன? அது அதிகாரப்பரவலாக்கம் என்றாலும் அதைபகிரங்கமாக வெளிப்படுத்தலாமே ஏன் செய்யவில்லை??

    புலிகள் இருக்கும் போது புலிகள் தமிழர்களை தமிழர் தரப்பினரை முன்வந்து அரசியல் செய்ய விடாது தானும் செய்யாமல் அழிந்தார்கள்.

    புலிகளை அழிக்கும் போது அரசியல்த்தீர்வும் சமாந்தரமாக செய்வோம் என்று உலகுக்கும் இந்தியாவிற்கும் பதிலளித்த இலங்கை அரசு பின்னர் புலிகளை அழித்தபின்னர் அரசியல்தீர்வு என்றது. இன்று தனது அடுத்த தேர்தலின் பின்னர் அரசியல்தீர்வு என்கிறது.

    புலிகளின் அழிவிற்கு முன்பு இலங்கை அரசினரும் தமிழர் தரப்பினரும் இணைந்து நடாத்திய கூட்டத்தில் புலிகளை அழிக்க முன்பு அரசியல்தீர்வை முன்வையுங்கள் என்று கேட்டோம் அப்படி அரசியல்தீர்வு இல்லாமல் புலிகளை அழிப்பதில் தமிழர் தரப்பில் – உடன்பாடுகள் இல்லை என்பது அரசுக்கும் தெரியும். ஆனால் அரசு தமிழர்களுக்கும் புலிகளுக்கும் இந்தியாவிற்கும் உள்ள உறவுகள் இந்த உறவுகளின் பலம் பவீனங்களை அறிந்து தமது புலிகள் அழிப்பை நடாத்தியுள்ளனர். இன்று தமிழர்க்கு அரசியல் தீர்வு ஏபிஆர்சி மூலம் வரும் என்ற பேய்க்காட்டல்களை விட்டுக்காட்டி விட்டுப் போய்விடலாம் என்று நினைத்து செயற்படுகிறார்கள்.

    இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் விதாரணவிடம் நான் கேட்டேன் ‘இன்று புலிகள் அழிந்து விட்டார்கள் ஜக்கிய இலங்கைக்குள் தமிழர்க்கு இணைந்த மாகாண சபையை ஏன் அரசு உருவாக்கக் கூடாது’. பதில் அதை நோக்கித்தான் ஏபிஆர்சி செல்கிறது என்றார்.

    அடுத்த கேள்வி நீங்கள் ஒரு மாக்ஸீயக்கட்சியில் இருந்தவர்கள் ஏன் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவில்லை என்று கேட்டதிற்கும் அதற்கும் அதிகாரப் பரவலாக்கம் தான் தீர்வு அதைத்தான் நாம் செய்ய முனைகிறோம் என்றார். இவர்கள் மீண்டும் தமிழர்களை பேய்க்காட்ட ஆரம்பித்துள்ளனர் என்பது தெட்டத்தெளிவானது.

    நாம் என்ன செய்ய வேண்டும் என்பதே இப்போதுள்ள விடயம்??

    நண்பர்களே தோழர்களே நாம் புலிகளின் அரசியலுக்கும் செயல்களுக்கும் எதிராக பகிரங்கமாக பலதடவைகள் எழுதியும் பொது இடங்களில் பேசியும் உள்ளோம். இன்று புலிகளின் நிலை வேறு. இன்று முன்னாள் புலிகளும் நாமும் சேர்ந்து இயங்க முடியாதா?

    உண்மையாக உங்கள் சொந்தப் பெயரில் துணிவுடன் தமிழ் மக்களின் அக்கறையுடன் நாம் என்ன செய்ய வேண்டும் என்று கலந்துரையாடுவோமா? இந்த தேசம்நெற்றில்??

    தலைப்பு இதுதான் ‘இன்று நாம் என்ன செய்ய வேண்டும்’ ??

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    வன்னி முகாம்களில் உள்ள 30 சதவிதமானவர்கள் மலையகத்திலிருந்து 1977-1983 காலங்களில் அடித்துவிரட்டப்பட்டவர்கள். அவர்களுக்கு இன்றுவரை தமிழீழத்தில் நிலங்கள் யாராலும் கொடுக்கப்படவில்லை. இன்று முகாம்களிலிருந்து வெளியேற்றப்பட்டால் அவர்கள் எங்கே போவது என்று தெரியாமல் உள்ளனர். இவர்கள் தங்களுக்காக சில முகாம்களை வைத்திருக்கவும்’ என்று போராட வேண்டிய நிலை உருவாகலாம்.

    இதனையும் சிந்திக்க வேண்டும் இனவாத அரசு இவற்றை கவனத்தில் எடுக்காது போனால் இவர்கள் நிலை என்ன? இவர்கள் என்ன புதிய சாதியாகி விடுவார்களா?

    கருத்து பரிமாறுவோம் உண்மையுடன்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //உங்கள் சொந்தப் பெயரில் துணிவுடன் தமிழ் மக்களின் அக்கறையுடன் நாம் என்ன செய்ய வேண்டும் என்று கலந்துரையாடுவோமா? இந்த தேசம்நெற்றில்??//
    வரலாம்தான் ஆனால் குத்துமதிப்பாய் தாக்குவார்களே, அதுக்கான பாதுகாப்பை தர சோதியால் முடியாதே, இருப்பினும் உங்கள் ஆதங்கத்துக்கோ அல்லது செயல்பாட்டுக்கோ பல்லி ஏதோ ஒருவகையில் துணை நிற்ப்பேன், உங்கள் செயல்பாட்டில் பல்லி பங்குகொள்ளும்; இதுவரை போல்;

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சோதிலிங்கத்தின் இரண்டு பின்னோட்டங்கள். முதலாவது பின்னோட்டம் சோதிலிங்கத்தின் அவநம்பிக்கையும் பொறுமையின்மையும் பறைசாற்றுகிறது. இரண்டாவது பின்னோட்டம் நியாயமான மனத்தில் எரிந்து கொண்டு விடைதேடிக் கொண்டிருக்கிற கேள்வி.

    தமிழ்மக்கள் என்றால் யார் இந்த தமிழ்மக்கள்? புலிகளின் காலத்தை விடுங்கள். அதற்கு முந்திய காலத்திலாவது மலையகமக்களை தமது தொப்புள்கொடி உறவுகளாக நீங்கள் சொல்லுகிற தமிழ்மக்கள் ஏற்றுக்கொண்டவர்களா? அவர்களின் வாக்குரிமை சதி நடவடிக்கைகளால் பறிக்கப்படும் போது எப்படியான போராட்டங்களை நடத்தினார்கள்? வாக்குரிமை பறிக்கப்படும் ஒரு உக்கிரமான போராட்டத்தை நடத்தியிருந்தால் தமிழ்மக்கள் என்று சொல்வதில் பெருமைப்படலாம். அப்படி நடத்தியிருந்தால் தரப்படுத்தல் என்ற இடத்திற்கே இடம் இருந்திருக்காது. ஆக இந்த தெப்புள்கொடி உறவுகள் தேவைப்படுவது தமிழ் தேனீர்கடைகளில் உழுந்தாட்டவும் தோட்டங்களில் வேலை பார்கவும் வீட்டுவேலைக்கு வேலைக்காரர் வேலைக்காறிகள் மட்டுமே! எங்களுக்கு அரசியல் தேவை வரும்போது மட்டும் தமிழ்இனத்தின் பெயரைச் சொல்லி கூவிஅழைப்போம்.

    ஐம்பதிஎட்டு கலவரத்தில் வடக்குநோக்கி வந்து குடியேற்றப்பட்ட மக்கள்தான் கிளிநொச்சியுள்ள தருமபுரம் என்ற கிராமம். அவர்கள் வாழ்நாள் முழுவதும் அரைப்பட்டினி கால்பட்டினி குளத்துமீன் குழம்போடு வாழ்நாள்கழிந்து போயிற்று. அறுபத்தைந்துக்கு பிறகு வந்த விசுவமடு படித்த வாலிபர்திட்டம் மிளகாய்தோட்டம் அவர்கள் தகுதியில்லாததோடு கூலித்தொழிலாளர்ராகவே வரையறை செய்யப் பட்டார்கள்.

    யாழ்பாணத்தை திரும்பி பார்தால் அங்கு சாதிப்பிரச்சனை. தமிழனை தமிழன் சேர்த்து வைத்திருக்க மாட்டான். ரஜினிதிரணகமவின் முறிந்தபனையில் மழை பெய்கிறது. பள்ளிக்கூடத்தில் அகதிகள் உயர்ந்தசாதி உள்ளுக்குள் தாழ்ந்தசாதி தாழ்வாரத்தில். தாழ்வாரத்தில் சுகயீனமுற்ற கைக்குழந்தையுடன் நனைந்தபடி. ரஜணிதிரணகம உள்ளுக்குள் விட அனுமதி கேட்டதிற்கு வயோதிபர் சொன்ன பதில் “பிள்ளை உந்த வேலைகளை பல்களகழகத்தோடு வைச்சுக் கொள்ளுங்கோ இங்கை வேண்டாம்”. இது சின்ன உதாரணம் மட்டுமே!.

    கிழக்கை திரும்பிப்பார்தால் யாழ்பாணத்து அரசியல்வாதிகள் தமக்கு சதி செய்தவர்கள் என குற்றம் சாட்டுகிறார்கள். இதில் உண்மையில்லாமல் இல்லை. ஆகவே தமிழன் என்றவார்த்தை கேள்விக்குறியாகவே இருக்கிறது. நானும் தமிழன்தான். உங்களுக்கிருக்கிற இனபற்று எனக்கும் இருக்கிறது. இதை தூற்றுவதாக நீங்கள் நினைத்தால் என்னை மன்னித்து விடுங்கள். இவ்வளவு நாற்றத்தையும் நாம்எம்மில் வைத்துக்கொண்டு சிங்கள மக்களுடன் ஐக்கியபட முடியாது. இனவாதம் புரையோடிக்கிடக்கிறது என்ற யாழ்பாணியின் கருத்துக்கு சோதிலிங்கமும் தாளம்போட்டு இசை எழுப்புகிறார் என்றால் தமிழனின் விதியை என்னவென்பது?.

    தமிழரின் தீர்வைப்பற்றி பேசுவதாகயிருந்தால் முகாம்களில் அனுவனுவாக செத்துக் கொண்டிருடிருக்கிற மக்களைப் பற்றித்தான் பேசமுடியும். இதை மிஞ்சிய எந்த பேச்சுவார்த்தையும் கைதியாகி போனவர்களுக்கு துன்பத்தை கொடுப்பதையே இட்டுச்செல்லும். தயவு செய்து இதை புரிந்து கொள்ளுங்கள். இன்றுநாம் என்ன? செய்யவேண்டும் என்பதல்ல எங்கே? போகிறோம் என்பது தான்.

    இறுதியாக ஒரு நினைவூட்டலுக்காக…தமிழனை மீட்பதற்காக முழு அர்பணிப்போடு வந்த போரளிகள் தெல்லிப்பளை திருநெல்வேலி கல்வியங்காடு சந்திகளில் உயிர்ருடன் எரியூட்டப்பட்டு இருபத்திமூன்று ஆண்டுகள் பெறுமைகாத்த தமிழன் ஐந்துமாதம் ஆறுமாதம் ஏன்? ஒருவருடம் பொறுமை காத்தால் தமிழனுக்கு பெரிதாக ஏதுவும் குறை வந்துவிடாது. நன்மையே! பயற்கும்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    நண்பர் சோதிலிங்கம். நன்றி உங்கள் கருத்துகளுக்கு. அனேக நாட்களின் பின்னர் நல்ல ஒரு கருத்தை படித்த திருப்தி எனக்கு.

    ‘….ஆனால் அரசு தமிழர்களுக்கும் புலிகளுக்கும் இந்தியாவிற்கும் உள்ள உறவுகள்- இந்த உறவுகளின் பலம் பவீனங்களை அறிந்து தமது புலிகள் அழிப்பை நடாத்தியுள்ளனர்…..’

    அந்தப் பலவீனங்களை காட்டிக் கொடுத்தவர்கள் யார்? கருணா என சொல்ல வேண்டாம். நாமேதான். மாற்றுக்கருத்து என்கின்ற கொள்கையின் பின் ஒழிந்துகொண்டு வானம் ஏறி வைகுண்டம் போக நினைத்தது யார்? மாக்சியம், சோசலிசம், மனிதாபிமானம் என உலகில் உள்ள எல்லா இசங்களையும் வலிந்து இழுத்து அதனை திச விதாரண, டி.டபிள்யூ.குணசேகரா போன்றவர்களின் தலையில் போட்டு எம்மை ஏமாற்றிக்கொண்டது யார்? நாமேதான்.

    ‘…தலைப்பு இதுதான் ‘இன்று நாம் என்ன செய்ய வேண்டும்’ ??…

    அன்புள்ள சோதிலிங்கம் இதற்குமுன்னர் நான் உங்களை ஒன்று கேட்கலாமா? எமது மாற்றுக்கருத்து தோழர்களுடன் புலிகள் ஒன்றுபட வேண்டுமாயின் ‘நாம் இவ்வளவு நாளும் என்ன செய்தோம்’ என அவர்களுக்கு சொல்லவேண்டாமா? எத்தனை சந்திப்புகள், எத்தனை கருத்தாடல்கள், எத்தனை விஜயங்கள், எத்தனை கழுத்தறுப்புகள்?

    என்ன செய்தோம், இனிமேல் என்ன செய்யமாட்டோம் என அவர்கள் முன் வையுங்கள். அதுவே உண்மையான முதல்படியாக இருக்கும். அதன் பின்னர் அவர்கள் தானாக வருவார்கள். மாற்றுக் கருத்தாளர்களைப்பற்றி அவர்களுக்கு இருக்கும் ஆதங்கத்தில் முதன்மையானது மாற்றுக்கருத்து என்கின்ற ஒன்றை வைத்தே ஆகவேண்டும் என்பதற்காகவே ஒற்ரைக்காலில் நிற்பவர்கள் என்பதே.

    ‘….ஆனால் குத்துமதிப்பாய் தாக்குவார்களே, …’

    மிகச்சரியாகச் சொன்னீர்கள். மிக வேதனையான உண்மைதான் பல்லி. தாக்கும் போது உலகத்தில் யாருமே அறியாத புத்தகத்தில் இருந்து கொள்கை மேற்கோள் வேறு காட்டுவார்கள்.

    Reply
  • Naane
    Naane

    “இன்று நாம் என்ன செய்ய வேண்டும்”. இதுதான் இன்று தமிழ் மக்கள் தங்களை தாமே கேட்க வேண்டிய ஒரே கேள்வி.
    புலிகள் மட்டும் “இன்று நாம் என்ன செய்யக்கூடாது” என்ற கேள்வியை மட்டுமே கேட்க வேண்டும்.
    எல்லாத் த‌மிழ‌ரும் ஒன்று சேர்ந்து அங்கால‌ காது கேட்குதில்லை. எந்த‌ உல‌க‌த்தில் இன்ன‌மும் இருக்கின்ரீர்க‌ள்.

    சாந்த‌ன் எந்த நூற்றாண்டில் இருக்கின்றார்.
    //‘நாம் இவ்வளவு நாளும் என்ன செய்தோம்’ என அவர்களுக்கு சொல்லவேண்டாமா? எத்தனை சந்திப்புகள், எத்தனை கருத்தாடல்கள், எத்தனை விஜயங்கள், எத்தனை கழுத்தறுப்புகள்? //

    முதலில் மாற்று கருத்து என்றால் என்ன?. அவர்கள் கண்ட கனவுத் தமிழீழ‌த்தை உது வெறும் கனவு என்று சொன்னவர்களா?. அவர்கள் யார்? அவர்களிடம் போய் விளக்கம் சொல்ல. எத்தனை சந்திப்புகள், எத்தனை கருத்தாடல்கள் உதுவெல்லாம் எந்த நாட்டில் நடந்தது.

    முதல் பந்தியை பாருங்கள் அது மட்டும் தான் தமிழனுக்கு உள்ள ஒரே தீர்வு. ஆனால் முப்பது வருடம் கோலோச்சியவர்கள், பண‌த்தை கோடி கோடியாக வைத்திருப்பவர்கள் யார் சொல்லையும் கேட்கப் போவதும் இல்லை கேட்கவும் மாட்டார்கள். சிங்களவன் எங்களைப் போட்டு உலகத்தின் உதவியுடன் உழ‌‌க்க இது ஒன்றே போதும் அவனுக்கு.

    நான் எழுதியதை இயலாமை, அவந‌ம்பிக்கை, பொறுப்பில்லாததன்மை எது வேண்டுமானாலும் சொல்லுங்கள். தமிழன் படும் பாட்டைப் பார்த்து அல்லது முழுத்தமிழனும் படை எடுத்து தன்னிடம் அடைக்கலம் கேட்கப்போகிறான் என பயந்து உலகம் எதுவும் செய்தால் ஒழிய எங்களால் அல்லது தமிழ்நாட்டுத் தமிழனால் இலங்கைத் தமிழனுக்கு விடிவு வரும் என எவரும் கனவு காணாதீர்கள்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ‘…எந்த‌ உல‌க‌த்தில் இன்ன‌மும் இருக்கின்ரீர்க‌ள்….’
    திச விதாரணவும் ஸ்ரீலங்காவின் அரச பிரதி நிதிகளும் தமிழருக்கு நீதியான ஒரு தீர்வைத் தருவார்கள் என நம்பிய ”மாற்றுக்கருத்து உலகத்தில்” நிச்சயமாக நான் இல்லை என சொல்லாம்!

    ’….சாந்த‌ன் எந்த நூற்றாண்டில் இருக்கின்றார்…..’
    துரதிஷ்டவசமாக மேலே குறிப்பிட்ட மாற்றுக்கருத்தாளர் வாழும் நூற்றாண்டில் வேதனையுடன் இருந்து தொலைக்கிறேன்!

    Reply
  • jalpani
    jalpani

    /அந்தப் பலவீனங்களை காட்டிக் கொடுத்தவர்கள் யார்? கருணா என சொல்ல வேண்டாம். நாமேதான். மாற்றுக்கருத்து என்கின்ற கொள்கையின் பின் ஒழிந்துகொண்டு வானம் ஏறி வைகுண்டம் போக நினைத்தது யார்?” //

    இந்த சுத்துமாத்து கதை வேண்டாம். செய்வது எல்லாவற்றையும் செய்து படுகுழியில் தள்ளிய புலிகளை மறைமுகமாக காப்பாற்றப் பார்க்கிறீர்கள். ஈழப் போராட்டத்தை காட்டி கொடுத்தது புலிகளே. இந்த உண்மையை உணர்ந்து ஏற்காமல் அடுத்தவரில் பிழை பிடித்து தப்ப முடியாது. என்ன செய்யவேண்டும் எனில் முதலில் புலி தன்னை சுயவிமர்சனம் செய்து பாரதூரமான விளைவுகளை நாமே ஏற்படுத்தி விட்டோம் என ஒப்புக் கொள்ள வேண்டும். கம்யூட்டரில் தட்டத் தெரியும் என்பதற்காக மற்றவர்கள் மடையர்கள் என நினைக்கலாமா? நல்லா கதை விடப்பார்க்கிறீர்.

    /என்ன செய்தோம், இனிமேல் என்ன செய்யமாட்டோம் என அவர்கள் முன் வையுங்கள். அதுவே உண்மையான முதல்படியாக இருக்கும். அதன் பின்னர் அவர்கள் தானாக வருவார்கள். மாற்றுக் கருத்தாளர்களைப்பற்றி அவர்களுக்கு இருக்கும் ஆதங்கத்தில் முதன்மையானது மாற்றுக்கருத்து என்கின்ற ஒன்றை வைத்தே ஆகவேண்டும் என்பதற்காகவே ஒற்ரைக்காலில் நிற்பவர்கள் என்பதே”/

    ஒன்றையும் கற்றுக் கொள்ளாமல் திமிரெடுத்து போராட்டத்தை நடத்தினால் சிதம்பர சக்கரத்தில் பேய் பார்த்தது போலத்தான் இருக்கும். அரசியல் எவ்வளவு அபாயகரமானது என்பதை முள்ளி வாய்க்கால் கற்றுத் தரவில்லையா? இனியும் சிந்திக்க மாட்டீர்களா? புலி என்ன செய்தது என்பதை யோசித்து பாருங்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது புரியும்!

    Reply
  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    அகதி முகாமில் இருப்பவர்கள் இன்னமும் நாலு மாசத்தில் வீடு போய் சேர எங்களுக்கு கதைக்க இருக்கப்போவது தமிழ் நாட்டு சினிமா அரசியல் எந்த சினிமாகாரன் எந்த சினிமாகாரியோடு இப்ப நெருக்கம்? இதை விட்டா வேறு என்ன?
    புதினம் இழுத்து மூடியதற்கு ஒரு காரணம் புதினம் இல்லாததுதான். புத்திசாலியான ஊடகங்கள் இப்பவே கவர்ச்சி படங்களை இணைக்க ஆரம்பித்து விட்டன.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    சந்திரன்ராசா உங்கள் கருத்துக்களுக்கு நன்றி
    நீங்கள் கேட்ட பொறுமை என்னிடமும் உள்ளது பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் இனிமேல் செய்ய இருப்பவர்கள் இன்றே உடனேயே அதை வெளிக்காட்டி தமக்கான ஆதரவினை பெற முயல்வார்களே தவிர நீங்கள் சொல்வது போல் பொறுத்திருந்து தருவார்களா? என்பது சந்தேகமே!

    சாந்தன் நன்றி. நான் அரசியல்த் தீர்விற்காக நாம் என்ன செய்ய வேண்டும்? என்று தான் கேட்கிறேன் தலைப்பை விட்டுவேறு எங்கோ போனால் நான் அங்கு வரமாட்டேன்.

    பல்லி நன்றி

    13ம் திருத்தச்சட்டமூலமும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தையும் இணைத்தே தமிழர்க்கான தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நான் கருதுகிறேன் இதற்கான உங்கள் கருத்துக்களை பதிவிடவும்

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தோழர் சோதிலிங்கம் என்கருத்தில் உங்களுக்கும் உடன்பாடு வந்ததிற்காக நான் மகிழ்சியடைகிறேன். 13 ம் திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாணங்களுக்காண அதிகாரங்களை பெற்றுக்கொள்வதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். நான் அறிந்த கேட்ட அறிஞர்களுடைய கருத்துமாகும். இதுவே இனப்பிரச்சனை தீருவதற்கான வழிமுறைகளில் ஒன்று. இது ஆரம்பத்தில் சில கஷ்ரங்களை கொடுத்தாலும் இறுதியில் வெற்றிக்கே இட்டுச் செல்லும்.

    தமிழ்இனத்தில் பற்றுள்ளவர்கள் கடந்தகால துன்பங்களை மனத்தில் எண்ணி இனியொரு இனகலவரம் அரசியல் ரீதியில் ஏற்படா வண்ணம் தடுக்கவேண்டுமென்றால் கணிசமான தொகையினர் இருபெரும் கட்சியான சிறீலங்கா சுகந்திரகட்சி ஐக்கியதேசிய கட்சியில் இணைவை ஏற்படுத்துவதே. அப்படி இணைய முடியாதவர்கள் இணைபவர்களை நையாண்டி செய்யாமல் துரோகிப்பட்டம் கொடுக்காமல் இருக்கப் பழகவேண்டும். இதுவே ஈழவாழ்தமிழ் மக்களுக்கு நாம் செய்யும் உபகாரமாகும்.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    தோழமையடன் சந்திரன்ராசாவுக்கு 13ம்வத திருத்தச் சட்ட மூலத்தை அப்படியே 30 வரடங்களுக்கு முன்பு ஏற்றுக் கொண்டிருந்தாலும் இன்று பல்வேறு வளர்ச்சிகளினூடாக வேறு ஒரு அதிகாரப்பரவலாக்கத்தின் கட்டத்தை அடைந்திருக்கலாம்.

    ஜேவிபியினரின் கருத்தும் கூட மத்தில் உள்ள அதிகாரங்களை மாநிலங்களுக்கு பகிர்வதே தான் அதிலும் தமிழ்மொழியை மத்தியில் முழுமையாக அமுல்ப்படுத்துவதும் ஞாபகம் இருக்கா தமிழ்மொழி அமுலாக்கத்தை முழுமையாக அமுல்ப்படுத்தாத அரசாங்க உத்தியோகத்தர்களை சட்டமூலம் தண்டிக்க வேண்டும் என்யறு ஜேவிபி பாராளுமன்றத்தில் பேசியது.

    இன்று தமிழர்கள் முஸ்லீம்கள் இணைவாக கடந்தகால அரசியல் போல எதிர்ப்பு அரசியல் செய்யாது கூட்டிணைவாக செயற்ப்படும் அரசியற்போக்கை ஆரம்பித்தால் 13+ என் சொல்ப்படுகின்ற அரசியல்த்தீர்வை அடையலாம் இலகுவாக.

    ஆனால் இலங்கை தமிழ்மக்களின் பிதிநிதியாக உள்ள அரசு கடந்தகால தமிழர்களின் எதிர்பார்ப்புக்களை கவனத்தில் எடுத்து ஒரு அரசியல் தீர்வை முன்வைத்திருக்கலாம் தானே இதன் பின்னர் புலிகளை அழித்திருக்கலாம் தானே இதை செய்யாததிற்கு இவர்களின் இனவாதப் போக்கு அல்லத இனவாத தன்மை எங்கேயோ ஒளிந்து நின்று செயற்ப்படுவதாக அர்த்தப்படக் கூடாதா?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தோழர் சோதிலிங்கம்! உங்கள் இரண்டாவது பந்தியிலிருந்து… ஜே.வி.பி 1971 அல்லது 85-90 காலத்தின் படிப்பனைகளில்லிருந்து புதிதாக எதுவும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை. அது இந்தியஎதிர்ப்பை தனது தாயகமந்திரமாக வைத்திருக்கிறது. எனது கடந்த கால பின்னோட்டங்களை தொடர்ந்து வந்திருந்தீர்களாக இருந்தால் புரிந்திருக்கும். இந்தியாவுக்கு பகைமையாக ஒரு அரசியல் இலங்கையில் இருக்கமுடியாது. இதன் அர்த்தம் இந்தியாவின் அரசியலை விமர்சிக்கக் கூடாது என்பதல்ல மாறாக இந்தியா எதிர்ப்புணர்வை கைவிட வேண்டும் என்பதே! அதில்லிருந்து மீண்டுவருவதாக தெரியவில்லை.

    இவர்களின் அரசியல் புலிகளின் அரசியலைவிட மோசமானது. இவர்கள் முழு இலங்கையுமே ஆதாளபாதாளத்தில் தள்ளிவிடுவார்கள். இவர்களிலிருந்து கற்றுக்கொள்வதற்கும் உதாரணம் எடுத்து கதைப்பதற்கும் எதுவுமே இல்லை. உங்கள் சந்தேகத்தை தீர்ப்பதற்கு ஒன்றைமட்டும் உறுதியாக சொல்லுகிறேன். அரசாங்க உத்தியோகத்தில் பதவிவகிப்பவன் மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றவனாக இருக்க வேண்டும். இதை மகிந்த ராஜபக்சா உறுதிப்படுத்துகிறது. இனியென்ன உங்களுக்கு வேண்டும்?.

    நாலாவது பந்தி.. அது உங்கள் அறியாமையை பிரதிபலிக்கிறது.எத்தனை விகிதமான மக்கள் அரசுக்கு பின்னால் துணைநின்றார்கள். டக்கிளஸ் தேவானந்தா கருணா என்ற முரளீதரன் இன்னும் தாண்டிப்போனால் பிள்ளையான்….கிழக்கு..
    இந்த தேசம்நெற்றில் அவர்களுக்கு ஆதரவாக ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறதா? வந்தபின்னோட்டங்கள் அத்தனையும் வசைமாரி. பி.சீயைத்
    தவிர.
    புலிகளை காலந்தாண்டி அழித்திருக்கலாமே என்ற முடிவுக்கு வருகிறீர்கள். இதைவிட அப்பாவித்தனம் வேறுஎதுவுமில்லை. புலியை அழிக்காவிட்டால் புலிஉங்களை அழித்திருக்கும்.இதைவிட வேறு என்ன? சந்தேகம் வேண்டும் உங்களுக்கு.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    தோழர் சந்திரன் ராசாவிற்கு உங்கள் விமர்சனத்திற்கு நன்றி விமர்சனங்களை வரவேற்கிறேன்.

    //ஜே.வி.பி 1971 அல்லது 85-90 காலத்தின் படிப்பனைகளில்லிருந்து புதிதாக எதுவும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை//.

    நான் நினைக்கிறேன் இன்று ஜேவிபியில் சில தமிழர்கள் இணைந்து வேலை செய்கிறார்கள் இதன் மூலம் சில மாற்றங்கள் ஜேவிபியில் ஏற்ப்பட்டுள்ளது என்பதே எனது கருத்து இதை ஜேவிபியின் சந்திரசேகரனுடன் லண்டனில் பேசும்போதும் அவதானித்தேன் எது எப்படி இருப்பினும் ஜேவிபி மீது தமிழர்கள் ஒரு சந்தேக கண்ணோட்டத்துடனேயே உள்ளனர் இதை ஜேவிபியினருக்கும் எடுத்துச் சொல்லியும் உள்ளோம்.

    ஜேவிபி இன்று இந்திய எதிர்ப்பு என்று கோசம் போடுவது தமது கட்சி தேர்தல் அரசியலக்காகத்தான். ஜேவிபி ஒரு மாக்ஸீயக்கட்சிக்கான தனது அடையாளங்களை இழக்கத் தொடங்கி பல வருடங்களாகி விட்டது. இந்திய அரசுடன் இவர்களுக்கும் நல்ல உறவுகள் உள்ளதை நான் அறிந்துள்ளேன்.
    இந்த வருடம் இலங்கையில் இந்திய புலனாய்வுத்தறையினர் இவர்களிடம் பல தடவைகள் பேசியுள்ளனர்.

    அதைவிட சந்திரன் ராசா இந்திய எதிர்ப்பு இனிமேல் இந்திய பிராந்தியத்தில் எடுபடமாட்டாது. இந்திய உறவினூடாகவே அந்த பிராந்தியத்தின் பொரளாதார முன்னேற்றம் அறியப்பட முடியும்.

    //உங்கள் சந்தேகத்தை தீர்ப்பதற்கு ஒன்றைமட்டும் உறுதியாக சொல்லுகிறேன். அரசாங்க உத்தியோகத்தில் பதவிவகிப்பவன் மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றவனாக இருக்க வேண்டும். இதை மகிந்த ராஜபக்சா உறுதிப்படுத்துகிறது. இனியென்ன உங்களுக்கு வேண்டும்?//.

    இந்த உறுதி மொழிகளை 1977 லோ அல்லது 1983 களிலோ இந்த இலங்கை அரசினர் தரவில்லை. இதற்கும் தமிழர்கள் பல உயிர்களை இழந்தே இந்த ஜனாதிபதியின் இந்த வசனங்களை கேட்க வேண்டீயதாயிற்று. இதே போன்று எல்லோரும் எதிர்பாக்கும் தமிழ்பேசும் மக்களின் பிராந்தியங்களில் அதிகார பரவலாக்கத்தையும் அமுல்படுத்தட்டுமே .

    //புலிகளை காலந்தாண்டி அழித்திருக்கலாமே என்ற முடிவுக்கு வருகிறீர்கள். இதைவிட அப்பாவித்தனம் வேறு எதுவுமில்லை. புலியை அழிக்காவிட்டால் புலி உங்களை அழித்திருக்கும். இதைவிட வேறு என்ன? சந்தேகம் வேண்டும் உங்களுக்கு//.

    தோழர் சந்திரன் ராசா இதைவிட வேற சந்தேகம் வேண்டாம் இதுதான் புலிகள் பற்றிய எனது நிலைப்பாடு.

    புலிகள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்விற்கான போராட்டத்தை என்றுமே நடாத்தியிருக்க வில்லை புலிகள் கடந்த காலங்களில் செய்தது எல்லாம் பயங்கரவாதமே பயங்கரவாதம் எப்படி தனது அழிவை அணைக்குமோ அதே போன்று புலிகளும் தமது அழிவை அணைத்துக் கொண்டனர். புலிகள் என்று சகோரப் படுகொலையை செய்தனரோ அன்றே புலிகளால் தமிழீழப் போராட்டம் காட்டிக் கொடுக்ப்பட்டுவிட்டது என்பது எனது கருத்து.

    (சிலர் இதை குட்டிமணி தங்கத்தரை இராணுவத்தால் கைது செய்யப்பட்டபோதே இம்முடிவை எடுத்துவிட்டனர். சிலர் தோழர் சுந்தரம் கொலை செய்யப்பட்டபோதே எடுத்துவிட்டனர்)

    புலிகள் கடந்த மே மாதம் தமது அழிந்திருக்காவிட்டால் தொடர்ந்து புலிகளின் பயங்கரவாதம் முழு தமிழர்களையுமே இலங்கைத் தீவிலிருந்து இல்லாமல் பண்ணியிருக்கும் என்பதே எனது கருத்து

    ஆனால் இலங்கை அரசு தமிழர்க்கான அரசியல்தீர்வினை முன்வைத்து புலிகளின் அழிப்பை நடாத்தியிருக்கலாம் காரணம் இந்த கடந்த காலம் எத்தனை தமிழர்களின் உயிரை குடித்துவிட்டது இத்தனை இழப்புக்கு ஒன்று வேண்டாமா?

    விவாதங்களை தலைப்பிற்குள் வைத்திருப்போம்.

    Reply