லண்டன் இல. தூதரகம் முன்பாக சண்டே லீடர் ஆசிரியரின் படுகொலைக்கு எதிரான போராட்டம் இன்று மாலை 4:30ற்கு : த ஜெயபாலன்

Alan_Johnsonசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை ஜனவரி 16 மாலை 4:30 மணிக்கு இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக கண்டனப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இக்கண்டனப் போராட்டத்தை தேசம்நெற், கொமிற்றி போர் வேக்கர்ஸ் இன்ரநசனல், எக்சைல் ஜேர்னலிஸ்ட் நெற்வேர்க் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. நேற்று ஜனவரி 15 பிரித்தானியப் பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் கண்டனப் போராட்டம் ஒன்றை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

சண்டே லீடர் ஆசிரியர் லசந்தா விக்கிரமதுங்காவின் படுகொலையைக் கண்டிக்கும் இந்தப் போராட்டத்தில்  தேசம்நெற் கட்டுரையாளர்கள் செய்தியாளர்கள் கருத்தாளர்கள் வாசகர்கள் கலந்துகொண்டு இலங்கை அரசின் ஊடக ஒடுக்குமுறைக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டும் என தேசம்நெற் கேட்டுக்கொள்கிறது.

லசந்த விக்கிரமதுங்காவின் படுகொலை சர்வதேச கண்டனத்தை இலங்கை அரசுக்கு எதிராகத் திருப்பி உள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளின் மீதான தனது வெற்றிக்குள் லசந்தவின் படுகொலையை இலங்கை அரசு மறைக்க முற்பட்டாலும் அதனையும் மீறி சர்வதேச ஊடகங்களில் லசந்தவின் படுகொலையில் இலங்கை அரசை அம்பலப்படுத்தி உள்ளது.

Chronicle of a death foretold
The Economist Jan 15th 2009

As the Tamil Tigers face defeat, Sri Lanka’s freedoms are also under threat

He was a brave campaigning journalist. And like too many brave campaigning journalists in Sri Lanka, he is now dead. But at least from the grave he has left an eloquent warning to the government, led by a man he called “friend”, President Mahinda Rajapaksa: that as the army grinds relentlessly towards final triumph in a 25-year civil war, the very foundations of the democratic free society it should be fighting for are in jeopardy.

http://www.economist.com/opinion/displayStory.cfm?story_id=12932312&source=hptextfeature

‘We know who is behind my death’: Sri Lankan editor continues fight from grave
The Guardian, Jonathan Steele, Tuesday 13 January 2009

It is being called “the voice from the grave”, a remarkable and accusing article written by one of Sri Lanka’s best-known journalists and published days after he was murdered in a hail of gunfire.
In a 2,500 word editorial, Lasantha Wickrematunge foresees his own death, hints at the identity of the killers from within the ranks of Sri Lanka’s government, and lays out a gripping and detailed account of what he sees as his country’s descent into persecution of citizens and flouting of democracy.

http://www.guardian.co.uk/world/2009/jan/13/sri-lankan-journalist-sunday-leader

“Today is a day when one remains speechless. Maybe we should have spoken before this. Today it is too late. Today is a day when humanity has lost a major voice of truth. But he will live in his work.”
German ambassador Jurgen Weerth

Grievous blow to Sri Lankan media
BBC News – By Alastair Lawson, 8 January 2009
 
The murder of Sri Lankan newspaper editor Lasantha Wickramatunga highlights the claim often made by human rights groups that the country is one of the most dangerous places in the world for journalists to operate.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7817793.stm

Dying for Journalism: Lasantha Wickrematunge of Sri Lanka
TIME – By Jyoti Thottam / Colombo Thursday, Jan. 08, 2009

His death has galvanized the growing anger among the press and other civil-society groups in Sri Lanka about restrictions on free expression in the country and intimidation of the media.

http://www.time.com/time/world/article/0,8599,1870440,00.html

சண்டே லீடர் ஆசிரியரின் படுகொலையை தேசம்நெற் வன்மையாகக் கண்டிக்கிறது.
தேசம்நெற் 8 ஜனவரி 2009

இலங்கை அரசாங்கம் தொடர்பாகவும் தற்போது முன்னெடுக்கப்படும் யுத்தம் தொடர்பாகவும் மிகுந்த விமர்சனத்தைக் கொண்டிருந்த லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையை தேசம்நெற் வன்மையாகக் கண்டிக்கிறது. ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் இலங்கையில் நாளாந்த நிகழ்வுகளாகி வருகின்றது. ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடுகளில் ஒன்றாக இலங்கையும் தற்போது உள்ளது என்பதை லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளது.

http://thesamnet.co.uk/?p=6193

மேலுள்ளவை சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்காவின் படுகொலையை சர்வதேச ஊடகங்கள் எவ்வாறு நோக்குகின்றன என்பதைக் காட்டுகின்றது. லசந்த விக்கிரமதுங்காவின் படுகொலை இலங்கையில் ஊடகங்களின் ஊடகவியலாளர்களின் நிலையை பிரதிபலித்து உள்ளது. ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இலங்கை குறிப்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு எவ்வளவு அபத்தானது என்பதனை தனது மரணத்திற்குப் பின்னும் தனது சமாதியில் இருந்து லசந்த விக்கிரமதுங்க நிரூபித்து உள்ளார்.

Protest_15Jan09லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு ஒரு வாரகாலத்தில் ஜனவரி 15 அன்று பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்திற்கு முன் அப்படுகொலையைக் கண்டிக்கும் கண்டனப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. லண்டனில் உள்ள பெரும்பாலான தமிழ் ஊடகங்களைச் சார்ந்த ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு தங்கள் சக ஊடகவியலாளனின் படுகொலையைக் கண்டித்தனர். ஒரு பேப்பர், லண்டன் குரல், லண்டன் உதயன், தீபம் பிபிசி, லண்டன் தமிழ் வானொலி, ரிபிசி, சண்றைஸ் வானொலி, தேசம்நெற் ஆகிய ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் உட்பட பலர் கலந்துகொண்டு இலங்கையின் ஊடக ஒடுக்கு முறைக்கு எதிரான கண்டணத்தை வெளிப்படுத்தினர்.

Ananthy_Pearl_On_Protestஎக்சைல் ஜேர்னலிஸட் நெற்வேர், ரிபொட்டேர்ஸ் வித்அவுட் போர்டர்ஸ், இன்ரநசனல் பெடரேசன் ஒப் ஜேர்னலிஸ்ட், இன்ரநசனல் அசோசியேசன் போர் ரமிழ் ஜேர்னலிஸ்ட் ஆகியன இக்கண்டனப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. தேசம்நெற் இப்போராட்டத்திற்கு தனது முழுமையான ஆதரவை வழங்கி இருந்தது.

இக்கண்டனப் போராட்டத்தில் கடந்த ஆண்டு காசாவில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த பிபிசி உலக செவை ஊடகவியலாளர் அலன் ஜோன்சனும் கலந்து கொண்டு லசந்த விக்கிரமதுங்காவின் படுகொலையைக் கண்டித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உயிராபத்தையும் பொருட்படுத்தாது தமது கடமையைச் செய்யும் சக ஊடகவியலாளர்களுக்கு தங்கள் தார்மீக ஆதரவை லண்டனில் வாழும் ஊடகவியலாளர்கள் வழங்கி இருந்தனர். கடுமையான குளிருக்கும் மத்தியில் இன மத பேதம் இன்றி வேறு வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் பல்வேறு கருத்து முரண்பாடுகளை உடையவர்களும் கலந்துகொண்டு லசந்தவின் படுகொலையைக் கண்டித்தனர்.

ஊடக ஒடுக்கு முறைக்கு எதிரான இப்போராட்டங்கள் உண்மைகளை உறங்க வைக்கும் இலங்கை அரசின் முயற்சிகளுக்கு தடைக்கற்களாக அமையும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • watch
    watch

    அட கடவுளே. உங்களுக்கு வன்னி மக்களைப் பற்றி கவலை இல்லையா?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ஐயா! வாச் பத்திரிக்கையாளன் சுந்தரத்தின் கொலையும் இப்படி வெளிநாடுகளில் கூட்டம்போட்டு கண்டித்திருந்தால் வன்னிமக்கள் இவ்வளவு துன்பப்பட்டிருப்பதற்கு இடமே இருந்திருக்காது ஐயர்மாரும் அறிவாளிகளும் எம்மைவிட்டு போயிருக்க மாட்டார்கள் இந்த பேரவலமே நடந்திருக்க மாட்டாது. புலம்பெயர்ந்த நாம் மாறியல்லவா கணக்கு போட்டு நடந்து விட்டோம். இனிமேலாவது பத்திரிக்கை சுகந்திரத்திற்கும் பேச்சு சுகந்திரத்திற்கும் கூட்டம் கூடுகிற சுகந்திரத்திற்கும் தொழில்சங்க சுகந்திரத்திற்கும் முன்னுரிமை கொடுங்கள். எந்த கொம்பனானாலும் தனிபட்டஒருவனின் வீராப்புகளை நிராகரியுங்கள். எப்படி பார்தாலும் அதுமக்களின் நலனில் இருந்து தோற்றம் பெற்றவையல்ல. இதற்கு புலிகளைவிட வேறு உதாரணம் தேவையா?.

    Reply
  • vanthiyadevan
    vanthiyadevan

    when ltte was killing tamil journalist what all theese people was doing including thaesamnet

    Reply