புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயத்தை அடுத்து கே பி எதிர் அன்ரி கே பி பனிப்போர். : த ஜெயபாலன்

BTF_Bannerகுமரன் பத்மநாதனின் (கே பி) அழைப்பில் 9 பேர் கொண்ட புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் இலங்கை சென்று வந்ததை அடுத்து புலம்பெயர் புலிஆதரவு அமைப்புகளிடையே பனிப்போர் ஒன்று ஆரம்பமாகி உள்ளது.

கே பி யின் அழைப்பில் சென்றிருந்த டொக்டர் அருட்குமார் பிரித்தானிய தமிழர் பேரவையை (பிரிஎப்) ப் பிரதிநிதித்துவப்படுத்திச் செல்லவில்லை என்றும் அவரது பயணம் பற்றி பிரித்தானிய தமிழர் பேரவை எதையும் அறிந்திருக்கவில்லை என்றும் பிரித்தானிய தமிழர் பேரவை இன்று (யூன் 28 2010) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

டொக்டர் வேலாயுதம் அருட்குமார் பிரித்தானிய தமிழர் பேரவையின் முக்கிய உறுப்பினர். பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடாத்திய பரமேஸ்வரனின் உல்நிலையை பரிசோதிக்கும் மருத்துவராகவும் இவர் செயற்பட்டு வந்தவர். இவரது சகோதரர்களும் குடும்பமும் மிகுந்த புலி ஆதரவானவர்கள்.

டொக்டர் அருட்குமார் வேலாயுதம் பற்றி கருத்து வெளியிட்ட பிரித்தானிய தமிழர் பேரவையின் ஆதரவாளர் ஒருவர் இவரது இலங்கை விஜயம் தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக தேசம்நெற்க்கு தெரிவித்தார். தாங்கள் பிரித்தானிய தமிழர் பேரவையின் நடவடிக்கைகளுக்கு வெளியே நின்று ஆதரவு வழங்கி வந்தோம் ஆனால் டொக்டர் அருட்குமார் நூறுவீதம் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவர் என்றும் அவரைப் போன்றவர்களை நாம் எடுத்த எடுப்பில் துரோகியாக்கிவிட முடியாது என்றும் தெரிவித்தார்.

இப்பயணம் பற்றிய விரிவான கட்டுரை தேசம்நெற்றில் வெளியாகி இருந்தமை தெரிந்ததே. அதில் சென்றுவந்தவர்களின் விபரங்களையும் தேசம்நெற் வெளியிட்டு இருந்தது. புலிஆதரவு புலம்பெயர் குழு இலங்கை சென்று திரும்பிய பின்னரும் மெளனமாகவே இருந்தனர். தேசம்நெற் ரிபிசி ஆகிய ஊடகங்கள் சென்று வந்தவர்களின் முழுமையான பட்டியலை வெளியிட்ட பின்னர் அவர்கள் மெளத்தை கலைத்துக் கொண்டனர்.

இக்குழுவில் தமிழர் சுகாதார அமைப்பின் பிரதிநிதியாகத் தான் கலந்துகொண்டதாக பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்த சார்ள்ஸ் அன்ரனிதாஸ் தேசம்நெற் இல் வெளியான பெயர்ப் பட்டியலையும் பயணத்தின் நோக்கம் பற்றிய தகவல்களையும் உறுதிப்படுத்தி உள்ளார்.

புலம்பெயர் புலி ஆதரவுக்குழுவின் இலங்கைப் பயணம் புலி ஆதரவுக் குழுக்களிடையே விரிசலை ஏற்படுத்தி உள்ளது. நாடுகடந்த தமிழீழப் பாராளுமன்றத்தின் பிரதிநிதி எஸ் ஜெயானந்தமூர்த்தி இப்பயணத்தை ஆபத்தானது என்று எச்சரித்துள்ளார். ஈழமுரசு பத்திரிகை கே பி யையும் அவருக்கு துணை போவவர்களையும் எதிர்ப் புரட்சியாளர்கள் எனக் குற்றம்சாட்டி உள்ளது.

புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மரணத்தை அறிவித்ததை அடுத்து கே பி க்கு ஆதரவாகச் செயற்படுவதாகக் ஜிரிவி மீது குற்றம்சாட்டப்பட்டு ஜிரிவி மீது தாக்குதலும் நடாத்தப்பட்டது இருந்தது தெரிந்ததே. தற்போது பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் டொக்டர் அருட்குமார் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார் என்று வெளியான செய்தியை அடுத்து பிரித்தானிய தமிழர் பேரவை ஜிரிவியை பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு அன்பாகக் கேட்டுக் கொண்டு உள்ளது.

மேலும் பிரிஎப் மற்றும் கே பி க்கு எதிரான அமைப்புகளில் இருந்து கே பி யின் உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாளர்கள் களையெடுக்கும் படலம் ஆரம்பமாகி உள்ளது. அதன் ஒரு கட்டமாக கே பி யின் நெருங்கிய உறவினரான உதயன் என்பவர் பிரிஎப் இல் இருந்து ஓரம்கட்டப்பட்டு உள்ளதாக பிரிஎப் க்கு நெருக்கமானவர்கள் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றனர்.

மேலதிக வாசிப்பிற்கு:

வெளிச்சத்திற்கு வரும் கே பி மர்மமும் – கே பி உடன் புலம்பெயர் புலிஆதரவுக் குழுவின் சந்திப்பும் : த ஜெயபாலன்

கே பி யின் சிபார்சில் சு.ப. தமிழ்ச் செல்வனின் சகோதரர் உட்பட முன்னாள் போராளிகள் 26 பேர் விடுதலை!

‘போர்குற்ற விசாரணைகளில் அரசாங்கத்தின் சாட்சியாக கே.பி!’ கெஹலிய ரம்புக்வெல

வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கே.பி?

 புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு – கே.பி. உட்பட 9 பேர் கொழும்பில் பேச்சுவார்த்தை

கே.பி.க்கு மன்னிப்பு வழங்குவதென அரசு தீர்மானித்தால் ஆச்சரியப்படமாட்டேன் அமைச்சர் கெஹலிய

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • aras
    aras

    புலம் பெயர் சமூகம், கண்ணை மூடிக் கொண்டு ஆயிரக்கணக்கில் அள்ளிக் கொடுத்த கொடை நெஞ்சங்கள் இப்போது என்ன சொல்லுகிறார்கள். புலம் பெயர்ந்தோர்களே! துரோகிகள் என இதுவரை காலமும் புலிகளால் கொல்லப்பட்ட அருமை மனிதர்களை திருப்பித் தாருங்கள்.

    Reply
  • கந்தையா
    கந்தையா

    //தற்போது பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் டொக்டர் அருட்குமார் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார் என்று வெளியான செய்தியை அடுத்து பிரித்தானிய தமிழர் பேரவை ஜிரிவியை பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு அன்பாகக் கேட்டுக் கொண்டு உள்ளது.//
    முள்ளிவாய்க்காலில் முப்பதினாயிரம் சனத்தை காவு குடுக்க முந்தி இந்த மாதிரி (பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு) அறிவுரையை ஜிரிவிக்கு வழங்கி இருந்திருந்தால் நல்லாயிருந்திருக்குமே…..

    கதைக்கப் போனவர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என பிரிஎவ் சொல்லுமென நான் முதலிலேயே சொல்லிப் போட்டன். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
    அடுத்தது தமிழர் சுகாதார அமைப்பு சார்ள்ஸ் அன்டனிதாஸை வெளியே போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

    /டொக்டர் அருட்குமார் நூறுவீதம் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவர் என்றும் அவரைப் போன்றவர்களை நாம் எடுத்த எடுப்பில் துரோகியாக்கிவிட முடியாது என்றும் தெரிவித்தார்.// எடுத்த எடுப்பில சொல்லாமல் வாற வின்ரருக்கு சொல்லலாம் என்றிருக்கினமோ?? அதுசரி இவர்கள் உந்தத் துரோகிப்பட்டம் வழங்குவதுதான் தொழிலாய் இருக்கினமோ..

    Reply
  • thurai
    thurai

    அரசாங்கத்துடன் சேர்ந்தோரெல்லாம் துரோகிகழுமல்ல, புலிக்கொடியை பிடித்தவர்கள் எல்லாம் விடுதலைப் போராளிகழுமல்ல. இந்த உண்மையை உலகினில் படித்த, புத்தியீவிகள் நிரம்பிய ஈழத்தமிழர் லட்சக் கணக்கான மக்களைப் பலிகொடுத்தும் அறியவில்லையே.

    பிரிஎவ் என்பது பிரிட்டிஸ் தமிழ் பூல்ஸ் என்றால் மிச்சம் பொருந்தும்.

    துரை

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    இந்திய அதிகார உலகம் என்பது, இந்திய சட்டங்களை படித்து வளர்ந்த ஒரு தலைமுறையினர்!. சார்லஸ் பிலிப் பிரவுன்(1800), கலைஞர் தலையில் வைத்து கூத்தாடும் “பிரான்சிஸ் வைட் எல்லீஸ்((1777 – 1819), சர் வில்லியம் ஜோன்ஸ்(1746 – 1794),வாரன் ஹஸ்டிங்ஸ்(1732 – 1818), ஆகியோர் இந்திய சட்டமூலத்தை உருவாக்க முயன்ற போது, தங்களால் புரிந்துகொள்ள முடியாத இந்திய கலாச்சாரத்திற்கு கொடுத்த அடைமொழிதான் “பினவலண்ட் டெஸ்போட்டிஸம் (பண்பான சர்வாதிகாரம்)”!. அதாவது சீன கலாச்சரத்தை புரிந்துக் கொள்ள முடியாமல் “கன்பியுஷியானிஸம்” என்று அடைமொழி கொடுத்தது போல்!. இதில் காலனித்துவ “ராபர்ட் கிளைவ் அ முதலாம் ஃபேர்ன் கிளைவ்((1725 – 1774),காலத்தில் துவங்கிய “கிழக்கிந்திய கம்பெனியின்”, ”பிரிட்டிஷ் இறையாண்மை” 1864 ல் “இந்திய அடையாளத்தை” சட்ட மூலத்தில் ஒழித்துக் கட்டியது. தற்போதைய உலக மயமாக்கலில், அமெரிக்கா, இந்த மூலத்திலிருந்தே, (பினவலண்ட் டெஸ்போட்டிஸம், கன்பியூஷியானிஸம்) தரவுகளை முன் வைக்கிறது. அதாவது, ”உலகமயமாக்கல் அமெரிக்காவுடன்” கை கோர்த்திருக்கும் இந்திய அதிகாரவர்க்கம், தனது “மூலமாக” இந்திய? தேசிய உணர்வை கொண்டிருக்கவில்லை!. அமெரிக்க கலாச்சாரத்தின் “தரைத்தட்டலே”, பல பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளது. இதனுடைய நோக்கம் பற்றி பலர் பாசிட்டிவாக விவாதித்தாலும், இது காலனித்துவ தரவுகளை நடைமுறைபடுத்துவதால், இந்திய தூதுவராலயங்களில் இலங்கைத் தமிழர்கள் என்னதான் கெஞ்சினாலும், ஒரு “நியாய பூர்வமான அணுகுமுறைகள் போல்” “முள்ளியவாய்க்கால்கள் முகத்தில் அறையப்படுகின்றன”!. காலனித்துவ காலத்தில் இத்தகைய போக்குகளை ஆதரித்தவர்களே, இதற்கு இயல்பாக, ”உடல் மொழி ரீதியில்” ஆதரவை வெளிப்படுத்துகிறார்கள்!.

    Reply
  • londonboy
    londonboy

    அருட்குமார் அன்ரனிதாஸ் எங்கடை ஆளோ இல்லையோ என்று அறிக்கை விடுவது இருக்கட்டும் இப்ப போய் அரசுடன் இவர்கள் கதைத்துவிட்டு வந்தவிடயங்கள் மீதான பிரிஎவ்இன் அரசியற்பார்வை என்ன என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

    Reply
  • BC
    BC

    //கந்தையா – அதுசரி இவர்கள் உந்தத் துரோகிப்பட்டம் வழங்குவதுதான் தொழிலாய் இருக்கினமோ.. //

    இருப்பினம். அவர்களின் லாபம் தரும் தொழிலை விடுவார்களா! தமிழீழ போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த துரோகிகள் கே.பியும், கருணாவும் என்று அறிவித்துவிட்டு தமிழீழம் என்ற லட்சியத்தை வென்று எடுக்கும்வரை போராடுவோம் என்று சுருட்டல் தொடரும்.

    Reply
  • Mythili
    Mythili

    கே பியின் அழைப்பில் சென்றிருந்த டாக்டர் அருட்குமார் என்பவர் தமிழ் மக்கள் எல்லாரும் ஒரு கேணயர்களெ நினைத்து தமிழ் நெற்றுக்கு ஒரு பேட்டி அளித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    அதில் தான் இலங்கைப் புலனாய்வாளர்களை புலனாயப்போனதாக மாதிரி கதை விட்டுத் தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார்.

    இப்படியான சந்தர்ப்பவாதிகள் தமிழரைப் பிரதிநிதிப்படுத்துவதும்> இவர்களை சமூக தாபனங்களில் முக்கியத்துவம் குடுக்கும் நிலை எம்மவர் மத்தியில் இருக்கும்வரை நாம் முன்னேறுவது கடினதாகவே இருக்கும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //பிரிஎவ் என்பது பிரிட்டிஸ் தமிழ் பூல்ஸ் என்றால் மிச்சம் பொருந்தும்.- துரை //

    பிரிஎவ் தாங்கள் முட்டாள்களாகியிருந்தால் உங்கள் உதாரணம் பொருந்தியிருக்கும். ஆனால் பிரிஎவ் தம்மை நம்பிய மக்களையல்லவா முட்டாள்களாக்கியிருக்கின்றார்கள்.

    Reply